செய்திகள் :

நெதன்யாகு மீது கடும் கோபத்தில் ஜே.டி.வான்ஸ்: பின்னணியில் ஈரான் போர் - என்ன நடந்தது?

post image

ஈரான் போர் தொடங்கியதில் இருந்து இரண்டு தகவல்கள் பரவலாக இருந்து வருகின்றன.

ஒன்று, ஈரானின் உச்ச தலைவரை அகற்றிவிட்டால், ஈரான் மக்களே அங்கே ஆட்சி மாற்றத்தை கொண்டு வந்துவிடுவார்கள். அதனால், போர்‌ எளிதில் முடிந்துவிடும் - இதைக் கூறி தான் அமெரிக்க அதிபர் ட்ரம்பே ஈரான் மீதான 'உடனடி' போருக்கு ஒப்புக்கொள்ள வைத்துள்ளார் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு.

இன்னொன்று, ஈரான் மீதான இந்தப் போரில் அமெரிக்காவின் துணை அதிபர் ஜே.டி.வான்ஸிற்கு உடன்பாடில்லை.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சன் நெதன்யாகு
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சன் நெதன்யாகு
இதை உறுதி செய்வது போல, Axios செய்தி நிறுவனம் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்த வாரத்தின் தொடக்கத்தில் ஜே.டி.வான்ஸ், நெதன்யாகு தொலைபேசியில் உரையாடி இருக்கின்றனர்.

நெதன்யாகு மீது ஜே.டி.வான்ஸ் மிகவும் கோபப்பட்டு இருக்கிறார்.

"போருக்கு முன்னர், ஈரானில் எளிதாக ஆட்சி மாற்றம் நடந்துவிடும் என்று கூறினீர்கள்" என்று கோபப்பட்டு இருக்கிறார்.

முதலில், ஈரான் உடனான பேச்சுவார்த்தைக்கு வான்ஸை தான் முன்னிருத்தியிருக்கிறது இஸ்ரேல். இந்தச் சம்பவத்திற்கு பிறகு, வான்ஸைக் கண்டுகொள்வதில்லையாம்.

ஆனால், ஈரான் வான்ஸுடன் பேசத்தான் தயாராக இருக்கற்து என்று தகவல்கள் கூறுகின்றன.

அமெரிக்க அதிகாரிகளும், வான்ஸ் தான் பேச்சுவார்த்தைக்கு சிறந்த நபர் என்று கூறுகிறார்கள்.

“முதல்வர் வாகனம் முன்னே... செய்தி துறை வாகனம் பின்னே!” - செய்தி துறைக்கு செக் வைக்கும் அ.தி.மு.க!

தமிழக முதல்வரின் பிரசாரத்திற்கு தமிழக அரசின் ஊழியர்களையும், செய்தி துறையையும் தி.மு.க தரப்பு தங்களுக்காக பயன்படுத்தி வருகிறது. உடனடியாக தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அ.தி.மு.க பரபரப்பு ப... மேலும் பார்க்க

`இரட்டை இலைக்கு வாக்களியுங்கள்' - பழைய நினைவில் பேசிய செங்கோட்டையன்; சட்டென சுதாரிப்பு!

தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து, அக்கட்சியின் கோபிசெட்டிபாளையம் தொகுதி வேட்பாளராக களமிறங்கியிருக்கிறார் அ.தி.மு.க - வின் மூத்த அரசியல்வாதியும் முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன். ஈரோடு மாவட்டம், பவான... மேலும் பார்க்க

கரூர்: "சட்டை அவரோடது தான்; ஆனால், மாப்பிள்ளை அவரில்லை.!" - திமுக வேட்பாளரை கிண்டல் செய்த அண்ணாமலை

கரூர், வெங்கமேடு பகுதியில் அதிமுக வேட்பாளர், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை ஆதரித்து பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பிரச்சாரம் செய்தார்.இதில் அதிமுக, பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள... மேலும் பார்க்க

பிரசாரத்துக்கு விடுமுறை எடுக்கும் விஜய் - கவலையில் தவெக வேட்பாளர்கள்?

சட்டமன்றத் தேர்தலுக்கான பிரசாரம் ஓய இன்னும் சரியாக 10 நாட்களே இருக்கிறது. எல்லா கட்சித் தலைவர்களும் அதிகமான தொகுதிகளை கவர் செய்ய சுற்றி சுழன்று ஓடிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், தவெக தலைவர் விஜய் மட்டு... மேலும் பார்க்க

தமிழக உள்துறை செயலாளர் மாற்றம்: தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு!

வருகிற தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலையொட்டி, தமிழ்நாட்டில் தலைமை செயலாளர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளை மாற்றி வருகிறது இந்திய தேர்தல் ஆணையம்.அதன் ஒரு பகுதியாக, இப்போது தமிழ்நாடு உள்துறை செயலாளர் மாற்றப்பட்டுள... மேலும் பார்க்க

"பா.ஜ.க-வுக்கு பன்முகம் கிடையாது, கோர முகம் தான் இருக்கிறது"- செல்வபெருந்தகை கடும் தாக்கு!

கன்னியாகுமரி மாவட்டத்தில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் கிள்ளியூர் வேட்பாளர் ராஜேஷ்குமார், குளச்சல் வேட்பாளர் தாரகை கத்பர்ட், விளவங்கோடு வேட்பாளர் டி.டி.பிரவீன் ஆகியோரை ஆதரித்து தமிழக காங்கிரஸ் தலைவ... மேலும் பார்க்க