செய்திகள் :

`நான் பாட்டியைக் கொன்னுட்டேன்' - குடிபோதையில் ரத்தம் சொட்டும் கத்தியுடன் கூச்சலிட்ட பேரன் கைது

post image

கேரள மாநிலம் ​திருவனந்தபுரம் மாவட்டம் வெட்டுதுறை புதுவல் பகுதியைச் சேர்ந்தவர் மெர்சி (65). இவர் கடினங்குளம் சான்னாங்கரை பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். இவரது மகள் பிந்து மற்றும் பிந்துவின் கணவர் ஆகியோர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர். பிந்துவின் மகனான ஷிபின் (23) மற்றும் அவரது சகோதரன் ஆகியோர் அவ்வப்போது பாட்டி மெர்சியின் வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம்.

மூதாட்டி மெர்சி அங்குள்ள மீன்பிடி வலை பின்னும் கூடத்தில் கூலி வேலை செய்து பேரன்களை கவனிப்பதுடன் தனது வாழ்க்கையையும் நடத்தி வந்துள்ளார். அவரது ​பேரன் ஷிபின் தொடர்ந்து மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்து தகராறு செய்வதை வாடிக்கையாகக் கொண்டிருந்தார். நேற்று காலையிலும் ஷிபின் மதுபோதையில் வீட்டிற்கு சென்றுள்ளார். காலை நேரத்திலேயே குடித்துவிட்டு வந்த பேரனை மெர்சி கண்டித்துத் திட்டியுள்ளார். ​இதனால் ஆத்திரமடைந்த ஷிபின், பாட்டி மெர்சியை சரமாரியாகத் தாக்கியதோடு, தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அவரது கழுத்தில் பலமாகக் குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த மூதாட்டி ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்தார்.

கைதுசெய்யப்பட்ட ஷிபின்

பாட்டியை குத்திய கையோடு, ரத்தம் சொட்டும் கத்தியைக் கையில் ஏந்தியபடி அருகிலிருந்த மீன்பிடி வலை பழுதுபார்க்கும் இடத்திற்கு ஷிபின் ஓடினார். அங்கிருந்த தொழிலாளர்களிடம், "நான் பாட்டியைக் கொன்னுட்டேன்" என்று கத்திக் கூச்சலிட்டுள்ளார். ​இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, மெர்சி ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பது தெரியவந்தது. உடனடியாக அவரை மீட்டு தாலுகா அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

கொலைச் செய்யப்பட்ட மெர்சி

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீஸார் மற்றும் தடயவியல் நிபுணர்கள் அங்கு தீவிர ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் மூதாட்டியின் உடல் உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கிடையே கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடிய ஷிபினை, ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்களின் உதவியுடன் கடினங்குளம் அருகே உள்ள ஒரு மதுபானக் கூடம் அருகே வைத்து போலீஸார் சுற்றி வளைத்து கைது செய்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி: முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடர்புடைய இடங்களில் சோதனை!

தி.மு.க முன்னாள் அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி மீது, கடந்த ஆட்சியில் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கியதில் பல கோடி ரூபாய் அளவில் முறைகேடு நடந்ததாக புக... மேலும் பார்க்க

`என் மகனை உண்மையிலேயே காதலிக்கிறாய் எனில் தூக்கில் தொங்கு' - விபரீத முடிவெடுத்த மாணவி; பெண் கைது

குஜராத் மாநிலம் அகமதாபாத்தை சேர்ந்த 17 வயது மாணவர், தான் படிக்கும் பள்ளியில் 12வது வகுப்பு படிக்கும் மாணவியை காதலித்து வந்தார். இருவரும் அடிக்கடி போன் மற்றும் மெசேஜ் மூலம் தங்களது காதலை வளர்த்து வந்தன... மேலும் பார்க்க

குருகிராமில் இளம்பெண் சென்ற பைக்கை மோதிய கார்; ராஜஸ்தானில் வைத்து இளைஞரைக் கைதுசெய்த போலீஸ்!

டெல்லி அருகில் உள்ள குருகிராமில் ஷிவானி என்ற பெண் இரு சக்கர வாகனத்தில் சென்றபோது கல்யான் என்பவர் காரில் அவரை விரட்டிச் சென்றார். ஒரு கட்டத்தில் அப்பெண்ணின் வாகனத்தின் மீது மோதிவிட்டு அங்கிருந்து காரில... மேலும் பார்க்க

காவல் நிலையத்தில் வைத்திருந்த 7 புகையிலை மூட்டைகளை காரில் கடத்திய ஏட்டு; கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்

கேரள மாநிலத்தில் `ஆப்ரேஷன் தூஃபான்' என்ற பெயரில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் சட்டவிரோத விற்பனைக்கு எதிராக போலீஸார் கடும் நடவடிக்கை எடுத்துவருகின்றனர். அதன் ஒரு பகுதியாக வயநாடு மாவட்டம், சுல்தான் பத்த... மேலும் பார்க்க

ஆம்னி பஸ்களில் பெண்களின் கைப்பையே குறி; தொடர் நகைக் கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையன் சிக்கியது எப்படி?

நெல்லை மாவட்டம்,பாளையங்கோட்டை பிலிப் காலனியைச் சேர்ந்தவர் ஜஸ்டின் சகாயராஜ். இவரது மனைவி ஜூலியட் லதா, தனியார் கல்லூரி உதவி பேராசிரியர். இருவரும் கடந்த ஆகஸ்ட் 27-ம் தேதி இரவு நெல்லையில் இருந்து சென்னைக்... மேலும் பார்க்க

`பணம் தர்றேன், கேஸ் கொடுக்காதீங்க…' - ஆசிரியரின் தொடர் பாலியல் அத்துமீறல்; அரசுப்பள்ளி மாணவி தற்கொலை

``விஷம் குடிச்சிட்டேன்… செத்துடுவேன்னு பயமா இருக்கும்மா…"கள்ளக்குறிச்சி மாவட்டம்,சின்னசேலம் பகுதியில் சுமார்400மாணவிகளுடன் இயங்கி வரும் அந்த அரசுப் பள்ளியில்,பத்தாம் வகுப்பு படித்து வந்தார் கவிதா (மாண... மேலும் பார்க்க