செய்திகள் :

நேபாளம்: ``தாயகம் திரும்புவோம் என்ற நம்பிக்கையோடு இருக்கிறோம்" - சொற்பொழிவாளர் மங்கையற்கரசி உருக்கம்

post image

நேபாளத்தில் ஏற்பட்டுள்ள இயற்கை பேரிடரில் சிக்கியுள்ள பிரபல ஆன்மீக சொற்பொழிவாளர் தேச மங்கையற்கரசி வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், ``கடந்த 20-ம் தேதி நாங்கள் அனைவரும் Kerung Border வழியாக நேபாளத்திற்குள் நுழைந்து, திட்டமிட்டபடி கைலை யாத்திரை பயணத்தை மேற்கொண்டு வருகிறோம்.

இரண்டாம் நாள் பரிக்கிரமாவை நிறைவு செய்து திரும்பிய போதுதான், நேபாளத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான நிலச்சரிவு மற்றும் பேரிடர் சம்பவத்தைப் பற்றித் தெரிந்து கொண்டேன்.

சொற்பொழிவாளர் மங்கையற்கரசி
சொற்பொழிவாளர் மங்கையற்கரசி

அதைக் கேட்டதிலிருந்து மிகுந்த மனவேதனைக்கும் மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளேன். இந்தப் பேரிடரில் பல்லாயிரக்கணக்கான நேபாள மக்களும், நூற்றுக்கணக்கான வெளிநாட்டு மற்றும் தமிழக யாத்திரிகர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எங்களோடு இந்த ஆன்மீகச் சுற்றுலாவில் 148 தமிழர்கள் மற்றும் 2 வெளிநாட்டவர்கள் என மொத்தம் 150 பேர் பயணம் மேற்கொண்டுள்ளோம். சிவபெருமானின் அருளால் நாங்கள் அனைவரும் தற்போது 'சாகா' (Saga) என்ற இடத்தில் மிகவும் பாதுகாப்பாக இருக்கிறோம்.

இங்கிருந்து நாங்கள் அனைவரும் தாய்நாடு திரும்புவதற்கான வழிகள் மற்றும் அனுமதிகள் குறித்து இந்திய, நேபாள மற்றும் சீன அரசு அதிகாரிகளுடன் தொடர்ந்து பேசி வருகிறோம். எந்த வழியாக அனுமதி கிடைக்கிறதோ, அதன் வழியே பாதுகாப்பாக தாயகம் திரும்புவதற்கான முயற்சிகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறோம்.

இந்தப் பேரிடரில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் எங்களது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

நேபாளம் வெள்ளப்பெருக்கு
நேபாளம் வெள்ளப்பெருக்கு

நிலச்சரிவில் சிக்கி இதுவரை தகவல் தெரியாமல் இருப்பவர்களை மீட்கவும், பாதிக்கப்பட்டவர்கள் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பவும் அரசுகள் தீவிர முயற்சி எடுத்து வருகின்றன. நாங்களும் இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறோம். நாங்கள் அனைவரும் விரைவில் தாயகம் திரும்புவோம் என்ற நம்பிக்கையோடு இருக்கிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.

நேபாளம்: பாலம் இல்லை… பாதையும் இல்லை… ஆபத்தான பயணம் ஜிப்லைனே ஒரே நம்பிக்கை!

பாலங்கள் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், 250 மீட்டர் நீளமுள்ள ஜிப்லைன் மூலம் ஆற்றைக் கடந்து உணவு, உடைமைகளை எடுத்துச் செல்லும் நேபாள மக்களின் போராட்டம், பாலம் போன இடத்தில் உயிர்நாடியான ஜிப்லைன்!நேபாளத்... மேலும் பார்க்க

Nepal: ”இதுவரை பஸ் கிடைக்காததே நல்ல விஷயம்தான்” - டி.என்.ஏ சோதனைக்கு வந்த மகன் நம்பிக்கை

நேபாளத்தில், கடந்த 26ம் தேதி ஏற்பட்ட வெள்ளத்தில், ஆன்மீக சுற்றுலா சென்ற தமிழகத்தைச் சேர்ந்த 305 பேரில், சுமார் 220 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். மீதமுள்ள 85 பேர் மயாமான நிலையில், அவர்களை மீட்க மத்திய... மேலும் பார்க்க

நேபாள வெள்ளம்: நீர்மின் சுரங்கத்துக்குள் 9 நாட்கள்... உயிருடன் மீட்கப்பட்ட 2 தொழிலாளர்கள்!

நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர வெள்ளத்துக்குப் பிறகு, மண்ணாலும் குப்பைகளாலும் மூடப்பட்ட நீர்மின் திட்ட சுரங்கத்துக்குள் சிக்கியிருந்த இரண்டு தொழிலாளர்கள் 9 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.... மேலும் பார்க்க

பனிமலையின் பகுதி உடைந்து விழுந்த நொடிகள்... நேபாளப் பேரழிவின் தொடக்கத்தை பதிவு செய்த ட்ரோன் வீடியோ!

நேபாளத்தின் லாங்டாங் லிருங் (Langtang Lirung) மலையில் அண்மையில் நிகழ்ந்த பாறை மற்றும் பனிச்சரிவு, சில நிமிடங்களில் ஒட்டுமொத்தப் பகுதியையும் உலுக்கிய பெருவெள்ளமாக மாறியது. 900-க்கும் மேற்பட்டோரின் உயிர... மேலும் பார்க்க

"உங்களுடைய அக்கறைக்கும், தாராளமான உதவிக்கும் நன்றி"- இந்தியாவிற்கு நன்றி தெரிவித்த நேபாளம் அதிபர்

நேபாள நாட்டின் போடேகோசி மற்றும் திரிசூலி ஆறுகளில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் இதுவரை 650-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் 2400-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக நேபாள பேரிடர் மேலாண... மேலும் பார்க்க