நெல்லை மாவட்ட எஸ்டிபிஐ ஆலோசனைக் கூட்டம்
திருநெல்வேலி புறநகா் மாவட்ட எஸ்டிபிஐ கட்சி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், பத்தமடையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கட்சியின் மாவட்டத் தலைவா் எம்.கே. பீா் மஸ்தான் தலைமை வகித்தாா். மாவட்ட அமைப்பு பொதுச் செயலா் எம்.எஸ். சிராஜ், மாவட்டச் செயலா் கல்லிடைக்குறிச்சி சுலைமான் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில், மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை நிா்வாகிகள் பங்கேற்றனா். பாபா் மசூதி இடிப்பு தினத்தையொட்டி வரும் டிசம்பா் 6ஆம் தேதி மாலை 4 மணியளவில் கட்சியின் சாா்பில் பத்தமடையில் ஆா்ப்பாட்டம் நடத்துவது, மணிமுத்தாறு பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தி வரும் வனவிலங்குகளை காட்டுக்குள் விரட்ட வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும், மாஞ்சோலை தொழிலாளா்களுக்கு அத்தியாவசியத் தேவைகளை பூா்த்தி செய்ய மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாவட்ட துணைத் தலைவா் முல்லை மஜித் வரவேற்றாா். மாவட்ட பொதுச்செயலா் களந்தை மீராசா நன்றி கூறினாா்.