செய்திகள் :

நீதிபதியின் கையெழுத்துடன் பணி உத்தரவு: கர்நாடகா கோர்ட்டில் வேலை என கூறி ரூ.25 கோடியை ஏமாற்றிய தம்பதி

post image

பெங்களூரை சேர்ந்த சிலர் தங்களிடம் கோர்ட்டில் டி பிரிவில் அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி மோசடி செய்து விட்டதாக குற்றப்பிரிவு போலீஸில் புகார் செய்து இருந்தனர். இது போன்ற புகார்கள் பெங்களுரு முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் பதிவாகி இருந்தது. அதனை தொடர்ந்து குற்றப்பிரிவு போலீஸார் இது குறித்து விசாரிக்க ஆரம்பித்தனர். விசாரணையில் ஜெசோன் டிசோசா மற்றும் அவரது மனைவி லவினா ஆகியோர் சேர்ந்து இந்த மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. அவர்களின் நடமாட்டத்தை கண்காணித்து இரண்டு பேரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணை குறித்து போலீஸார் கூறுகையில்,'' வேலையில்லாத மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை செய்யும் சற்று வசதியான நபர்கள் தான் இந்த தம்பதியின் இலக்கு. இவர்கள் பல்வேறு கோர்ட்களில் டி பிரிவில் வேலை வாங்கித்தருவதாக கூறி ஒவ்வொருவரிடமிருந்தும் தலா 10 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை வசூலித்துள்ளனர். இது போன்று வேலை இல்லாதவர்களை கண்டுபிடிப்பதற்காக ஏஜென்டுகளை நியமித்து இருந்தனர்.

ஏஜெண்ட்களிடம் கமிஷனை எடுத்துக்கொண்டு எஞ்சிய தொகையை கொடுக்கும்படி கூறியுள்ளனர். பணம் கொடுத்தவர்களை ஹோட்டல்களுக்கு வரவழைத்து ஆவணங்களை சரிபார்த்துள்ளனர்.

அதோடு அவர்களை நம்ப வைப்பதற்காக போலி நீதிபதியின் கையெழுத்து போடப்பட்ட பணி உத்தரவு கடிதத்தையும் கொடுத்துள்ளனர். பணம் கொடுத்தவர்கள் தாங்கள் எப்போது வேலையில் சேர வேண்டும் என்ற விபரத்தை கேட்கும்போது தம்பதி இழுத்தடித்து வந்துள்ளனர். நூற்றுக்கணக்கானோரிடம் ரூ.25 கோடி அளவுக்கு வசூலித்துள்ளனர். இதே போன்ற மோசடியில் 2024ம் ஆண்டும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் ஜாமீனில் வெளியில் வந்த பிறகு மீண்டும் அதே மோசடியில் ஈடுபட்டுள்ளனர்''என்று தெரிவித்துள்ளனர்.

ரிமோட் கன்ட்ரோல் பாம்பு, புலித்தோல், 150 முறை வெளிநாடு பயணம் - 58 பெண்களை ஜோதிடர் ஏமாற்றியது எப்படி?

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கை சேர்ந்த அசோக் கராட் என்ற ஜோதிடர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக கைது செய்யப்பட்டார். அவர் தன்னிடம் வரும் பெண்களிடம் உணர்வுபூர்வமாக, கணவர்க... மேலும் பார்க்க

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஊராட்சி ஆவணங்கள் திருட்டு; முன்னாள் ஊராட்சி செயலர் மீது வழக்கு! - நடந்தது என்ன?

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியம் பிள்ளையார் குளம் ஊராட்சிக்குட்பட்ட வேப்பங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் அம்மையப்பன். இவர், இந்த ஊராட்சியின் வரவு செலவு விவரங்கள், கடந்த 2023 அக்டோ... மேலும் பார்க்க

திண்டுக்கல்: குவாரியில் வாலிபரின் சடலம் மீட்பு; உறவினர்கள் போராட்டம் - காரணம் என்ன?

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே உள்ள செந்துறை அடுத்துள்ள சரளைபட்டியில் சங்கரா ப்ளூ மெட்டல் என்ற தனியார் கல்குவாரி செயல்பட்டு வருகிறது. இந்த குவாரி ஸ்ரீரங்கம் எம்எல்ஏபழனியாண்டிக்கு சொந்தமானது என்றும... மேலும் பார்க்க

பெண் டாக்டர் கொலை வழக்கு குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை; மனநோயாளி போன்று நடித்தவர் சிக்கியது எப்படி?

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் கொட்டாரக்கரை நெடும்பனை பகுதியில் உள்ள பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தவர் குடவட்டூர் பகுதியைச் சேர்ந்த சந்தீப்(44). மதுவுக்கு அடிமையான காரணத்தால் ஆசிரியர் பணியில் இரு... மேலும் பார்க்க

மின்சாரத்தை துண்டித்து 2 டிரான்ஸ்பார்மர்கள் திருட்டு – திருடர்களை வலை வீசி தேடி வரும் போலீஸார்!

பொதுவாக தோட்டங்கள், ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் மின் இணைப்பை துண்டித்து விட்டு மின் கம்பிகளை மர்ம நபர்கள் திருடிச் செல்வதுண்டு. ஆனால், நெல்லை மாவட்டம், இட்டமொழியில் விவசாய நிலங்களுக்கு மின் இணைப்ப... மேலும் பார்க்க

பள்ளி மாணவி கொலை வழக்கு: ஒரே ஸ்டைலில் கொலைகள் - குற்றவாளி மதுரை சிறைக்கு மாற்றப்பட்ட பின்னணி என்ன?

தூத்துக்குடி மாவட்டம், குளத்தூர் அருகேயுள்ள வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவி, கடந்த 10-ம் தேதி காட்டுப் பகுதியில் இயற்கை உபாதை கழிப்பதற்காக மாலை சுமார் 6 மணியளவில் சென்றவர் நீண... மேலும் பார்க்க