செய்திகள் :

"நாங்கள் போட்டி போடுவோம்; ஆனால் பொறாமைப்பட மாட்டோம்" - ரஜினிகாந்த் பதிலுக்கு கமல்ஹாசன் விளக்கம்

post image

நடிகர் ரஜினிகாந்த் இன்று காலை செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருந்தார். விஜய் மீது ரஜினிகாந்த் பொறாமைப்படுவதாகவும், விஜய் ஆட்சியமைக்கக் கூடாது என இரண்டு கட்சிகளை இணைக்க ரஜினிகாந்த் பேச்சு நடத்தியதாகவும் இணையத்தில் தகவல்கள் பேசப்பட்டன.

முதல்வர் ஸ்டாலின் - நடிகர் ரஜினி
முதல்வர் ஸ்டாலின் - நடிகர் ரஜினி

இது தொடர்பாக இன்று காலை செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் விளக்கமளித்திருந்தார்.

அதில் அவர் நகைச்சுவையாக, "ஒருவேளை கமல் முதல்வராகி இருந்திருந்தால், பொறாமைப்பட்டிருப்பேனோ என்னவோ" என்பதைச் சிரித்தபடி கூறியிருந்தார். இதற்கு கமல்ஹாசன் தற்போது பதில் தந்திருக்கிறார்.

இது குறித்துச் செய்தியாளர்களிடம் கமல்ஹாசன், "அதை அவர் சிரிப்புடன்தான் கூறினாரே தவிர, நாங்கள் இருவருமே ஒருவரை ஒருவர் பார்த்துப் பொறாமைப்பட்டது கிடையாது.

நாங்கள் போட்டி போடுவோம். ஆனால் பொறாமைப்பட மாட்டோம். நாம் சினிமா துறையில் இருக்கிறோம், ஒருவேளை நாங்கள் கிரிக்கெட் விளையாடி இருந்தாலும் இப்படித்தான் இருந்திருப்போம்" என்றவர், முதலமைச்சர் விஜய் ஆட்சியில் எதிர்பார்க்கப்படும் விஷயங்கள் குறித்த கேள்விக்கு, "இப்போது இரண்டு நாள்களில் எதையும் கூறிவிடுவது ஜோதிடமாகத்தான் இருக்க முடியும்.

Kamal Haasan - கமல் ஹாசன்
Kamal Haasan - கமல் ஹாசன்

ஆறு நாள்களில் சொல்லக்கூடியதும் அப்படித்தான் இருக்க முடியும். 15 நாள்களிலும் அப்படித்தான் இருக்க முடியும். அதற்கு அவருக்கு ஆறு மாதங்கள் அவகாசம் கொடுக்க வேண்டும் அல்லவா? புதியவர்கள் பலர் வந்திருக்கிறார்கள்.

அதனால், புதியவர்கள் என்பது அரசியலுக்குப் புதியவர்கள் கிடையாது. சுதந்திர இந்தியா கிடைத்தபோது எல்லாருமே புதிய அமைச்சர்கள்தான். எனவே, புதியவர்களை நாம் குறைவாக எடை போடவும் வேண்டாம்.

அதே நேரத்தில் அதிகமாக எதிர்பார்க்கவும் வேண்டாம். என்ன நடக்கும் என்பதைப் பார்ப்போம். நீங்கள்தானே வாக்குச் செலுத்தினீர்கள்? அப்படியென்றால் அது நல்லபடியாக நடக்கிறதா என்பதை நீங்கள்தான் கவனிக்க வேண்டும். நாங்களும் கண்காணிப்போம்" எனக் கூறியிருக்கிறார்.

K Rajan: அடையாறு ஆற்றில் குதித்து தயாரிப்பாளர் கே. ராஜன் தற்கொலை? போலீஸ் தீவிர விசாரணை

தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளர் கே. ராஜன் இன்று காலமானார். 85 வயதான கே. ராஜன். 'பிரம்மசாரிகள்', 'நினைக்காத நாளில்லை' போன்ற திரைப்படங்களைத் தயாரித்தவர்.K Rajanதயாரிப்பு மட்டுமின்றி, 'நம்ம ஊரு மாரிய... மேலும் பார்க்க

TVK: "அனுபவமற்றவரிடம் நம் குறைகளை எப்படிச் சொல்வது?" - அமைச்சர் ராஜ்மோகன் குறித்து விஷால் கேள்வி

முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றபோதே, அவருடன் 9 சட்டமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்களாகப் பதவியேற்றுக்கொண்டனர். பதவியேற்று ஒரு வாரத்திற்குப் பிறகும் அவர்களுக்கான இலாகா ஒதுக்கீடு செய்யப்படவில்லை என விமர்சனங்... மேலும் பார்க்க

"நான் அறுவை சிகிச்சை செய்துகொண்டதாகப் பேசினார்கள்; ஆனால்.." - Fitness பயணம் குறித்து கீர்த்தி சுரேஷ்

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மொழிகளில் அதிரடியான லைன் அப்களை கையில் வைத்திருக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ். சமீபத்தில், இயக்குநர் மிஷ்கினுடன் இவர் நடிக்கும் 'சத்யவான் சாவித்ரி' படத்தின் அறிவிப்பு ... மேலும் பார்க்க

"இந்த நிமிடம் வரை சூரி எங்களுக்கு உதவல" - 'பூ காய் கனி' பட இயக்குநர் வெற்றிவீரன் ஆதங்கம்

இயக்குநர் வெற்றிவீரன் 'பூ காய் கனி' என்ற படத்தை இயக்கியிருக்கிறார். இந்தப் படத்தில் மிதுன் சக்கரவர்த்தி, சந்தோஷ் நம்பிராஜன், மானசி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். விரைவில் இப்படம் வெளியாகவுள்ள நிலையில் செய... மேலும் பார்க்க

விஜய் குறித்த மோசமான கேள்வி; "ஊடகச் சந்திப்புகள் நாகரிகமான முறையிலும் இருக்கணும்" - மாளவிகா கண்டனம்

நடிகர் மாளவிகா மோகனன் தற்போது 'சர்தார் 2', 'பாக்கெட் நாவல்' என இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு நிகழ்ச்சிக்காக சென்னை வந்திருந்த அவர் செய்தியாளர்களிடம் பேசியிருந்தார்.... மேலும் பார்க்க

"விஜய் மீது எனக்கு பொறாமையா? அப்படித் தரம் கெட்ட ஆள் நான் கிடையாது" - ரஜினிகாந்த் பளீச் பேச்சு

ரஜினிகாந்த் தற்போது, 'ஜெயிலர் 2' படத்தை முடித்துவிட்டார். அடுத்தடுத்தாக அவர் ராஜ்கமல் நிறுவனத்தில் கமிட் செய்திருக்கும் படத்தில் நடிப்பதற்குத் தயராகிக் கொண்டிருக்கிறார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல... மேலும் பார்க்க