செய்திகள் :

நாத்தனார்களின் திருமணம் மீறிய தொடர்பு; கர்ப்பிணி கொடூரக் கொலை - மாமியார் உட்பட சிக்கிய 6 பேர்

post image

புதுக்கோட்டை மாவட்டம் மேட்டுப்பட்டி இந்திரா நகரைச் சேர்ந்தவர் பாண்டித்துரை (35). நெடுஞ்சாலை ஒப்பந்தப் பணிகளை மேற்கொண்டுவரும் இவருக்கு, 21 வயதான சந்தியா என்பவருடன் ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடந்து முடிந்தது. தற்போது சந்தியா 6 மாத கர்ப்பிணியாக, வயிற்றில் வளரும் பச்சிளங் குழந்தையின் வருகைக்காகக் காத்திருந்தார். ஆனால், அவருக்கு விதி வேறு வடிவத்தில் வந்துவிட்டது.

இது குறித்து புதுக்கோட்டை கணேஷ் நகர் காவல்துறை வட்டாரத்தில் நாம் விசாரித்தபோது, அவர்கள் நம்மிடம் பகிர்ந்த தகவல்கள் திடுக்கிட வைப்பதாக இருந்தன...

"பாண்டித்துரையின் சகோதரிகளான பாண்டி மீனா (33), பொற்கொடி (29) ஆகிய இருவரும் கணவர்களுடன் ஏற்பட்ட மனக்கசப்பால் பிரிந்து வந்து, சகோதரன் பாண்டித்துரையின் வீட்டிலேயே தங்கியிருந்துள்ளனர். அங்கே தங்கியிருந்த நாட்களில், இருவருக்கும் சில வாலிபர்களுடன் தொடர்பு ஏற்பட்டிருக்கிறது.

அதேபோல, வரதட்சணை கேட்டும் வீட்டாருடன் அடிக்கடி தகராறு நடந்து வந்த நிலையில், நாத்தனார்கள் பாண்டி மீனா, பொற்கொடி மற்றும் உறவினர் கனிமொழி ஆகியோரின் இந்த திருமணம் மீறிய உறவுகள் குறித்து சந்தியாவுக்குத் தெரியவந்துள்ளது. அதை சந்தியா தனது கணவர் பாண்டித்துரையிடம் போட்டுடைக்கவே, குடும்பத்தில் பெரும் புயல் வெடித்திருக்கிறது. இதனால் ஆத்திரமடைந்த நாத்தனார்கள், சந்தியாவைத் தீர்த்துக்கட்ட நள்ளிரவுச் சதித்திட்டம் தீட்டியுள்ளனர்" என்றனர்.

காவல்துறை வட்டாரத்தில் மேலும் நம்மிடம் பேசுகையில், "கடந்த செப்டம்பர் 29-ம் தேதி பாண்டித்துரை பணி நிமித்தமாக ஈரோட்டுக்குக் கிளம்பிச் சென்றுவிட்டார். வீட்டின் பாதுகாப்பற்ற இந்தச் சூழலையே தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனர் நாத்தனார்கள்.

கடந்த செப்டம்பர் 30-ம் தேதி அதிகாலை, வீட்டில் சந்தியா ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது, நாத்தனார்கள் பாண்டி மீனா, பொற்கொடி, மாமியார் பானுமதி (50) மற்றும் உறவினர்களான கனிமொழி (27), செல்வி (38), கார்த்தி (24) ஆகிய 6 பேரும் சந்தியாவின் அறைக்குள் சத்தமில்லாம் நுழைந்துள்ளனர்.

அலறக்கூட முடியாதபடி சந்தியாவின் முகத்தில் தலையணையை வைத்து பலமாக அமுக்கியுள்ளனர். மாமியாரும் உறவினர்களும் பிடித்துக்கொள்ள, நாத்தனார்கள் இருவரும் சந்தியாவின் கழுத்தைத் துப்பட்டாவால் இறுக்கி முறுக்கிக் கொடூரமாகக் கொலை செய்துள்ளனர்" என்று விவரித்தனர்.

போலீஸ் வட்டாரம் மேலும் தொடர்ந்தபோது, "கொலை செய்து முடித்ததும், அதனை இயற்கை மரணமாக மாற்ற ஒரு நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர். சந்தியாவின் வாயிலும் மூக்கிலும் பிரெட்டைக் குத்தித் திணித்து, தொண்டையில் பாலை ஊற்றியுள்ளனர்.

அதன் பின், 'பிரெட்டைப் பாலில் நனைத்து சாப்பிட்டபோது விக்கல் ஏற்பட்டு மூச்சுத்திணறி மயங்கி விழுந்துவிட்டாள்' என மாமியார் பானுமதி நாடகமாடியுள்ளார். உடனடியாகச் சந்தியாவை சிகிச்சைக்காகப் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். ஆனால், வழியிலேயே சந்தியாவின் உயிர் பிரிந்துவிட்டது" என்று தெரிவித்தனர்.

கணேஷ் நகர் காவல் நிலையப் போலீசார் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில், சந்தியாவின் உடற்கூறாய்வு அறிக்கை வந்த பின்னரே உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

"உடற்கூறாய்வு அறிக்கையில், சந்தியா பிரெட் சாப்பிட்டு மூச்சுத்திணறி இறக்கவில்லை... அவரது கழுத்து துப்பட்டாவால் நெரிக்கப்பட்டு, முகத்தில் தலையணையை அமுக்கிக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது உறுதியானது.

இதையடுத்து சந்தேக மரண வழக்கைக் கொலை வழக்காக மாற்றி, பாண்டித்துரையின் வீட்டாரைப் பிடித்து எங்கள் பாணியில் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினோம். விசாரணையில், திருமணம் மீறிய உறவு விவகாரத்தைத் தட்டிக்கேட்டதால் ஆத்திரமடைந்து, திட்டமிட்டுச் சந்தியாவைக் கொலை செய்ததை 6 பேரும் ஒப்புகொண்டனர்.

இதனையடுத்து:

பாண்டி மீனா (33) - நாத்தனார்

பொற்கொடி (29) - நாத்தனார்

பானுமதி (50) - மாமியார்

கனிமொழி (27) - உறவினர்

செல்வி (38) - உறவினர்

கார்த்தி (24) - உறவினர்

ஆகிய 6 பேரையும் உடனடியாகக் கைது செய்தோம். கார்த்தியை புதுக்கோட்டை மாவட்டச் சிறையிலும், மாமியார் மற்றும் நாத்தனார்கள் உட்பட 5 பெண்களைத் திருச்சி பெண்கள் தனிச்சிறையிலும் அடைத்துள்ளோம்" என்று காவல் துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாத்தனார்களின் திருமணம் மீறிய தொடர்பை அம்பலப்படுத்திய ஒரே காரணத்திற்காக, 6 மாதக் கர்ப்பிணியின் உயிரைப் பறித்த இந்தச் சம்பவம் புதுக்கோட்டை வட்டாரத்தையே உலுக்கியுள்ளது!

Flydubai: 'கத்தியால் அல்ல' - இந்திய விமானி எப்படித் தாக்கப்பட்டார்? UAE சொல்வது என்ன?

ஃபிளைதுபாய் சம்பவத்தில் இந்திய விமானி ஸ்மித் மச்சாரை ஓமனைச் சேர்ந்த விமானியான ஹமாம் அல்ஹமாமி கத்தியால் குத்தினார் என்று முன்பு கூறப்பட்டது. விமானத்திற்குள் அதுவும் காக்பிட்டிற்குள் எப்படிக் கத்தி அனும... மேலும் பார்க்க

கடனை அடைக்க நண்பர்களுடன் சேர்ந்து கடத்தல் நாடகம்! - தந்தையிடம் ரூ.90 லட்சம் பறிக்க முயன்ற மகன்

பெங்களூருவை சேர்ந்தவர் மணீஷ். சில நிதி பரிவர்த்தனைகளுக்காக கடக் செல்வதாக கூறி விட்டு மணீஷ் பெங்களூரில் உள்ள தனது வீட்டை விட்டு இரவு 11.40 மணிக்கு வெளியேறினார். மேலும் காலையில் மீண்டும் அழைப்பதாக தனது ... மேலும் பார்க்க

உ.பி: பெண்ணாக மாற அறுவை சிகிசைக்கு விரும்பிய மகன் - எதிர்த்த தாயை அடித்து கொன்ற மகன்! | அதிர்ச்சி

பிறப்பால் சிலருக்கு ஹான்மோன் சிக்கல்கள் இருப்பது வழக்கம். அது போன்ற ஹார்மோன் சிக்கல் இருப்பவர்கள் ஆணாக இருப்பவர்களுக்கு பெண்களுக்கான குணமும், பெண்ணாக இருப்பவர்களுக்கு ஆண்களுக்கான குணமும், நடவடிக்கைகளு... மேலும் பார்க்க

ஆண் நண்பருடன் ஹோட்டலுக்கு சென்ற மருத்துவ கல்லூரி மாணவி - பிணமாக மீட்கப்பட்ட அதிர்ச்சி

தெலங்கானா மாநிலம் ஹனம்கொண்டா மாவட்டத்தில் உள்ள ஒரு மருத்துவக் கல்லூரியில் கோமதி ஸ்ரீஜனா என்ற பெண் குழந்தைகள் மருத்துவத்தில் முதுகலைப் படிப்பு படித்து வந்தார். கடந்த இரண்டு நாட்களாக ஸ்ரீஜனாவைத் தொடர்பு... மேலும் பார்க்க

சென்னை: பிரபல ரௌடியை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த போலீஸ்; காட்டுப்பகுதியில் என்ன நடந்தது?

சென்னை தாம்பரத்தை அடுத்த மாடம்பாக்கம் வள்ளலார் நகரைச் சேர்ந்தவர் முகமது சதாம் (29). ஏ பிளஸ் ரௌடியான இவர் மீது 20-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. கஞ்சா விற்பனையிலும் இவர் ஈடுபட்டு வந்... மேலும் பார்க்க

கொலைகள்... திருட்டுகள்... பாலியல் புகார்கள் - தொடரும் குற்றங்கள்... திணறும் குளித்தலை காவல்துறை

கரூர் மாவட்டம், குளித்தலை துணை கண்காணிப்பாளர் எல்லைக்குட்பட்டு 7 காவல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் சில காவல் நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில்தான் கடந்த நான்கு மாதங்களாகக் கொலை, திருட்டு, பால... மேலும் பார்க்க