செய்திகள் :

`பக்குவமானவர்; அவர் திமுக-வில் இணைந்தால் வரவேற்பேன்!' - ஓபிஎஸ் குறித்து திருமாவளவன்

post image

திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன்,

"அ.தி.மு.க ஆட்சிக்கு வந்தால் கருணைத்தொகை பத்தாயிரம் ரூபாய் வழங்கப்படும் என எடப்பாடி தெரிவித்திருக்கிறார். தேர்தல் காலத்து வாக்குறுதிகள். வழக்கமான வாக்குறுதிகள். தி.மு.க ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் இந்த அறிவிப்பை செய்திருக்கலாம் என்று நினைக்கிறேன். இருந்தாலும்கூட இது தாக்கத்தையும் ஏற்படுத்தாது. தி.மு.க-க்கு எதிராக அ.தி.மு.க அறிவித்திருக்கிறது என்கிற புரிதல் மக்களுக்கு இருக்கும். எனவே, தேர்தலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. நிதி நிலைமை இப்படி இருக்கும் பொழுது இலவசம் அறிவித்தால் மாற்றத்தை தேடி மக்கள் செல்ல மாட்டார்களா என்று கேட்கிறீர்கள். இந்த கருத்தை தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளது விடுதலை சிறுத்தைகள். கல்வி, மருத்துவத்தை தவிர வேறு எதனையும் இலவசமாக வழங்கக் கூடாது எனக் கூறியுள்ளோம். தி.மு.க மகளிரை மேம்படுத்துவதற்காக உரிமை தொகையாக வழங்குகிறது. சமூகத்தில் மிகவும் தாழ்ந்த நிலையில், இருக்கிற அல்லது காலங்காலமாக வஞ்சிக்கப்பட்டு நிலையில் இருக்கின்ற அதிகாரம் இல்லாமல் இருக்கின்ற நிலையில்... அவர்களை மேம்படுத்தும் என்ற நிலையில் அந்த திட்டத்தை விடுதலை சிறுத்தை கட்சிகள் வரவேற்றது.

திருமாவளவன்

இதனால், ஏற்படுகிற நிதிச்சுமை என்பது சமாளிக்கக்கூடிய ஒன்றாக இருக்கிறது என்ற நம்பிக்கையில்தான் இந்த நிலைப்பாட்டை தி.மு.க மேற்கொண்டு இருக்கிறது என்று நம்புகிறேன். கடந்த காலத்தில் கடுமையாக நிதி நெருக்கடி சூழ்நிலையிலும் இந்திய ஒன்றிய அரசு, மாநிலத்திற்கு ஒதுக்க வேண்டிய நிதி பங்கீட்டை ஒதுக்காமல் தவிர்த்துக்கூட, தமிழகத்தின் மொத்த உற்பத்தி GDP-யை உயரச் செய்து இருக்கிறது. திமுக அரசு, பொருளாதார மேம்பாட்டை உறுதி செய்து இருக்கிறது என்பது அனைவரும் அறிந்தது. மீண்டும் தி.மு.க தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று தி.மு.க ஆட்சி அமைக்கும்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டு இருக்கிறதா என்று கேட்கிறீர்கள். ஒவ்வொரு கட்சியாக பேச்சுவார்த்தைக்கு அழைப்பார்கள். தொகுதியைப் பொறுத்தவரை அதனை தற்போது கூற முடியாது. பார்க்கலாம் எது எப்படி இருந்தாலும் எங்கள் கூட்டணியில் எந்த சிக்கலும் இல்லாதவாறு பார்த்துக் கொள்வது எங்களுக்கான பொறுப்பு, கடமை. விமர்சனம் இருக்கலாம். ஆனால், எங்களது கூட்டணி கட்டுக்கோப்பாக இருக்கும்.

தொகுதிப் பங்கீட்டில் எந்த சிக்கலும் இருக்காது. தி.மு.க கூட்டணி கல்லா பெட்டி கூட்டணி என்று விஜய் தெரிவித்துள்ளார் என்பது பற்றி கேட்கிறீர்கள். இந்த கேள்விக்கு விஜய் தலைமையான கட்சியினர்தான் பதில் கூறவேண்டும். ஓ.பன்னீர்செல்வம் மிகவும் உறுதியானவர். சகிப்புத்தன்மை உள்ளவர். சூழலுக்கு ஏற்ப முடிவுகளை எடுக்கும் பக்குவம் அவரிடத்தில் உண்டு. விட்டு கொடுத்துப் போகும் இடத்தில் அவர் இருக்கிறார். அ.தி.மு.க-வில் மீண்டும் தன்னை இணைத்துக் கொள்ள வேண்டும் என விருப்பம் தெரிவித்தார். ஆனால், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இதற்கு ஏன் முன்வரவில்லை என்று விளங்கவில்லை. அவர், தி.மு.க-வில் இணைந்தால் அதை வரவேற்கிறேன்" என்றார்.

`சேகர்பாபு பேசினது சங்கடமா போச்சு; உடனே துணை முதல்வர்..'- தவெக மேடையில் பாடியது குறித்து வேல்முருகன்

சமீபத்தில் தவெக-வின் மூன்றாமாண்டு தொடக்க விழா மேடையில் பாடகர் வேல்முருகன் விஜய்யைப் புகழ்ந்து பாடியது நினைவிருக்கலாம்.அவர் பாடிய பாடல் வரிகளில் திமுக ஆட்சியை விமர்சிக்கும் வகையில் 'கொள்ளையடித்தக் கூட்... மேலும் பார்க்க

ஆண்தாய் ஆனந்த் `டு' பிஸி ஆனந்த் - தவெக செயல் வீரர்கள் கூட்டத்தின் கலகல மொமென்ட்ஸ்! | TVK

தவெக-வின் செயல்வீரர்கள் கூட்டம் வில்லிவாக்கத்தில் நடந்திருந்தது. கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த், ஆதவ், செங்கோட்டையன் போன்ற முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில், சில ஜாலியான ரகளையான மொமெ... மேலும் பார்க்க

சென்னை: மின்சார ரயில் சேவை பாதிப்பு; அவதியுறும் பொதுமக்கள்; திமுக எம்.பி-க்கள் கண்டனம்!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைமேடை மறுசீரமைப்பு பணிகள் காரணமாக புறநகர் மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டு, பொதுமக்கள் கடும் சிரமத்தைச் சந்தித்து வருகின்றனர். ஏற்கெனவே 40 ரயில்கள் ரத்து செய்யப்ப... மேலும் பார்க்க

மாட்டிறைச்சி ஏற்றுமதியில் முன்னணி நிறுவனம்... பாஜக-வுக்கு ரூ.30 கோடி நன்கொடை அளித்த அல்லானா !

இந்தியாவில் குறிப்பாக வடமாநிலங்களில் மாட்டிறைச்சித் தொழிலுக்கு எதிராக சில இந்துத்துவா குழுக்கள் தொடர் போராட்டங்களையும், அதைக் காரணமாக வைத்து சிறுபான்மையினர் மீது தாக்குதல்களையும் நடத்தி வருவதாக குற்றச... மேலும் பார்க்க

எச்சரித்த எ.வ.வேலு; தட்டிக்கொடுத்த விஜய் - வேலூர் TVK வேட்பாளர் ரேஸில் முந்தும் வினோத் கண்ணன்!

வேலூர் அகரம்சேரியில், நேற்று நடைபெற்ற த.வெ.க நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டத்தில், வினோத் கண்ணன் என்பவர் விஜய்யின் கவனத்தை ஈர்த்து பேசுபொருளாகவும் மாறியிருக்கிறார். விஜய் பேசி முடித்தப் பிறகு அவருக்கு ... மேலும் பார்க்க

`அதிதீவிர சிகிச்சையில் நல்லகண்ணு' - ராஜீவ் காந்தி மருத்துவமனை அறிக்கை சொல்வது என்ன?

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, வயோதிகம் காரணமாக வீட்டில் ஓய்வில் இருந்தார். நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்ட அவருக்கு கடந்த சில மாதங்களாகவே உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. அவ்வப்போத... மேலும் பார்க்க