Patrick Stewart: Star Trek, X-Men புகழ் நடிகர் பேட்ரிக் ஸ்டீவர்ட் காலமானார்
பங்குச் சந்தை: மேல ஏறுமா ஏறாதா? நம்பலாமா நம்பப்படாதா?
"எப்போ வருவேன், எப்படி வருவேன்னு தெரியாது... ஆனா வரவேண்டிய நேரத்துல கரெக்ட்டா வருவேன்!" - சூப்பர் ஸ்டாரின் இந்த டயலாக் மாதிரிதான் நம்ம இந்திய பங்குச் சந்தையின் தற்போதைய நிலையும்.
கடந்த 3 ஆண்டுகளாகவே இந்திய பங்குச் சந்தை பெரிய அளவில் மேலே ஏறாமல், ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள்ளேயே சுற்றிக் கொண்டிருக்கிறது.
உலக அளவில் அமெரிக்க பெடரல் வட்டி விகித மாற்றம், புவிசார் அரசியல் பதற்றங்கள், கச்சா எண்ணெய் விலை ஏற்றத்தாழ்வு எனச் சர்வதேச சந்தைகள் ‘அந்நியன்’ போல அடிக்கடி முகம் மாறிக்கொண்டிருக்கின்றன.
ஆனால் வரலாற்றுப் பக்கங்களைத் திருப்பிப் பார்த்தால், 2008 உலகப் பொருளாதார வீழ்ச்சி, 2020 கோவிட் சரிவு என எத்தனையோ புயல்களைத் தாண்டிதான் "பாத்துக்கலாம்... ஆரம்பிக்கலாமா!" எனக் கம்பேக் கொடுத்திருக்கிறது.
பங்குச் சந்தை: அடுத்த ‘பிளாக் பஸ்டர்’ காட்சி வருமா?
இந்திய நிறுவனங்களின் காலாண்டு லாபமும், நாட்டின் ஜிடிபி வளர்ச்சியும் வலுவாக இருந்தாலும், "நாம ஆசையா வாங்குன ஸ்டாக்ஸ் மட்டும் ஏன் இன்னும் நகர மாட்டேங்குது?" என்பதுதான் சராசரி முதலீட்டாளர்களின் மைண்ட் வாய்ஸ்.
"கஷ்டப்பட்டு சம்பாதிச்ச பணத்தை மியூச்சுவல் ஃபண்ட்லயும் பங்குகள்லயும் போட்டு வச்சிருக்கேன், ஆனா போர்ட்ஃபோலியோ அப்படியே நிற்குதே!" எனப் புலம்பும் முதலீட்டாளர்களும், "இப்போ மார்க்கெட்ல பணத்தைப் போடலாமா, எந்த செக்டார்ல லாபம் கிடைக்கும்?" என யோசிக்கும் NRI நண்பர்களும் ஏராளம்.
விட்றாதீங்க எப்போ!
இங்கேதான் ஒரு புதிய சிக்கல் உருவாகிறது: சந்தை தனது அடுத்த கட்டப் பாய்ச்சலுக்குத் தயாராகும் இந்த இடைப்பட்ட காலத்தில், உங்கள் பழைய போர்ட்ஃபோலியோவைச் சீரமைக்காமல் அப்படியே விட்டுவிட்டால், வரப்போகும் மாபெரும் 'புல் ரன்' (Bull Run) லாபத்தை நீங்கள் முற்றிலுமாகத் தவறவிடக்கூடும்!
இந்தக் குழப்பங்களுக்கு விடை கண்டு, உங்களுடைய போர்ட்ஃபோலியோவை மீண்டும் லாபப் பாதைக்குக் கொண்டு செல்ல இதோ இரண்டு சிறப்புக் கட்டணமில்லா நேரலை நிகழ்ச்சிகள்...

நிகழ்ச்சி 1: பங்கு சார்ந்த முதலீடுகளில் இப்போது பணத்தைப் போடலாமா? - NRI சிறப்பு நிகழ்ச்சி உங்கள் போர்ட்ஃபோலியோ வளராமல் இருந்தால் அடுத்து என்ன செய்ய வேண்டும்? மியூச்சுவல் ஃபண்ட்ஸ் & பங்குச் சந்தை பற்றிய வழிகாட்டல்.
நாள்: அக்டோபர் 31, 2026 (சனி) | நேரம்: மதியம் 12:30 - 02:00 மணி (IST)
பேச்சாளர்: ரெஜி தாமஸ், பங்குச் சந்தை நிபுணர்
நிகழ்ச்சி 2: பங்குச் சந்தை மேலே ஏறுமா? - மார்க்கெட் அப்டேட் கடந்த 3 ஆண்டுகளாகப் பெரிய அளவில் ஏறாத சந்தை, இனி மேலே ஏறுமா? பழைய முதலீடுகளைச் சரிபார்ப்பது மற்றும் புதிய முதலீடுகளைத் திட்டமிடுவது எப்படி?
நாள்: நவம்பர் 01, 2026 (ஞாயிறு) | நேரம்: காலை 11:00 - 12:30 மணி (IST)
பேச்சாளர்: டீம் லாபம்
தாமதிக்காமல் இப்போதே பதிவு செய்து உங்கள் நிதி எதிர்காலத்தைத் திட்டமிடுங்கள்!
















