செய்திகள் :

`நெதன்யாகுவின் திருமணம் மீறிய உறவு?' - 33 ஆண்டுகளுக்குப் பிறகு மனம் திறந்த ருத் பார்

post image

1993-ம் ஆண்டு இஸ்ரேல் அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியவர் அப்போதைய லிகூட் (Likud) கட்சியின் இளம் தலைவர் பெஞ்சமின் நெதன்யாகு.

தனது அரசியல் வளர்ச்சியைத் தடுப்பதற்காக வைக்கப்பட்ட பிளாக்மெயில் குற்றச்சாட்டைத் தொடர்ந்து, நேரலை தொலைக்காட்சியில் தோன்றித் தனக்கு இருந்த திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவை அவர் ஒப்புக்கொண்டார்.

அந்தச் சம்பவத்தின் மையப்புள்ளியாக இருந்த டாக்டர் ரூத் பார் (Dr. Ruth Bar), இஸ்ரேலின் பிரபல பத்திரிக்கையில் 33 ஆண்டுகளுக்குப் பிறகு மௌனம் கலைத்திருக்கிறார்.

நெதன்யாகு 1993
நெதன்யாகு 1993

அவரின் பேட்டியில், ``1993-ல் இஸ்ரேல் அரசியலையே உலுக்கிய இந்தச் சம்பவம், பெஞ்சமின் நெதன்யாகுவின் அரசியல் வாழ்க்கையில் நடந்த மிகப்பெரிய புயல். அப்போது இஸ்ரேலின் முக்கிய எதிர்க்கட்சியான 'லிகூட்' (Likud) கட்சிக்குப் புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் நடந்து கொண்டிருந்தது.

ஐக்கிய நாடுகள் சபையில் பணியாற்றிவிட்டு சமீபத்தில் திரும்பியிருந்த நெதன்யாகு, மிக வேகமாக வளர்ந்து, கட்சியின் தலைமைப் போட்டியில் முன்னணியில் இருந்தார். இது கட்சியில் இருந்த பல மூத்த தலைவர்களுக்கும், டேவிட் லெவி (David Levy) என்பவருக்கும் பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியது.

திடீரென ஒருநாள் நெதன்யாகுவின் மனைவி சாராவுக்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் போன் செய்து, `உங்கள் கணவருக்கும் ரூத் பாருக்கும் இடையே திருமணம் மீறிய உறவு இருக்கிறது.

எங்களிடம் இதற்கான வீடியோ கேசட் ஆதாரம் உள்ளது. நெதன்யாகு கட்சித் தலைவர் போட்டியிலிருந்து விலகாவிட்டால் இதை வெளிப்படையாக வெளியிட்டு விடுவோம்' என்று மிரட்டினார்.

ருத் பார்
ருத் பார்

மிரட்டலுக்குப் பயந்து ஒதுங்காத நெதன்யாகு, ஜனவரி 14, 1993 அன்று நாட்டின் ஒரே முக்கிய டிவி சேனலான 'சேனல் 1' நேரலை விவாதத்தில் தோன்றி, "ஆமாம், நான் என் மனைவியை ஏமாற்றி வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருந்தது உண்மைதான். என்னைப் போட்டியிலிருந்து தூக்க என் சொந்தக் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் டேவிட் லெவி தான் குற்றவாளிக் கும்பலை வைத்து என்னை பிளாக்மெயில் செய்கிறார்" எனப் பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார்.

இந்தச் சர்ச்சையையும் தாண்டி, நெதன்யாகு தேர்தலில் வெற்றி பெற்று லிகூட் கட்சியின் தலைவரானார். பின்னாளில் இஸ்ரேலின் பிரதமராவும் வளர்ந்தார்.

இப்போதுவரை, மிரட்டல் விடுக்கப்பட்ட அந்த வீடியோ கேசட் வெளியாகவே இல்லை. உண்மையில் அப்படி ஒரு வீடியோவே இல்லை. அது நெதன்யாகுவைப் பயமுறுத்தச் செய்யப்பட்ட வெறும் நாடகம் என்றும் பின்னர் உண்மை வெளியானது. இந்தச் சம்பவத்திற்குப் பிறகு மக்கள் வெளிச்சத்திலிருந்து முற்றிலும் விலகி, எனது உளவியல் மற்றும் வியூக ஆலோசகர் பணியைத் தொடர்ந்தேன்.

சமூக ஊடகங்கள் இல்லாத அக்காலத்தில், என்னால் எளிதாக எனது தனிப்பட்ட வாழ்க்கைக்குத் திரும்ப முடிந்தது. அதன்பின்னர், எஹுத் பராக், எஹுத் ஓல்மர்ட் போன்ற நாட்டின் முன்னணி அரசியல் தலைவர்களுடனும், பேங்க் ஹாபோலிம், பேங்க் லியுமி போன்ற முன்னணி வங்கி நிறுவனங்கள் மற்றும் பல கார்ப்பரேட் நிறுவனங்களுடனும் மூத்த ஆலோசகராக வெற்றிகரமாகப் பணியாற்றியிருக்கிறேன்" என்றார்.

"எந்தத் தப்பும் செய்யவில்லை; நீதிமன்றம் மூலம் நிரபராதி என்று நிருபிப்போம்" - கே.என்.நேரு விளக்கம்

திருச்சியில் தி.மு.க முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் சோதனை மேற்கொண்டனர். இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த கே.என்.நேரு, "டெண்டர் முறைகேடு தொடர்பாக சோதனை செய்ய வ... மேலும் பார்க்க

`விகடனின் தனிச்சிறப்பே கார்ட்டூன்-தான்; ஒரு காலத்தில் என்ன நடந்ததென்பது..!' - ஜே.சி.டி.பிரபாகர்

Best Automobile Channel விருதை Motowagon சேனலின் ரெஜினுக்கு வழங்க மேடையேறிய சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் பேசுகையில், ``தங்கள் நலனை காட்டிலும் மக்கள் நலனை முன்னிலைப்படுத்தி வெளிப்படையான ஆட்சி நடத்த வேண்... மேலும் பார்க்க

சட்டசபை நிகழ்ச்சிகளைப் பதிவு செய்ய கண்ணாடியில் AI கேமராவா? - அமைச்சர் முகமது பர்வேஸ் விளக்கம்

தமிழ்நாட்டு அமைச்சரவையில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சராகவும், அறந்தாங்கி தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்து வருபவர் ஜெ.முகமது பர்வேஸ்.இவர், கடந்த சில நாட்களாக தமிழக சட்ட... மேலும் பார்க்க

பட்டா வழங்குவதாக மலைவாழ் மக்களிடம் ரூ.1 கோடி லஞ்சம்? - வனத்துறை அலுவலர்கள் 6 பேர் அதிரடி சஸ்பெண்ட்

திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாது மலை பகுதிகளான ஜமுனாமரத்தூர், மேல்மட்டு, நாடனூர் உள்ளிட்ட கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக வாழும் மலைவாழ் மக்கள் பெரும்பாலும் விவசாயத்தையே சார்ந்திருக்கின்றனர். இந்த நிலைய... மேலும் பார்க்க

"அதானி சிமெண்ட் ஆலையால எங்க கிராமத்துக்கே மூச்சு திணறுது" - தவிக்கும் கோவை கிராம மக்கள்

கோவை மதுக்கரை பகுதியில் இயங்கி வரும் அதானி நிறுவனத்திற்குச் சொந்தமான ஏசிசி சிமெண்ட் ஆலையில் இருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் சுற்றுவட்டாரப் பகுதிகள் புழுதி மண்டலமாக இருக்கிறது. சிமெண்ட் துகள்கள்... மேலும் பார்க்க

"முதலாளிகளே லஞ்சம் தருகின்றனர்; நடவடிக்கை எடுப்பீர்களா?" - அமைச்சர் கீர்த்தனாவிடம் CPIM கேள்வி

லஞ்சம் வாங்குவது குறித்து நேற்று இரவு (செப்டம்பர் 4) அமைச்சர் கீர்த்தனா, "லஞ்சம் வாங்கினாலும் சரி, தவறு செய்தாலும் சரி யாராக இருந்தாலும் நடவடிக்கை உறுதி.இது தொடக்கம் மட்டுமே. மாற்றம் வரும் வரை நடவடிக்... மேலும் பார்க்க