செய்திகள் :

`நீங்க வீட்டுக்கு வந்து என்னை நடிக்க கேட்டப்போ.!' - கனகாவுடன் சந்திப்பு; சுவாரஸ்யம் பகிரும் ராமராஜன்

post image

பல தீபாவளிகள் கடந்து ஓடி சாதனை படைத்த 'கரகாட்டக்காரன்' ஜோடியான ராமராஜன், கனகா இருவரும் நேற்று சந்ததது தான் கோடம்பாக்கத்தின் டாக் ஆஃப் த டவுன்.

'கரகாட்டக்காரன்' வெளியாகி 35 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இப்போதும் அந்த படத்தின் பாடல்கள் நமது பிளே லிஸ்ட்டில் ரிபீட் மோடில் இருக்கிறது. யூடியூப்பில் அதன் காமெடி களைகட்டுகிறது. இன்னமும் மீம்ஸில் கலக்குகிறது. அப்படிப்பட்ட 'கரகாட்டக்காரன் படத்தின் மூலம்தான் ஹீரோயினாக அறிமுகமானவர் கனகா. பழம் பெரும் நடிகை தேவிகாவின் மகள் ஆவார்.

'கரகாட்டக்காரன்' படத்திற்கு பின் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பெரிய ரவுண்ட் வந்தார் கனகா. அம்மா தேவிகாவின் மறைவு, தனிப்பட்ட பிரச்னைகளின் காரணமாக சினிமாவில் இருந்து ஒதுங்கியே இருந்தார். இந்நிலையில் நேற்று ராமராஜன் - கனகா சந்திப்பு நடந்திருக்கிறது. 'கரகாட்டக்காரன்' ரீரிலீஸ் குறித்த தகவல்களுக்கிடையே இந்த சந்திப்பு குறித்து `மக்கள் நாயகன்' ராமராஜனிடம் பேசினோம்.

கரகாட்டக்காரன்

''நேத்து தான் இந்த சந்திப்பு நடந்தது. கனகாகிட்ட ரொம்ப நாளாகவே பேசணும்னு நினைச்சிருந்தேன். அவங்களோட அம்மா இறந்த சமயத்தில் நான் ஷூட்டிங்கில் மாட்டிக்கிட்டதால, போக முடியாமல் போச்சு. சமீபத்துல அவங்களோட அப்பாவும் இறந்துட்டார். அதற்கும் என்னால போக முடியல. அதனால அவங்ககிட்ட உங்க வீட்டுக்கு வர்றேன்னு சொன்னேன். 'வீடு மாத்துறோம். அதனால நானே உங்க வீட்டுக்கு வந்துடுறேன் சார்'னு சொன்னாங்க.

கனகாவுக்கு அவங்களோட அம்மானா ரொம்பவே உயிர். உருகிடுவாங்க. அவங்க மறைவுக்கு பிறகு தனிமையில் இருக்க ஆரம்பிச்சிட்டாங்க. நேத்து அவங்க லன்ச்சுக்கு வீட்டுக்கு வர்றேன்னு சொன்னதும், 'உங்களுக்கு எது பிடிக்கும்? சாப்பிட எது செய்து வைக்கணும்'னு கேட்டேன். 'எது வேணாலும் ஓகே தான்'னு சொன்னங்க.

சந்திப்பில்

சாப்பிடும் போது பழைய நினைவுகளை பகிர்ந்துகிட்டோம். 'கரகாட்டக்காரன் 2' பண்ணலாம்னு என்கிட்ட கேட்டாங்க. நான் வேண்டாம்னு சொல்லிட்டேன். பார்ட் டு பண்றதுல எனக்கு விருப்பமில்ல. அதனால 'கரகாட்டக்காரன்' படத்தை ரீரிலீஸ் பண்ணப் போறதா சொல்லியிருக்காங்க. கூடவே கனகாவின் உறவினரும் இசையமைப்பாளருமான தருண்குமாரும் உடன் வந்தார். அந்த சமயத்தில் எனது அக்கா மகனும், என்னோட ரசிகர் மன்றத்துல பொறுப்பில் இருக்கற குமாரும் இருந்தார்.

கனகா ரொம்ப ஸ்பெஷல்

எனக்கு ஜோடியா நடிச்ச ஹீரோயின்கள்ல கனகா ரொம்ப ஸ்பெஷல். அவங்களோட நடிச்ச 'கரகாட்டக்காரன்', 'தங்கமான ராசா' இரண்டுமே சூப்பர் டூப்பர் ஹிட்.

நான் 'மண்ணுக்கேத்த பொண்ணு'னு ஒரு படம் இயக்கினேன். அந்த படத்தை பார்த்த பாரதிராஜா சார் என்னை கூப்பிட்டு, 'நீங்க யார்கிட்ட ஒர்க் பண்ணுனீங்க?'னு விசாரிச்சார். நான் இராமநாராயணன் சார்கிட்ட இருந்தேன்னு அவர்கிட்ட சொன்னேன். பாரதிராஜா சார் ஷாக் ஆகிட்டார். அவர்கிட்ட இருந்து வந்து என் ஸ்டைல்ல (கிராமத்து படம்) பண்ணியிருக்கீங்கனு சொல்லி பாராட்டினார்.

அவரது தயாரிப்பில் ஒரு படம் நான் இயக்கவும் எனக்கு அட்வான்ஸ் கொடுத்துட்டார். எனக்கு பிரமிப்பாகிடுச்சு. பாரதிராஜா சார் என்கிட்ட 'ஹீரோயினாக யாரை நடிக்க வைக்கப் போறீங்க?'னு கேட்டார்.

கரகாட்டக்காரன்

நான் அவரிடம் நீங்க முத்துராமன் சார் மகன் கார்த்திக்கை அறிமுகம் செய்தது போல, நான் தேவிகாவின் மகள் கனகாவை அறிமுகம் செய்ய போறேன்'னு சொன்னேன். உடனே ஓகேன்னு சொல்லிட்டார் பாரதிராஜா. அதன்பிறகு தேவிகா வீட்டுக்கு போய், கனகாவை நடிக்கக் கேட்டோம். ஆனா, 'கனகா இப்ப படிக்கிறா. இன்னும் கொஞ்சம் வருஷம் போகட்டும்'னு சொன்னாங்க. இந்த சம்பவத்தை கனகாகிட்ட சொன்னேன்.

உடனே கனகா 'நல்லா ஞாபகம் இருக்குது. நீங்க எங்க வீட்டுக்கு வந்து என்னை நடிக்க கேட்ட போது, வீட்டுக்குள் இருந்து நானும் என் தோழியும் கேட்டுக்கிட்டுதான் இருந்தோம்'னு சொன்னாங்க. அதன் பிறகு கங்கை அமரன் சார் 'கரகாட்டக்காரன்' எடுக்கும் போது, நான் கனகாவை நடிக்க வைக்க முயற்சி பண்ணும் விஷயத்தை சொன்னேன்.

இன்னொரு ஆச்சரியமான விஷயம். பொதுவா நான் காலையில் எழுந்ததும் ஜெயா டி.வி.யில் தேன் கிண்ணம் வைப்பேன். பழைய பாடல்கள் கேட்கப் பிடிக்கும். கனகா மதியம் வர்றேன்னு சொன்னாங்க. அந்த டைம்ல டி.வி.யை ஆன் செய்தால், 'நினைக்கத் தெரிந்த மனமே'னு தேவிகா அம்மா பாடும் பாடல் ஓடிக்கிட்டிருந்தது. இதை கனகாவிடம் சொன்னேன். அவங்க ரொம்ப சந்தோஷப்பட்டாங்க. இப்படி பல சுவாரஸியமான நினைவுகளை பகிர்ந்துகிட்டோம். இப்ப நல்லா இருக்காங்க. இனிமையான சந்திப்பாக இருந்தது.'' என்கிறார் ராமராஜன்.

சங்காரம்: "அவருக்காக நான் உயிரையே கொடுக்கணும்; படம் கொடுக்கிறதுல என்ன இருக்கு!" - நெகிழும் சசிகுமார்

ஜூனியர் விகடனில் இயக்குநர் இரா. சரவணன் எழுதிய 'சங்காரம்' தொடர், இப்போது முழு நாவலாக வெளிவந்திருக்கிறது.இந்தப் புத்தக வெளியீட்டு விழா நேற்றைய தினம் சென்னையில் நடைபெற்றது.சங்காரம் எம்.பி தமிழச்சி தங்கப்... மேலும் பார்க்க

Sreeleela : `ரத்னமாலா... ரத்னமாலா.!' - `பராசக்தி' நன்றி தெரிவிக்கும் விழாவில் நடிகை ஸ்ரீலீலா

Sreeleela | ஸ்ரீலீலாSreeleela | ஸ்ரீலீலாSreeleela | ஸ்ரீலீலாSreeleela | ஸ்ரீலீலாSreeleela | ஸ்ரீலீலாSreeleela | ஸ்ரீலீலாSreeleela | ஸ்ரீலீலாSreeleela | ஸ்ரீலீலாSreeleela | ஸ்ரீலீலாSreeleela | ஸ்ரீலீலா... மேலும் பார்க்க

Parasakthi: "'வெரி போல்ட் மூவி'னு ரஜினி சார் சொன்ன விஷ்; 5 நிமிடம் பாராட்டிய கமல் சார்!" - எஸ்.கே

சிவகார்த்திகேயனின் 'பராசக்தி' திரைப்படம் கடந்த 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. சுதா கொங்கரா இயக்கியிருக்கும் இப்படத்தில் ரவி மோகன் வில்லனாக நடித்திருக்கிறார். நடிகை ஸ்ரீலீலாவின் தமிழ் அறிமுக திர... மேலும் பார்க்க

Parasakthi: "டான்ஸுக்கு பாராட்டி இருக்காங்க; கேரக்டருக்கு பாராட்டு கிடைப்பது முதல் முறை" - ஸ்ரீலீலா

சிவகார்த்திகேயனின் 'பராசக்தி' திரைப்படம் கடந்த 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. சுதா கொங்கரா இயக்கியிருக்கும் இப்படத்தில் ரவி மோகன் வில்லனாக நடித்திருக்கிறார். நடிகை ஸ்ரீலீலாவின் தமிழ் அறிமுக திர... மேலும் பார்க்க

ஜனநாயகன்: `எனக்கு ரொம்பவே முக்கியமான நாள் அது; மன வலியோட காத்திருக்கேன்!' - அருண் குமார் ராஜன்

ஜனநாயகன் பொங்கலுக்கு ரிலீஸ் இல்லை என்பது கிட்டத்தட்ட தெரிந்து விட்டது. உச்ச நீதிமன்றத்தில் படத் தயாரிப்பு நிறுவனம் மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்திருக்கும் நிலையில், ரிசல்ட் என்ன என இந்த நிமிடம் வரை த... மேலும் பார்க்க

`விஷாலின் போன்கால்; எம்ஜிஆர் - சிவாஜி போட்டிபோல... திடீர் ரிலீஸ் மேஜிக்!' - இயக்குநர் நலன் குமாரசாமி

திடீரென 'வா வாத்தியார்' படமும் பொங்கலுக்கு களத்தில் குதித்து விட்டது. கடன் பிரச்னைகளால் தவித்து மூச்சுத்திணறிக் கொண்டிருந்த படம், ஜனவரி 14 வெளிவருகிறது. சந்தோஷத்தில் இருக்கிறார் இயக்குநர் நலன் குமாரசா... மேலும் பார்க்க