செய்திகள் :

'நானே மாடுபிடி வீரர்தான்...!' - சட்டமன்ற ஜல்லிக்கட்டு பேச்சு பற்றி எம்.எல்.ஏ கருப்பையா!

post image

'இளைஞர்களை சீரழிக்கும் ஜல்லிக்கட்டு விளையாட்டு' என தவெக எம்.எல்.ஏ கருப்பையா சட்டமன்றத்தில் பேசியிருந்தார். சமூகவலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வரும் அவரின் பேச்சுக்கு ஆதரவும் எதிர்ப்பும் எழுந்து வருகிறது. இந்நிலையில், அவரையே தொடர்புகொண்டு இந்த பேச்சு குறித்து கேட்டோம்.

கருப்பையா
கருப்பையா

எம்.எல்.ஏ கருப்பையா கூறியதாவது, 'ஜல்லிக்கட்டுக்கு எதிராக நான் ஏன் பேச வேண்டும்? நான் ஜல்லிக்கட்டுக்கு கோடிகளை கொட்டி மைதானம் கட்டியதைத்தான் எதிர்த்து பேசினேன். ஜல்லிக்கட்டு என்பது அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு என அந்தந்த ஊர்களில் அதன் பாரம்பரியம் மாறாமல் நடப்பது. ஊர் மக்கள் திரண்டு நிற்க வாடிவாசலில் இருந்து பாய்ந்து வரும் காளையை இளைஞர்கள் திமிலை பிடித்து அடக்குவதுதான் அழகு. அதுதான் வீரம்.

இவர்கள் அந்த விளையாட்டின் தன்மையையே உணராமல் ஐரோப்பிய நாடுகளில் நடக்கும் ஆட்டத்தை போல வட்ட வடிவில் மைதானம் கட்டி வைத்திருக்கிறார்கள். அது இளைஞர்களின் வீரத்தை அவமதிக்கும் வகையில் இருக்கிறது. அப்படி மைதானம் கட்டியதற்கு பதிலாக செலவு செய்து சர்க்கரை ஆலையை திறந்திருந்தால் 5 மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருக்கும் என்றே கூறினேன். சொல்லப்போனால், நானே ஒரு மாடுபிடி வீரன்தான். இளம் வயதில் பல ஜல்லிக்கட்டு ஆட்டங்களில் கலந்திருக்கிறேன். மாடு குத்தி கிழித்து போட்டுக் கொண்ட தையலெல்லாம் வீரத் தழும்பாக உடம்பில் இன்னமும் இருக்கிறது.

கருப்பையா
கருப்பையா

திமுக ஆட்சிக் காலத்தில் ஜல்லிக்கட்டுக்கு தடை என வந்தபோது, ஜெயலலிதா அம்மாவுக்கு கடிதம் எழுதி உயர்நீதிமன்றத்தில் வழக்கு போட்டு 84 நிபந்தனைகளுடன் ஜல்லிக்கட்டை நடத்தியிருக்கிறேன். மேலும், எங்களின் தவெக இளைஞர்களின் சக்தியால் வென்ற கட்சி. நான் ஜல்லிக்கட்டுக்கு எதிராக எப்படி பேசுவேன். அவையில் எனக்கு கொஞ்சம் கூடுதல் நேரம் கிடைத்திருந்தால் தெளிவாக பேசியிருப்பேன்' என்றார்.

தமிழ்நாட்டில் பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவு; ஆளுநரைச் சந்தித்த JCD பிரபாகர் - என்ன பேசினார்கள்?

தமிழ்நாட்டில் தவெக அரசின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து முடிந்துள்ளது. இந்தக் கூட்டத்தொடரில் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகருக்கு அரசியல் கட்சியினர் மற்றும் மக்களிடையே பாராட்டுகள் கிடைத்தன. இன்று சென்ன... மேலும் பார்க்க

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: தனித்துக் களமிறங்கும் கம்யூனிஸ்ட் கட்சிகள்! - யார் எங்கே?

வருகிற அக்டோபர் 6-ம் தேதி, தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரத்தில் இடைத்தேர்தல் நடக்கவிருக்கிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில், இந்த இரு தொகுதிகளிலும் அதிமுக வென்றிருந்தது. மதுராந்தகத்தில் மரகதம... மேலும் பார்க்க

BRICS: "இன்று உலகளவில் பதற்றங்கள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன" - மோடி பேச்சு

டெல்லியில் நடக்கும் பிரிக்ஸ் மாநாட்டின் நிறைவு நாள் இன்று. மாநாட்டில் இன்று இந்தியப் பிரதமர் மோடி காலநிலை மாற்றம் குறித்து, “இந்திய நாகரிகத்தில், இயற்கை அன்னையாகப் போற்றப்படுகிறது. பல நூற்றாண்டுகளாகவே... மேலும் பார்க்க

"தீமைகள் எந்த ரூபத்தில் தமிழகத்திற்கு வந்தாலும் அது தீயசக்தி திமுகவால் மட்டுமே!” - நிர்மல் குமார்

மிசா சட்டத்தின் கீழ் கைதான திமுக தலைவர் ஸ்டாலினை அவதூறாக பேசியதாக, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் மற்றும் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமாரை எதிர்த்துத் திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போ... மேலும் பார்க்க

"நீங்கள் திருந்தாவிட்டால் திருத்தப்படுவீர்கள்" - தவெகவிற்கு ஆ.ராசா எச்சரிக்கை

தமிழ்நாடு சட்டப்பேரவையில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் திமுகத் தலைவர் ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டது குறித்துச் சர்ச்சையாகப் பேசியிருந்தார். விஜய்யின் இந்தப் பேச்சிற்கு எதிர்ப்புத் தெ... மேலும் பார்க்க

"பாஜக-வை எதிர்க்க பயப்படும் தவெக; பாராட்டியாவது கருத்து சொல்லலாம்!" - தோழர் பாலபாரதி கிண்டல்!

சட்டமன்றக் கூட்டத்தொடரில், காவல்துறை மானியக் கோரிக்கையின்போது முதல்வர் அளித்த ஆவேச உரை, அரசியல் அரங்கில் பலத்த சர்ச்சையையும் விமர்சனத்தையும் உருவாக்கியிருக்கிறது. இந்த நிலையில், த.வெ.க அரசுக்கு ஆதரவு ... மேலும் பார்க்க