செய்திகள் :

’நேற்று அதிகாரிகளை கண்டித்து போராட்டம், இன்று பாராட்டு’ – ஒரே நாளில் மாறிய அம்மன் அர்ச்சுணன்!

post image

கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் அம்மன் அர்ச்சுணன், ராம் நகர் பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் வாக்குப்பதிவை பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், “தேர்தல் அமைதியாக நல்ல முறையில் நடக்கிறது. தெற்கு தொகுதியில் வாக்குப்பதிவு 80 சதவீதம் வரும். நேற்று நான் சொன்ன குற்றச்சாட்டுகளில் மாற்றம் இல்லை. நான் குற்றச்சாட்டு சொல்லவில்லை எனில், தேர்தல் அமைதியாக நடந்திருக்காது. போலீஸ் எல்லோரும் அலார்ட்டாக இருந்தார்கள். அதிகாரிகள் இன்று சரியாக செயல்பட்டு இருப்பதை பாராட்டுகிறேன்.

அம்மன் அர்ச்சுணன்
அம்மன் அர்ச்சுணன்

எனக்கு பொய் பேசும் பழக்கம் இல்லை. வேட்பாளராக என்னை அறிவித்தபோது, சொன்னதையே இப்போதும் சொல்கிறேன். 1000 சதவீதம் நான் தான் வெற்றி பெறுவேன். இளைஞர்கள் அதிகமாக அ.தி.மு.க-விற்கு ஓட்டு போடதான் வந்துள்ளார்கள். இளைஞர்களின் எழுச்சி நாயகன் எடப்பாடி பழனிசாமி, எஸ்.பி. வேலுமணி தான். இதை சிரிப்பதற்காக சொல்லவில்லை. அவர் தான் ஆல் பாஸ், லேப்டாப் என அத்தனை திட்டமும் தந்தார். எஸ்.ஐ.ஆரால் வாக்குப்பதிவு சதவீதம் அதிகரித்ததா என எனக்கு தெரியாது. 5 ஆண்டு கஷ்டத்தால் வெகுண்டெழுந்த மக்கள் அ.தி.மு.க. ஆட்சிக்கு வர வேண்டுமென ஓட்டு போட்டுள்ளார்கள். இளைஞர்கள் விரும்பும் மாற்றம் எடப்பாடி தான்” என்றார். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோவை தெற்கு தொகுதி தேர்தலை ரத்து செய்யக்கோரியும், அதிகாரிகள் முறையாக செயல்படவில்லை எனவும் அம்மன் அர்ச்சுணன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

'ஜனநாயகத்தின் புதிய குரல்' வாக்களித்த முதல் தலைமுறை வாக்காளர்கள்!

முதல் தலைமுறை வாக்காளர்முதல் தலைமுறை வாக்காளர்முதல் தலைமுறை வாக்காளர்முதல் தலைமுறை வாக்காளர்முதல் தலைமுறை வாக்காளர்முதல் தலைமுறை வாக்காளர்முதல் தலைமுறை வாக்காளர்முதல் தலைமுறை வாக்காளர்முதல் தலைமுறை வா... மேலும் பார்க்க

’மஞ்சள் துண்டு போடுவதில் என்ன பிரச்சனை?’ – அதிகாரிகளிடம் கடுகடுத்த செந்தில் பாலாஜி!

கோவை தெற்கு தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி மையங்களுக்கு வந்த தி.மு.க பூத் ஏஜெண்டுகள் மஞ்சள் நிற துண்டு அணிந்து வந்தனர். சில இடங்களில் மஞ்சள் துண்டு அணிய அனுமதிக்கப்பட்ட நிலையில், சில இடங்களில் மஞ்சள... மேலும் பார்க்க

"சினிமா என்பது வேறு, அரசியல் என்பது வேறு" – வானதி சீனிவாசன் காட்டம்

கோவை சிவானந்த காலனி பகுதியில் உள்ள காமராஜர் பள்ளியில் பா.ஜ.க தேசிய மகளிர் அணித் தலைவர் வானதி சீனிவாசன் வாக்களித்தார்.பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், “2026 சட்டமன்றத் தேர்தல் வாக்கு பதி... மேலும் பார்க்க

"வாக்களிக்க வெள்ளை சட்டை, பிரவுன் பேண்ட் அணிந்து வந்தது குறியீடா?" – அண்ணாமலை விளக்கம்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பி.எஸ்.ஜி. கலை கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில், பா.ஜ.க முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை வாக்களித்தார்.பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவ... மேலும் பார்க்க

‘வணக்கம் தமிழ்நாடு மக்களே’ – கோவையில் வாக்காளர்களை வரவேற்ற ‘டினா’ ரோபோ!

கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 27 லட்சத்து 44 ஆயிரத்து 472 வாக்காளர்கள் உள்ளனர். வாக்காளர்கள் வாக்களிப்பதற்காக 1,065 இடங்களில் 3,540 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 182... மேலும் பார்க்க

ராமநாதபுரம்: தங்கள் வாக்கினைத் தங்களுக்கே செலுத்த முடியாத பிரதான கட்சி வேட்பாளர்கள்!

ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி, திருவாடானை, ராமநாதபுரம், முதுகுளத்தூர் என 4 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இவற்றில் தி.மு.க கூட்டணியில் தி.மு.க 3 தொகுதிகளிலும் காங்கிரஸ் ஒரு தொகுதியிலும் போட்டியிடுகி... மேலும் பார்க்க