செய்திகள் :

'நேரமிருந்தும் பிரச்னைகளை பேச மறுத்த விஜய்; ஏமாற்றமடைந்த தவெக தொண்டர்கள்!' - என்ன நடந்தது?

post image

தவெக தலைவர் விஜய் இன்று சென்னையில் பிரசாரம் மேற்கொண்டிருந்தார். தி.நகர் தொடங்கி எழும்பூர் வரைக்கும் வாகனத்தில் விஜய், மக்கள் மத்தியில் பேசாமல் போனது தொண்டர்களை ஏமாற்றமடையச் செய்திருக்கிறது.

Vijay
Vijay

தி.நகர் முத்துரங்கன் சாலை, ஆயிரம் விளக்கு சுதந்திர தின பூங்கா, எழும்பூர் ரித்தர்டன் சாலை என மூன்று இடங்களில் மதியம் 4 மணி முதல் இரவு 8 மணி வரை விஜய் பிரசாரம் செய்ய அனுமதி வாங்கப்பட்டிருந்தது. கடந்த முறை விஜய் சென்னையில் பிரசாரம் செய்த போது காவல்துறை முறையாக பாதுகாப்பு வழங்கவில்லை என தவெக-வினர் குற்றம்சாட்டினர்.

இந்நிலையில், இன்று விஜய்யின் பிரசாரத்துக்கு காவல்துறையினர் தீவிரமாக பாதுகாப்பு வழங்கியிருந்தனர். விஜய் நீலாங்கரை வீட்டிலிருந்து புறப்பட்ட போது அவரின் காரை சுற்றி 10 ஜீப்களும் 2 போலீஸ் வேன்களும் வளையமாக போடப்பட்டு, சிக்னல்கள் க்ளியர் செய்யப்பட்டு பக்கவாட்டு சாலைகளை ப்ளாக் செய்து சௌகரியமாக அழைத்து வந்தனர். விஜய்யை பார்ப்பதற்காகவும் அவரின் பேச்சை கேட்பதற்காகவும் மதியம் 1 மணி முதல் தொண்டர்கள் மூன்று பாயின்ட்டிலும் காத்திருந்தனர். தொகுதி மறுவரை பற்றி தீவிரமாக விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

Vijay
Vijay

8000 கூப்பன் விவகாரமும் தேர்தல் களத்தில் பேசுபொருளாகியிருக்கிறது. இந்த இரண்டு விவகாரங்களை பற்றியுமே விஜய் ட்வீட் செய்திருந்தார். பற்றியெரிந்து கொண்டிருக்கும் அந்த விவகாரங்களைப் பற்றி விஜய் பேசுவார் என தொண்டர்கள் எதிர்பார்க்க, மூன்று பாயின்ட்டிலுமே விஜய் வேட்பாளர்களை மட்டுமே அறிமுகம் செய்துவிட்டுச் சென்றார்.

தொகுதி மறுவரையறை விவகாரத்தை முக்கியமான கட்டத்தில் பாஜக கையில் எடுத்திருக்கிறது, அதை டெல்லி Vs தமிழ்நாடு என தேர்தல் பிரச்னையாக திமுக தீவிரமாக எடுத்துச் செல்கிறது. இந்நிலையில், கொள்கை எதிரி பற்றியும் அரசியல் எதிரி பற்றியும் விஜய் பேசி ஸ்கோர் செய்வார் என எதிர்பார்த்த தொண்டர்கள் ஏமாந்து போயினர்.

'திமிறிய கூட்டம்...லாக் ஆன பிரசார வாகனம்!' - விஜய்யின் எழும்பூர் பிரசாரம் ரத்தான பின்னணி!

தவெக தலைவர் விஜய் சென்னையில் தி.நகர், ஆயிரம் விளக்கு, எழும்பூர் என மூன்று தொகுதிகளில் பிரசாரம் செய்ய திட்டமிட்டிருந்தார். ஆனால், எழும்பூரில் திட்டமிட்ட பாய்ண்ட்டுக்கு வராமல் பிரசாரத்தை ரத்து செய்துவிட... மேலும் பார்க்க

Malacca Strait பக்கம் திரும்பும் அமெரிக்கா: சீனாவிற்கு 'பெரிய செக்?' இந்தியாவும் கைக்கோக்குமா?

'என்ன பார்வை நம்ம பக்கம் திரும்புது?' என்பதுபோல, ஹார்முஸ் ஜலசந்தியில் இருந்து மெல்ல மெல்ல அமெரிக்காவின் கண்கள் மலாக்கா ஜலசந்தி பக்கம் திரும்புகிறது போலும். தென் கிழக்கு ஆசியாவில் அமைந்திருக்கிறது மலாக... மேலும் பார்க்க

`தென்மாநிலங்களின் உரிமைக்கே உலையா?' - தொகுதி மறுவரையறை: அவசியமா... ஆபத்தா?

எதிர்க்கும் கட்சிகள்தொகுதி மறுவரையறைமத்திய அரசு நாளை (ஏப்ரல் 16) முதல் 18 வரை நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்துக்கு அழைப்பு எதிர்க்கட்சிகளுக்கு விடுத்திருக்கிறது. தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்க மாநிலச் சட... மேலும் பார்க்க

`கலைஞர் கனவு இல்லம் திட்டத்தால் தலைநிமிர்ந்து நிற்பதை பார்க்கும்போது...'- தங்கம் தென்னரசு பெருமிதம்!

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே உள்ள கே.வேலாயுதபுரம் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியின்போது, அப்பகுதியைச் சேர்ந்த ராணி தனது சேதமடைந்த வீட்டைப் பற்றி அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் 2024 நவம்பர் மா... மேலும் பார்க்க

ஹார்முஸ் ஜலசந்தி அமெரிக்காவால் முற்றுகை; இருந்தும், சீன கப்பல் பயணிக்கிறது - இது எப்படிச் சாத்தியம்?

கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 12), ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல்கள் உள்நுழையவும், வெளியே போகவும் முடியாதவாறு அமெரிக்கா தடுக்கும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்திருந்தார். அதன் தொடர்ச்சியாக, அம... மேலும் பார்க்க