செய்திகள் :

``நான் சங்கியா, காங்கிரஸா? இல்லை, நான் இவள்" - சோனம் வாங்சுக்கின் மனைவி பதில்

post image

நீட் வினாத்தாள் கசிவிற்குப் பொறுப்பேற்று, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று இந்திய செயற்பாட்டாளர் சோனம் வாங்சுக் 26 நாள்கள் உண்ணாவிரதப் போராட்டம் இருந்தார்.

அவர் உடல்நிலை மோசமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், மத்திய அமைச்சர்கள் ஜே.பி.நட்டா, ஜித்தேந்திர சிங் பேசிய பின், உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட்டார் சோனம் வாங்சுக்.

இந்தச் சம்பவத்திற்குப் பிறகு சமூக வலைதளங்களில் சோனம் வாங்சுக்கையும், அவரது மனைவியையும் 'சங்கி' என்று கூறி விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

சோனம் வாங்சுக் மனைவி கீதாஞ்சலி
சோனம் வாங்சுக் மனைவி கீதாஞ்சலி
இதற்குப் பதிலளிப்பதுபோல, சோனம் வாங்சுக்கின் மனைவி கீதாஞ்சலி ஆங்மோ தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்...

"நான் பா.ஜ.க-வும் இல்லை, காங்கிரஸும் இல்லை. சங்கியும் இல்லை, கம்யூனிஸ்ட்டும் இல்லை. இடதுசாரியும் இல்லை, வலதுசாரியும் இல்லை.

சமதர்மவாதியும் இல்லை, முதலாளித்துவவாதியும் இல்லை. தாராளவாதியும் இல்லை, பழமைவாதியும் இல்லை.

தலித்தும் இல்லை, பிராமணரும் இல்லை. சமணரும் இல்லை, பௌத்தரும் இல்லை, இந்துவும் இல்லை. பஞ்சாபியும் இல்லை, ஒடியாவும் இல்லை, லடாக்கியும் இல்லை.

நான் 'இவள்'

நான் இவர்கள் அனைவருக்கும், அதற்கு மேலும்கூட. அனைத்துக் கோட்பாடுகளுக்கும் ("isms") அப்பாற்பட்டவள். எதிலிருந்தும் சிறந்ததை எடுத்துக்கொண்டு, தேவையில்லாததை விட்டுவிடுபவள்.

மனிதனால் உருவாக்கப்பட்ட குறுகிய எல்லைகளுக்குள் நம்மை நாமே அடைத்துக்கொள்ளும்போது, நமது எல்லையற்ற ஆற்றலை நாமே குறைத்துக்கொள்கிறோம்.

நமது உண்மையான அடையாளம் அரசியல், சமூகம், மதம் அல்லது எந்தவொரு கோட்பாட்டையும் சார்ந்ததல்ல. அது வெறும் உணர்வு நிலையின் வடிவம் மட்டுமே" என்று பதிவிட்டுள்ளார்.

மதுரை: `எந்த layout வந்தாலும் என்னிடம் அப்ரூவல் வாங்கிய பிறகே அனுமதி'- எம்எல்ஏ கார்த்திகேயன்

மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆலத்தூர் ஊராட்சியில் சுதந்திர தினத்தையொட்டி நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் த.வெ.க சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் கலந்துகொண்டு பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர்: 88 மணி நேர தாக்குதலின் ரகசியங்களை முதன்முறையாக உடைத்த அஜித் தோவல்!

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா நடத்திய 88 மணி நேர ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கை குறித்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (NSA) அஜித் தோவல் முதன்முறையாக விரிவாக பேசியிருக்கிறார். ... மேலும் பார்க்க

சுட்டுக் கொல்லப்பட்ட தமிழர்கள்: ``தமிழ்நாடு அரசு கண்டனம் தெரிவிக்க வேண்டும்" - சிபிஎம் சண்முகம்

கர்​நாடக மாநிலம், சாம்​ராஜநகர் மாவட்​டத்​தில் உள்ள ஹனூர் அரு​கில், காவிரி வனவிலங்கு சரணால​யத்​துக்கு உட்​பட்ட ஷாக்யா வனப்​பகுதி உள்​ளது. நேற்று அதி​காலை 5 மணி​யள​வில் தோமை​யார்​பாளை​யத்தை ஒட்​டி​யுள்ள... மேலும் பார்க்க

அமுதன் கொலை: ``பெற்றோரின் புகாரைப் பெற மறுத்த குற்றச்சாட்டில் உண்மையில்லை" - அமைச்சர் சம்பத் குமார்

கோயம்புத்தூர் மாவட்டம், கோயம்புத்தூர்-பொள்ளாச்சி சாலையில் உள்ள பிரபல கல்வி நிறுவனத்தில் மூன்றாம் ஆண்டு படித்து வந்த மாணவர் அமுதன் தனது நண்பருடன் நடந்துச் சென்றுகொண்டிருந்தபோது அவர்களை வழிமறித்து சக மா... மேலும் பார்க்க

அமுதன் கொலை: ``இதற்கு பிறகும் வாயைத் திறக்காமல் மயக்கத்தில் இருக்குறீர்களே CM sir?"- அப்பாவு காட்டம்

கோயம்புத்தூர் மாவட்டம், கோயம்புத்தூர்-பொள்ளாச்சி சாலையில் உள்ள பிரபல கல்வி நிறுவனத்தில் மூன்றாம் ஆண்டு படித்து வந்த மாணவர் அமுதன் தனது நண்பருடன் நடந்துச் சென்றுகொண்டிருந்தபோது அவர்களை வழிமறித்து சக மா... மேலும் பார்க்க