திரைத்துறையில் இடையூறு செய்பவர்கள் யார்?- நடிகர் சிவகார்த்திகேயன் அளித்த பதில்....
'பங்குகள் வாங்கும்போதும், விற்கும்போதும்' - SEBI பெயரில் புது மோசடி; அலர்ட் ஆகுங்க மக்களே!
'பணம் கேட்டால் கொடுக்காதீர்கள்' என்று தங்களது பெயரில் நடக்கும் மோசடி குறித்து அலர்ட் செய்துள்ளது செபி.
நேற்று செபி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிட்டுள்ளதாவது...
"செபியின் லெட்டர்பேடைப் பயன்படுத்தி, நிதி சட்டம் 2004-ன் கீழ், நிலுவையில் உள்ள STT (Securities Transaction Tax)-ஐ கட்டுமாறு மோசடி பேர்வழிகள் நோட்டீஸ் அனுப்புவது எங்களது கவனத்திற்கு வந்துள்ளது.
அது செபியின் நோட்டீஸ் அல்ல. இந்திய ரிசர்வ் வங்கியுடன் இந்த மாதிரியான எந்த நடவடிக்கைகளிலும் செபி இணைந்து செயல்படவில்லை. STT வரி பங்குகள் வாங்கும் போதும், விற்கும் போதும் விதிக்கப்பட்டு, புரோக்கர்களால் வாங்கப்பட்டு விடுகிறது.
மேலும், செபி அதிகாரி என்று கூறியும், செபி மெயில் ஐடி போன்ற ஐடியில் இருந்து மெசேஜ் அனுப்புவதும் நடந்து வருகிறது.
இதனால் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்" என்று தெரிவித்து, இந்த மோசடிகளில் இருந்து தப்பிக்க சில வழிகளையும் சொல்லியுள்ளது செபி...
1. செபியால் எடுக்கப்படும் அனைத்து நடவடிக்கைகளும் செபி வலைதளத்தில் உள்ளது. இதை Sebi > Enforcement-ல் செக் செய்யவும்.
2. ஆன்லைன் உத்தரவுகள், செட்டில்மென்டுகள், மீட்பு கட்டணம் போன்றவை siportal.sebi.gov.in-ல் தான் செய்யப்படும்.
3. Home > About > SEBI Directory - இப்படி செபி அதிகாரியின் தொடர்பு தகவல்களைத் தெரிந்துகொள்ளலாம்.
4. செபியில் இருந்து வரும் மெயில்கள் '@sebi.gov.in' - இந்த டொமைன் முகவரியில் இருந்து தான் வரும்.
5. செபியின் ஆபீஸ்களின் முகவரி Home > About > Addresses of Offices of SEBI'-ல் தெரிந்துகொள்ளுங்கள்.

















