செய்திகள் :

நாங்குநேரி இரட்டைக் கொலை: `முதலமைச்சர் ஸ்டாலின் தூக்கத்தில் இருந்து எழுவாரா?' - விஜய் கேள்வி!

post image

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியை அடுத்த கடம்போடு வாழ்வு கிராமத்திற்கு 9 பேர் கொண்ட மர்ம கும்பல் நேற்று இருசக்கர வாகனங்களில் வந்தனர். அவர்கள் போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த இருவரை வழிமறித்து அரிவாளால் வெட்டிய அந்த கும்பல், அவர்களது வாகனத்தையும் பறித்துச் சென்றது. இது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பின்னர் அந்தக் கும்பல் நாங்குநேரி பெரும்பத்துக் கிராமத்திற்குச் சென்றது. அங்கு ஒரு டீக்கடை மீது பெட்ரோல் குண்டு வீசிய அந்தக் கும்பல், பீதியடைந்து ஓடிய மக்களை விரட்டிச் சென்று சரமாரியாக தாக்கியது. இந்த சம்பவத்தில் வடமாநிலத் தொழிலாளி உள்பட இருவர் படுகொலை செய்யப்பட்டனர்.

தவெக தலைவர் விஜய்
தவெக தலைவர் விஜய்

இது தொடர்பாக காவல்துறை 6 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது. அவர்கள் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தன் எக்ஸ் பக்கத்தில், ``திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி அருகே பெரும்பத்து கிராமத்தில் நேற்றிரவு இருசக்கர வாகனங்களில் சென்ற 9 பேர் கொண்ட கும்பல், சாலையில் சென்றவர்கள், டீக்கடை அருகே நின்றவர்கள் மீது ஆயுதங்களால் சரமாரியாகத் தாக்கியதில் இருவர் உயிரிழந்தனர். 5 பேர் வெட்டுக் காயம் அடைந்தனர் என்று வெளியான செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. இந்தக் கொலைவெறித் தாக்குதல், கடும் கண்டனத்திற்கு உரியது.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதோடு, படுகாயம் அடைந்தவர்கள் விரைந்து குணமடைய விழைகிறேன். உலக நாடுகளுடன் போட்டி போடும் ஓர் ஆட்சியில் பொதுமக்களின் உயிருக்கு உத்தரவாதம் எங்கே? இந்தியாவின் டாப் மாநிலத்தில் காவல் துறைக்குச் சட்டம் ஒழுங்கு டிஜிபி எங்கே? நம்பர்1 மாநிலம் என்று தம்பட்டம் அடித்துக்கொள்ளும் ஆட்சியின் சட்டம் ஒழுங்கு லட்சணம் இதுதானா? போதைக் கும்பல் சுதந்திரமாக வன்முறை நிகழ்த்த இடம் தந்த பொறுப்புமிக்க ஆட்சி இதுதானா?

தவெக விஜய்
தவெக விஜய்

பொதுமக்கள் ஒவ்வொரு நாளும் புலம்பித் தவித்துக் கோபத்தில் கொந்தளித்துக் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆட்சியே முடியப் போகிறது. இப்போதாவது காவல் துறையைக் கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் தூக்கத்தில் இருந்து எழுவாரா? மக்கள் நலன்களை, அவர்தம் பாதுகாப்பைத் துளியும் யோசிக்காத இந்தத் தி.மு.க. ஆட்சி, வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தூக்கி எறியப்படுவது உறுதி உறுதி உறுதி." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

லாரி லாரியாக இறங்கும் டிரம்கள் - கோவை தொண்டாமுத்தூரில் அடுத்த பரிசை இறக்கிய வேலுமணி!

கோவை மாவட்டத்தில் எப்படியாவது வெற்றி பெற திமுக தீவிரம் காட்டுகிறது. கோவையில் தங்களின் செல்வாக்கை நிரூபிக்க அதிமுக திட்டமிட்டு வருகிறது. கோவையில் அதிமுகவின் வெற்றியை வேலுமணி தன்னுடைய கௌரவ பிரச்னையாகவே ... மேலும் பார்க்க

சிதம்பரம் கொண்டு வந்த `சீக்ரெட்' மெசேஜ்! உற்சாகத்தில் தி.மு.க - `கை'கொடுக்குமா சிதம்பர முயற்சி?

காங்கிரஸ் - தி.மு.க இடையே நிலவி வந்த சிக்கலுக்கு, சிதம்பரம் வழியாக முடிவு எடுக்கபட்டுவிட்டது என்கிற தகவலை காங்கிரஸ் வட்டாரத்தினர் சிலர் உறுதிபடுத்தியுள்ளனர். ஸ்டாலினுக்கு தான் சொல்லி விரும்பிய மெசேஜை ... மேலும் பார்க்க

'திடீரென முதல்வர் ஸ்டாலினை சந்திக்கும் ப.சிதம்பரம்?' என்னவாகிறது திமுக - காங்கிரஸ் கூட்டணி?

திமுக - காங்கிரஸ் கூட்டணியில் தொடர் இழுபறி நிலவி வரும் நிலையில் காங்கிரஸின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் முதல்வர் ஸ்டாலினை சந்திக்கவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.ஸ்டாலின்திமுக - காங்கிரஸ் கூட்டணி இட... மேலும் பார்க்க