செய்திகள் :

'நீலாங்கரை வீட்டை காலி செய்து அரசு பங்களாவில் குடியேறுகிறாரா முதல்வர் விஜய்?' - உண்மை என்ன?

post image

முதல்வர் விஜய் அவர் வசிக்கும் நீலாங்கரை வீட்டை காலி செய்து பசுமைவழிச் சாலையில் உள்ள அரசு பங்களாவில் குடியேறவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இந்தத் தகவலின் உண்மைத்தன்மையை அறிய தலைமைச் செயலக அதிகாரிகள் வட்டாரத்தில் பேச்சுக் கொடுத்தோம்.

TVK Vijay | விஜய்
TVK Vijay | விஜய்

முதல்வர் விஜய் வார நாட்களில் எல்லாம் தவறாமல் தலைமைச் செயலகத்துக்கு வந்துவிடுகிறார். தினமும் நீலாங்கரை வீட்டிலிருந்துதான் தலைமைச் செயலகத்துக்கு புறப்படுகிறார். நீலாங்கரையிலிருந்து தலைமைச் செயலகம் 18 கி.மீ தூரத்தில் இருக்கிறது.

முதல்வர் கிட்டத்தட்ட அரைமணி நேரம் பயணித்து தலைமைச் செயலகம் வர வேண்டியிருக்கிறது. இதனால் முதல்வரின் கான்வாய்க்கு பாதுகாப்பு வழங்குவதிலும் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்துவதிலும் காவல்துறைக்கு சிக்கல் இருப்பதாக தகவல். இதைக் கருத்தில் கொண்டு முதல்வர் விஜய் ஆர்.ஏ.புரத்தில் உள்ள அமைச்சர்கள் வசிக்கும் பசுமைவழிச் சாலை பங்களாவில் குடியேறவிருப்பதாக ஆட்சியமைந்த சில நாட்களிலேயே ஒரு தகவல் வெளியானது. ஆனால், முதல்வர் தொடந்து நீலாங்கரை வீட்டிலிருந்துதான் தினசரி அலுவலகத்துக்கு வந்து சென்று கொண்டிருந்தார்.

CM Vijay
CM Vijay

இந்நிலையில் முதல்வருக்கென்று பிரத்யேகமாக பசுமைவழிச் சாலையில் உள்ள 'எழில் இல்லம்' புனரமைக்கப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது. இதை முன்வைத்து முதல்வர் நீலாங்கரை வீட்டுக்கு பதில் அரசு பங்களாவுக்கு குடிபெயர்ந்து அங்கேயே தங்கப் போகிறார் என சமூகவலைதளங்களில் பேச்சு. இதுசம்பந்தமாக நம்மிடம் பேசிய முதல்வருக்கு நெருக்கமான சீனியர் அதிகாரிகள் சிலர், 'முதல்வருக்கென ஒரு அரசு பங்களா புனரமைக்கப்பட்டு வருவது உண்மைதான். ஆனால், முதல்வர் நீலாங்கரை வீட்டிலிருந்து பசுமைவழிச் சாலைக்கு குடிபெயர்கிறார் என்பதில் உண்மை இல்லை. அங்கிருக்கும் அரசு பங்களா முதல்வருக்கான முகாம் அலுவலகமாக தயார் செய்யப்பட்டிருக்கிறது. முதல்வர் விருப்பப்பட்டால் அரசு பங்களாவில் வைத்து அதிகாரிகளையும் அமைச்சர்களையும் சந்திக்கலாம். ஆலோசனைக் கூட்டங்களை நடத்தலாம். எப்போதாவது வாரத்தில் ஒன்றிரண்டு நாட்கள் அங்கே தங்கலாம், அவ்வளவுதான்' என்றனர்.

"திருமாவளவனை முதல்வராக்க நானும் எடப்பாடியும் முயன்றோம்" - என்ன சொல்கிறார் டிடிவி தினகரன்?

அதிமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று (அக்.24) செய்தியாளர்களைச் சந்திருக்கிறார். அப்போது, 'தனுஷ் அதிமுகவிற்கு வருகிறாரா?' என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "ஒரு நடிகர் வந்துதான் அதிமுகவ... மேலும் பார்க்க

தனுஷ் ரசிகர்கள் சந்திப்புக் கூட்டம்: இடம் கொடுத்த CM விஜய்க்கு நெருக்கமான கல்லூரி? விவரம் என்ன?

நடிகர் தனுஷ் தமிழக அரசியலில் பேசுபொருளாகியிருக்கிறார். தவெக, அதிமுக, அமமுக எனப் பல கட்சியினரும் தனுஷின் அரசியல் வருகை குறித்து பேசியிருக்கின்றனர். இந்நிலையில், நாளை சென்னையில் தன்னுடைய பெண் ரசிகைகளுக்... மேலும் பார்க்க

"அங்குதான் அவரைச் சந்தித்தேன்; நினைவுகள் நிறைந்த உலகம்.."- ராஜீவ் காந்தியுடனான காதல் குறித்து சோனியா

மூத்த காங்கிரஸ் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சோனியா காந்தி ‘Belonging: A Journey of Love’ என்ற சுயசரிதை நூலை எழுதியிருக்கிறார். நவம்பர் 10-ஆம் தேதி இந்த நூல் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இந்த... மேலும் பார்க்க

சிவகங்கை: "இலவசங்கள் வேண்டாம்; வேலை கொடுங்க" - 5 வயது மகனுடன் சாலையில் படுத்து கைம்பெண் போராட்டம்

சிவகங்கை பேருந்து நிலையம் முன்பு, கணவனை இழந்த இளம் பெண் ஒருவர் தனது 5 வயது மகனுடன் சாலையில் படுத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.க... மேலும் பார்க்க

'ஆன்லைனில் இணைந்தவர்கள் எல்லாம் தவெக நிர்வாகிகளா?'- உதயநிதிக்கு அமைச்சர் ராஜ்மோகன் பதில்

தமிழ்நாட்டில் பாலியல் குற்றங்கள் தொடர்கதையாக இருக்கிறது. கன்னியாகுமரியில் தவெக நிர்வாகி கிறிஸ்டோஃபர் மீது பாலியல் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்பு, நெல்லை, வேளாங்கன்னி போன்ற இடங்களில் எழுந்துள... மேலும் பார்க்க

"ரீல்ஸ் போட்டு கொண்டு சினிமா நடிகராக இருக்கலாமென நினைக்கிறார் முதலமைச்சர்" - செல்லூர் ராஜூ காட்டம்

மருது பாண்டியர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை ஸ்காட் ரோடு பகுதியில் உள்ள மருது பாண்டியர்களின் சிலைக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.இதனைத் தொடர்ந்து செய்த... மேலும் பார்க்க