செய்திகள் :

நெல்லை: திடீர் சோதனை... கள்ளத்துப்பாக்கி வைத்திருந்த 5 பேர் சிக்கியது எப்படி?

post image

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நெல்லை மாநகரில் 600 போலீஸார் கண்காணிப்பு மற்றும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதற்கிடையில் திண்டுக்கல்லைச் சேர்ந்த ஒருவர் மூலம் நெல்லைக்கு நாட்டுத்துப்பாக்கி ஒன்று அனுப்பப்பட்டதாக நெல்லை மாநகர போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த நிலையில், நெல்லை மேலப்பாளையம், ஆமிர் சுகைல் என்பவரின் வீட்டில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. அப்போது அவரது வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு நாட்டுத்துப்பாக்கி மற்றும் 4 தோட்டாக்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள்

அத்துடன் ஆமிர் சுகைலையும் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பெருமாள்புரத்தைச் சேர்ந்த ரத்தினபாலன், முசாமில் முர்சித் ஆகியோருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து அவர்கள் இருவரையும் போலீஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மூன்று பேர் மீதும் ஆயுதத்தடைச் சட்டப்பிரிவுகள் 25(1), 27(1)-ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர்களிடம் நடத்திய விசாரணையில், ரத்தினபாலன் நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க.வில் பொறியாளர் அணியில் பொறுப்பில் இருப்பதும் தெரியவந்தது. இவர், கடந்த 2020-ம் ஆண்டு பீகார் மாநிலத்தில் இருந்து ஒரு கள்ள கைத்துப்பாக்கி வாங்கி கடந்த 4 ஆண்டுகளாக வீட்டிலேயே பதுக்கி வைத்து இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. ரத்தினபாலன், கடந்த சில ஆண்டுகளாகவே பறிமுதல் செய்யப்பட்ட நாட்டுத்துப்பாக்கியை பயன்படுத்தி வந்துள்ளார். சமீபத்தில் இந்த துப்பாக்கியை விற்க முடிவு செய்தாராம்.

ஆமிர் சுகைல், முசமில் முர்சித் ஆகியோரின் உதவியுடன் திண்டுக்கல்லைச் சேர்ந்த ஒருவருக்கு துப்பாக்கியை விற்றுள்ளார். ஆனால், அந்த துப்பாக்கி சரியாக செயல்படவில்லை எனக்கூறி வாங்கியவர் அதைத் திருப்பி அனுப்பியுள்ளார். துப்பாக்கியில் ஏற்பட்ட பழுதினை சரி செய்ய துப்பாக்கி திரும்ப வந்தபோது 3 பேரும் போலீஸாரிடம் சிக்கிக் கொண்டனர். திண்டுக்கலுக்கு விரைந்த தனிப்படை போலீஸார் அங்கு நடத்திய விசாரணையில், இந்த விவகாரத்தில் சம்மந்தப்பட்ட சாகுல் ஹமீதுதான் துப்பாக்கி சரியாக செயல்படவில்லை எனக் கூறி திருப்பி அனுப்பியர் எனக் கூறப்படுகிறது. இவர் ஏற்கெனவே நெல்லையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவரை கொலை செய்ய முயன்ற வழக்கிலும் தொடர்புடையவர் எனக் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் திண்டுக்கல்லைச் சேர்ந்த சிக்கந்தர் என்பவரும் சிக்கினார்.

பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கி

இந்த கள்ளத் துப்பாக்கியை மேலப்பாளையத்தைச் சேர்ந்த இளைஞர்கள் ரூ.1.25 லட்சத்திற்கு வாங்கி, திண்டுக்கலைச் சேர்ந்தவருக்கு ரூ.1.50 லட்சத்திற்கு விற்க முயன்றது தெரிய வந்தது. ”பறிமுதல் செய்யப்பட்ட இத்துப்பாக்கி, 7.65 மி.மீ ரக பிஸ்டல் வகையைச் சேர்ந்தது. தொழிற்சாலைகளில் முறையாகத் தயாரிக்கப்படும் நேர்த்தி இந்த துப்பாக்கியில் இல்லை. கைகளால் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிதான் இது. தயாரிப்பு நிறுவன எண்கள், வரிசை எண்கள் எதுவும் இதில் இல்லை. இது முற்றிலும் சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட பிஸ்டல்” என்றனர் போலீஸார்.  

சென்னை: செக்ஸ் டார்ச்சர்; மர்ம உறுப்பை வெட்டி இளைஞர் கொலை - சிறுவனுடன் கைதான தோழிகள்

சென்னை பல்லாவரம் அடுத்த திரிசூலம் அம்மன் நகரைச் சேர்ந்தவர் செல்வகுமார் (22). கொத்தனார் வேலை செய்து வந்த இவர், சென்னை சேப்பாக்கத்தைச் சேர்ந்த ரக்சிகா என்பவரைக் காதலித்தார். ஆனால் இவர்களுக்குள் கருத்துவ... மேலும் பார்க்க

வேலூர் CMC மருத்துவர் வீட்டில் ED ரெய்டு - சட்டவிரோதப் பணப்பரிமாற்றத்தில் தொடர்பா?

வேலூரில் உள்ள பிரபல சி.எம்.சி தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்களுக்காக தோட்டப்பாளையம் பகுதியில் தனி வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இதில் கேரளாவை சேர்ந்த டாக்டர் பீஜியன் என்பவர் தங்கி இருந்த வீ... மேலும் பார்க்க

சென்னை: அதிமுக பகுதிச் செயலாளர் தற்கொலை - கடன் தொல்லையால் விபரீத முடிவா?

சென்னை ஜாபர்கான்பேட்டை, பள்ளிக்கூட 6-வது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் சுகுமார் (47). இவர் அதிமுக சைதை மேற்கு பகுதி செயலாளராக இருந்து வந்தார். 16-ம் தேதி பகுதியில் உள்ள அ.தி.மு.க நிர்வாகிகளுடன் சேர்ந... மேலும் பார்க்க

சென்னை: இளம்பெண்ணின் நிர்வாண வீடியோவை வைத்து மிரட்டல்; இன்ஸ்டா பிரபலம் கைது!

சென்னையைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு இன்ஸ்டா மூலம் கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டத்தைச் சேர்ந்த சைஜூ (23) என்பவர் அறிமுகமாகியிருக்கிறார். பைக் ரேஸரான இவர், அதுதொடர்பான வீடியோக்களை இன்ஸ்டாவில் தொ... மேலும் பார்க்க

போராட்டத்தில் ஈடுபட்ட பகுதி நேர ஆசிரியர் விஷம் அருந்தி தற்கொலை - சென்னையில் அதிர்ச்சி

தமிழகம் முழுவதும் பணியாற்றி வரும் பகுதி நேர ஆசிரியர்கள், நிரந்தர பணி, ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். சென்னையில் நடந்த போராட்டத்தில் பெர... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை: மது குடிக்க பணம் தராததால் ஆத்திரம் - மனைவி கையை வெட்டிய முதியவர் கைது

ராணிப்பேட்டை மாவட்டம், கலவை அருகேயுள்ள நாடோடியின குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (65). இவரின் மனைவி லட்சுமி (60). இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் இருக்கின்றனர். பிள்ளைகள் மூவரும் திருமணமாகி ... மேலும் பார்க்க