செய்திகள் :

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஏசி-யை இயக்குகிறீர்களா? - இது உங்களுக்கான பாதுகாப்பு வழிகாட்டல்!

post image

கோடையில் வியர்வை மழையில் நனைந்து கொண்டு இருக்கும் நாம், வெயில் தாக்கத்திலிருந்து தப்பிக்க ஏ.சி வாங்குகிறோம்.

அப்படி வாங்கும் ஏசியை கோடை காலத்தில் எப்படி பயன்படுத்துவது, நீண்ட காலமாக பயன்படுத்தாமல் தீடீரென இயக்கும் போது ஏற்படும் விளைவுகள்,தொழில்நுட்ப ஆலோசனைகள் பற்றி தமிழகத்தின் முன்னணி மின்சாதன விற்பனை நிறுவனத்தின் பிராண்டிங் துறையில் ஒரு விளம்பர வடிவமைப்பாளராகப் பணியாற்றி வரும் கணேசன் வழிகாட்டுகிறார்.

``ஏசியை நிறுவும்போது உங்கள் பகுதியில் மின்னழுத்த மாறுபாடுகள் அடிக்கடி இருக்கிறதா என்று பார்த்து, அதற்குத் தகுந்த நிலைப்படுத்தி தேவையா என்பதை முடிவு செய்ய வேண்டும்.

அவுட்டோர் யூனிட் வைக்கத் தகுந்த இடம் இருக்கிறதா என்பதையும், உங்கள் அறையில் சீலிங் செய்திருந்தால் அதற்கு ஏற்றவாறு எப்படிப் பொருத்த வேண்டும் என்பதையும் டெக்னீசியன்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்வது நல்லது. காப்பர் பைப் எக்ஸ்டென்ஷன் தேவைப்படுமா என்பதையும் சரிபார்க்க வேண்டும்.

விபத்துக்கான காரணங்கள்

நீண்ட நாட்களாக சர்வீஸ் செய்யாமல் இருப்பது, பொருத்தமான இடத்தில் நிருவாதது, தூசி அடைப்பு முக்கிய காரணமாக அமைகிறது. குளிரூட்டும் வாயுக்கள் சில எரி தன்மை கொண்டதாக இருப்பதால் அருகிலுள்ள சாதனங்களில் மின்கசிவு ஏற்படுவதை உடனே கண்டறிய வேண்டும். ஏசி அறையில் அடிக்கடி புகைப் பிடிப்பது, தீப்பெட்டி பயன்படுத்துவதும் அபாயத்திற்கு வழிவகுக்கும்.

மிக முக்கியமானது பராமரிப்பு..!

பராமரிப்பு என்பது ஏசிக்கு மிக மிக அவசியமான ஒன்று. நாம் எப்படி ஒரு இருசக்கர வாகனத்தைச் சரியான இடைவெளியில் சர்வீஸ் செய்கிறோமோ, அதேபோல் ஏசியையும் ஒவ்வொரு மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு ஒருமுறை முறையான பொதுப் பராமரிப்பு செய்ய வேண்டும்.

அப்போதுதான் எரிவாயு அளவு சரியாக இருக்கிறதா என்பதைச் சரிபார்க்க முடியும். நீண்ட நாட்கள் வெளியூர் சென்றுவிட்டுத் திரும்பினால், உள்ளே ஒட்டடைகள் இருக்க வாய்ப்புள்ளதால், முதலில் ஏசியைச் சிறிது நேரம் காலியாக ஓடவிட்டுப் பின்னர் அறையை மூடிப் பயன்படுத்தவும். ஏசியின் ஆயுள் நீடிக்க வேண்டுமானால் தினமும் ஒரு மணி நேரமாவது அதை இயக்குவது நல்லது."

AC: ஏசி-யின் நட்சத்திரக் குறியீடுகள் என்ன சொல்கின்றன? - 5 Star - 3 Star AC வித்தியாச கணக்கு என்ன?

ஏசி நட்சத்திர குறியீடு, அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று. ஒவ்வொரு நட்சத்திர குறியீடுகளும் எதனை கடத்துகிறது.? இது குறித்து தமிழகத்தின் முன்னணி மின்சாதன விற்பனை நிறுவனத்தின் பிராண்டிங் துறையில் ஒரு... மேலும் பார்க்க

AI யுகத்தில் ஏசியின் உருமாற்றம்!

கால ஓட்டத்திற்கு ஏற்ப விஞ்ஞான தொழில்நுட்பங்கள் வளர்ந்து வரும் இந்த காலத்தில் அனைத்து துறைகளிலும் தற்போது செயற்கை நுண்ணறிவு ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் இந்த ஏசி பயன்பாட்டிலும் தன்னுட... மேலும் பார்க்க

AC: ஏசி வாங்குறீங்களா? - 1 Ton, 1.5 Ton, 2 Ton... யாருக்கு எது பெஸ்ட்? - EB Billஐ எப்படி குறைப்பது?

ஏசி வாங்கும் போது கவனிக்க வேண்டியவைஇதோ கோடை வந்துவிட்டது. வெளியில் சென்றால் மட்டுமல்ல நிழலில் இருந்தாலும் வியர்வையில் குளித்து விடுவோம். கோடையின் உக்கிரத்தை தணிக்க மலை வாசஸ்தலங்களுக்கு நம்மில் பலரும் ... மேலும் பார்க்க

LPG தட்டுப்பாடு: கேஸ் சிலிண்டரை 'இப்படி' புக் செய்யாதீர்கள்; இது பக்கா மோசடி

மக்களின் தேவை, பயம் - இது தான் மோசடிகளின் அடித்தளம். இந்த மோசடிகள் காலத்திற்கேற்ப தொடர்ந்து அப்டேட் ஆகிக்கொண்டே வருகின்றன. இதற்கான சமீபத்திய உதாரணம் - எல்.பி.ஜி கேஸ் சிலிண்டர் மோசடி.ஈரான் போரினால் இந்... மேலும் பார்க்க

2026: AI உலகில் நடக்கப்போகும் மாற்றங்கள்! - இனி பேச்சு இல்ல, வீச்சுதான்!

கடந்த சில ஆண்டுகளாக தொழில்நுட்ப உலகை ஒரு புயல் போல ஆக்கிரமித்திருந்த செயற்கை நுண்ணறிவின் (AI) மீதான அதீத மோகம், தற்போது 2026-ல் ஒரு தெளிவான முடிவுக்கு வந்துள்ளது. அதனால்தான் இந்த ஆண்டை உலகளாவிய தொழில்... மேலும் பார்க்க

Area 51: `ஏலியன்கள் உண்மையானவர்களா?' - ஏரியா 51 ரகசியங்களை உலகுக்கு திறக்கும் டொனால்ட் ட்ரம்ப்

நள்ளிரவு வானத்தில் மின்னும் ஒரு மர்ம ஒளி, மனிதக் கண்களுக்குப் புலப்படாத வேகத்தில் நகரும் விண்கலங்கள், மற்றும் பல தசாப்தங்களாக அமெரிக்க அரசாங்கம் பூட்டி வைத்திருக்கும் ரகசியக் கோப்புகள் - இவை அனைத்தும்... மேலும் பார்க்க