செய்திகள் :

பகலில் படிப்பு, இரவு பெட்ரோல் பம்பில் வேலை; கல்வியைத் தொடர போராடும் மும்பை மாணவியின் நெகிழ்ச்சி கதை

post image

மும்பையைச் சேர்ந்த மாணவி ஒருவர் தனது படிப்புக்காக இரவு 10 மணி வரை பெட்ரோல் பம்ப் ஒன்றில் வேலை செய்வது அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.

மும்பையில் உள்ள ஷெல் பெட்ரோல் பம்ப் ஒன்றில் வினீத் என்பவர் தனது காருக்கு பெட்ரோல் நிரப்பச் சென்றார். மழை மற்றும் போக்குவரத்து நெருக்கடி காரணமாக அவர் 4 கிலோமீட்டர் தூரத்தை 45 நிமிடமாக தனது காரில் கடக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்.

இதனால் அருகில் இருக்கும் பெட்ரோல் பம்பில் பெட்ரோல் நிரப்ப சென்றபோது அங்கு பணியில் இருந்த இளம்பெண் ஒருவரிடம் மெதுவாக வினீத் பேச்சு கொடுத்தார். அப்போது அப்பெண் இந்தியில் பேசினார்.

பெட்ரோல் பம்ப்
பெட்ரோல் பம்ப்

ஆனால் அவர் தனது ஊர் மகாராஷ்டிரா மாநிலம் ராய்கட் மாவட்டம் என்றும் படிப்புக்காக மும்பை வந்திருப்பதாகவும் தெரிவித்தார். உடனே படிக்க வந்துவிட்டு எப்படி இந்த வேலை செய்கிறாய் என்று வினீத் கேட்டதற்கு, அந்த மாணவி பகலில் கல்லூரிக்குச் சென்று வந்த பிறகு மாலையில் இரவு 10 மணி வரை பெட்ரோல் பம்பில் வேலைக்குச் செல்வதாகத் தெரிவித்தார்.

வார இறுதி நாட்களில், கல்லூரிக் கட்டணத்தைச் செலுத்துவதற்குப் போதுமான வருமானம் ஈட்டுவதற்காக, காலை மற்றும் மாலை வேளைகளில் இரண்டு முறை வேலை செய்வதாகவும் குறிப்பிட்டார். அவரது அந்தச் செயலை கேட்டு ஆச்சரியப்பட்ட வினீத் தேவைப்பட்டால் உனது படிப்புக்கு தான் உதவுவதாகக் குறிப்பிட்டார்.

அம்மாணவியுடனான தனது உரையாடல் தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் வினீத் பதிவு செய்துள்ளார். அதனைப் பார்த்த பலரும் மாணவியின் செயலை வெகுவாகப் பாராட்டினர்.

அவரது கல்வி இலக்குகளை அடைவதில் அவரது வெற்றிக்குப் பலரும் வாழ்த்து தெரிவித்தனர், அவருடைய கடின உழைப்பு அவர் கனவு காணும் எதிர்காலத்தை உருவாக்க உதவும் என்று நம்பிக்கை தெரிவித்தனர்.

பல மேற்கத்திய நாடுகளில் பகுதிநேர வேலை பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டதையும் பல பயனர்கள் சுட்டிக்காட்டினர். இந்தியாவில் இதேபோன்ற வாய்ப்புகளை ஊக்குவிப்பது உயர் கல்வியைத் தொடரும் போது இளைஞர்கள் அதிக நிதி ரீதியாகச் சுதந்திரமாக இருக்க உதவும் என்று பலரும் கருத்து தெரிவித்தனர்.

காவல் நிலைய வளாகத்திற்குள் போலீஸ் பைக்குகளுக்கு தீவைப்பு; அறந்தாங்கியில் பரபரப்பு!

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில் பேராவூரணி சாலையில் உள்ள காவல் நிலைய வளாகத்திற்குள் புகுந்து, நள்ளிரவில் 3 பைக்குகளுக்கு மர்ம நபர் தீ வைத்த சம்பவம், அப்பகுதியில் பெரும் பரப்பரப்பையும் அதிர்ச்சியை... மேலும் பார்க்க

`கணிதம் கடினமல்ல' கற்றலில் விளையாட்டை புகுத்திய இளைஞர்; வெறுப்பை உதறி கணிதத்தை விரும்பும் குழந்தைகள்

“கணிதம் கஷ்டம்… எனக்கு கணிதமே வராது!” — பள்ளி வகுப்பறைகளில் பல குழந்தைகளிடம் இருந்து கேட்கப்படும் வார்த்தைகள் இவை. ஆனால், கணிதத்தைப் புரிந்துகொள்வது கடினம் அல்ல; அதை கற்றுக்கொடுக்கும் முறையில்தான் மாற... மேலும் பார்க்க

தரையில் காலெடுத்து வைத்தால் எரியும் உடல்; குளத்திலேயே வசித்துவந்த சிறுவன் - மீட்ட ஆனந்த் அம்பானி!

மேற்கு வங்க மாநிலம், முர்ஷிதாபாத் அருகில் உள்ள பெல்தங்கா என்ற இடத்தைச் சேர்ந்த இக்பால் ஷேக் என்ற 16 வயது சிறுவன், கடந்த பல ஆண்டுகளாக தரையில் வாழும் நாட்களை விட அதிகமான நாட்களைக் குளத்து நீரில் கழித்து... மேலும் பார்க்க

1.5 டன் எடை, ரூ.5 லட்சம் விலை - அந்தியூர் கோயில் திருவிழாவில் கவனத்தை ஈர்த்த ஜாஃப்ராபாடி எருமை!

ஈரோடு மாவட்டம், அந்தியூர் புதுப்பாளையம் பகுதியில் அமைந்திருக்கிறது சிறப்பு வாய்ந்த குருநாத் சுவாமி திருக்கோயில். ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் தேர் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். தேர் திருவி... மேலும் பார்க்க

சாதாரணமாக தொடங்கிய ஒரு நாள் வேலை… முடிவில் கிடைத்தது ₹98 கோடி புதையல் - நடந்தது என்ன?

பெல்ஜியத்தில் பழைய கட்டடம் ஒன்றின் அருகே கழிவுநீர் குழாய் அமைக்கும் பணிக்காக நிலத்தைத் தோண்டிக் கொண்டிருந்த 18 வயது இளைஞருக்கு, சுமார் ₹98 கோடி மதிப்பிலான தங்கப் புதையல் கிடைத்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற... மேலும் பார்க்க

லஞ்ச ஊழல் வழக்கில் சிக்கியவருக்கு சிறந்த பணிக்கான விருது; ராமநாதபுரம் நகராட்சி சர்ச்சை!

நாட்டின் 80 வது சுதந்திர தினம் நேற்று நாடு முழவதும் கொண்டாடப்பட்டது. இந்த விழாவின்போது அரசு பணிகளிலும், பொது சேவைகளிலும் சிறந்த பணியாற்றியவர்களுக்கு சிறந்த பணிக்கான விருதுகளும் சான்றிதழ்களும் வழங்குவத... மேலும் பார்க்க