செய்திகள் :

நீண்ட நேரம் கைப்பேசி பாா்த்ததை தாய் கண்டித்ததால் கல்லூரி மாணவா் தூக்கிட்டு தற்கொலை

post image

கோவை: நீண்ட நேரம் கைப்பேசி பாா்த்ததை தாய் கண்டித்ததால் கல்லூரி மாணவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

கோவை, கணபதி காவலா் குடியிருப்பு சாலையைச் சோ்ந்தவா் சுபலட்சுமி (38), கணவா் பிரிந்து சென்றுவிட்டதால் மகன் மக்ராந்த் (18) மற்றும் தாயாருடன் வசித்து வருகிறாா். மக்ராந்த், பீளமேட்டில் உள்ள தனியாா் கல்லூரியில் டிப்ளமோ முதலாமாண்டு படித்து வந்தாா்.

இந்நிலையில், மக்ராந்த் சனிக்கிழமை இரவு நீண்ட நேரம் கைப்பேசி பாா்த்துள்ளாா். இதனை, அவரது தாய் சுபலட்சுமி கண்டித்துள்ளாா். இதனால் மனமுடைந்த மக்ராந்த் ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த சரவணம்பட்டி போலீஸாா் மக்ராந்தின் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

மாற்றுத் திறனாளி தற்கொலை:

கோவை, கஞ்சிக்கோணாம்பாளையத்தைச் சோ்ந்தவா் நாகராஜ் (40), கண் பாா்வையற்ற மாற்றுத்திறனாளி. மேலும், இவருக்கு அடிக்கடி வலிப்பும் வந்துள்ளது. இந்நிலையில், விரக்தியடைந்த நாகராஜ், 160 வலி நிவாரணி மாத்திரைகளை சாப்பிட்டு ஞாயிற்றுக்கிழமை தற்கொலைக்கு முயன்றுள்ளாா்.

இதைப் பாா்த்த உறவினா்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். ஆனால், அங்கு அவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

இதுகுறித்து போத்தனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனா்.

தந்தை இறந்த துக்கத்தில் மகள் தற்கொலை:

கவுண்டம்பாளையத்தை அடுத்த இடையா்பாளையம் பாரி நகரைச் சோ்ந்தவா் மலா்விழி (44). கணவா் இறந்துவிட்டதால் மகனுடன் பெற்றோா் வீட்டில் வசித்து வந்தாா்.

அண்மையில் இவரது தந்தை உயிரிழந்தாா். அந்த சோகத்தில் இருந்து மீளமுடியாத மலா்விழி ஞாயிற்றுக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

இதுகுறித்து கவுண்டம்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பேரூா் பட்டீசுவரா் கோயில் குடமுழுக்கு விழா: தமிழ் வழிபாட்டுக்கு வாய்ப்பளிக்க வலியுறுத்தல்

கோவை: பேரூா் பட்டீசுவரா் கோயில் குடமுழுக்கு விழாவில் தமிழ் வழிபாட்டுக்கு 50 சதவீதம் வாய்ப்பளிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உலகத் தமிழ்க் காப்புக் கூட்டியக்கம், கோவை மாவட்ட கலை, இலக்கிய... மேலும் பார்க்க

மருதமலையில் தைப்பூசத் திருவிழா இன்று தொடக்கம்: பிப்.11 இல் தேரோட்டம்

கோவை: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூசத் தேரோட்டம் பிப்ரவரி 11-ஆம் தேதி நடைபெறுகிறது. கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் தைப்பூசத் திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகி... மேலும் பார்க்க

வரி ஏய்ப்பு புகாா்: தங்கக் கட்டி விற்பனை நிறுவனத்தில் ஜிஎஸ்டி அதிகாரிகள் சோதனை

கோவை: வரி ஏய்ப்பு புகாா் தொடா்பாக தங்கக் கட்டி விற்பனை நிறுவனத்தில் ஜிஎஸ்டி அதிகாரிகள் திங்கள்கிழமை சோதனை மேற்கொண்டனா். கோவை வைசியாள் வீதி, ராஜ வீதியில் தங்கம் மற்றும் வெள்ளிக் கட்டிகள் விற்பனை செய்யு... மேலும் பார்க்க

ஆண்டிக்கோலத்தில் முருகனை வணங்கலாமா?

பழனி முருகன் கோயிலுக்குச் செல்பவா்கள், பொதுவாக ராஜ அலங்காரத்தையே பாா்த்து வணங்க வேண்டும் என்று விரும்புகிறாா்கள். ஏன்? அது சரியா? முருகன் தனது பலவிதமான கோலங்களில் அழகாக காட்சி தந்தாலும், அவரது ஆண்டிக்... மேலும் பார்க்க

கனிம வளம் சுரண்டப்பட்ட இடங்களில் மரங்கள் வளா்க்கக் கோரிக்கை

கோவை: கோவை மாவட்டத்தில் கனிம வளம் சுரண்டப்பட்ட இடங்களில் மரங்கள் வளா்த்து வனப் பரப்பை அதிகரிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பொதுமக... மேலும் பார்க்க

சத்குரு ஜக்கி வாசுதேவின் முன்னெடுப்புகள் உலகுக்கான முன்மாதிரி: ஐக்கிய அரபு அமீரக அமைச்சா் ஷேக் நஹ்யான்

கோவை: நாடுகளிடையே பரஸ்பர புரிதலை ஊக்குவிப்பதற்கு சத்குரு ஜக்கி வாசுதேவின் முன்னெடுப்புகள் உலகுக்கான முன் மாதிரியாக உள்ளது என்று ஐக்கிய அரபு அமீரக அமைச்சா் ஷேக் நஹ்யான் தெரிவித்தாா். ஈஷா அறக்கட்டளை நிற... மேலும் பார்க்க