செய்திகள் :

பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் பாலியல் வன்கொடுமை? பரவிய தகவல்; வெடித்த கலவரம்! - என்ன நடந்தது?

post image

பஞ்சாப்பில் உள்ள பக்வாராவில் இருக்கிறது லவ்லி புரொபஷனல் பல்கலைக்கழகம்.

இந்தப் பல்கலைக்கழக மாணவர்களிடையே சமூக வலைதளப் பதிவு ஒன்று அதிகம் ஷேர் செய்யப்பட்டிருக்கிறது.

அதில் அந்தப் பல்கலைக்கழக ஹாஸ்டலில் படிக்கும் மாணவி ஒருவருக்கு பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது என்று கூறப்பட்டிருக்கிறது.

அந்தப் போஸ்ட்டில் இந்தச் சம்பவம் சம்பந்தமாகப் பல்கலைக்கழகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.

இதையடுத்து, அந்தப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை

என்ன பிரச்னை?

போலீசார் தகவலின்படி, கடந்த 24-ம் தேதி, லவ்லி பல்கலைக்கழகத்தில் உள்ள ஜி3 ஹாஸ்டலில் தங்கியிருந்த மாணவி ஒருவருக்கு பாலியல் வன்கொடுமை நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆனால், அவருடைய பெயர் சரியாகத் தெரியவில்லை. அது குறித்த விசாரணை நடந்து வருகிறது.

அந்தச் சம்பவத்திற்குப் பிறகு குறிப்பிட்ட மாணவி தன்னுடைய வீட்டிற்குச் சென்றுவிட்டார் என்றும் கூறப்படுகிறது.

சம்பவம் நடந்து மூன்று நாள்களுக்கு மேல் ஆகியும் இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதே மாணவர்களின் போராட்டத்திற்கான காரணம்.

விசாரணை...

பாலியல் வன்கொடுமை சம்பவம் அந்தப் பல்கலைக்கழகத்தில் நடந்திருக்கிறதா என்பதற்கான எந்த ஆதாரமும் இதுவரை போலீசாருக்குக் கிடைக்கவில்லை.

இதனால், இந்த உண்மைத்தன்மை குறித்துப் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கலவரம்

நேற்று இரவு மாணவர்களின் போராட்டம் கலவரமாக மாறியுள்ளது.

இதையடுத்து நிர்வாகம் பல்கலைக்கழகத்தை இன்றிலிருந்து 10 நாள்களுக்கு மூடுவதாக அறிவித்துள்ளது.

மேலும், மிட் டேர்ம் தேர்வும் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.

கணவரின் 2வது திருமணத்துக்கு எதிர்ப்பு; ஒன்றரை ஆண்டுக்குப்பின் எலும்புகள் மீட்பு - சிக்கியது எப்படி?

நெல்லை மாவட்டம், கொண்டாநகரம் பகுதியைச் சேர்ந்தவர் மகாராஜன். இவரும், கடலூர் மாவட்டம் புதுப்பேட்டையைச் சேர்ந்த அமராவதி என்பவரும் கடந்த 2008-ம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு மக... மேலும் பார்க்க

`ரூ.200 சம்பளம்' - போதைப்பொருள் விற்பனை செய்ய 15 வயது சிறுவனை வேலைக்கு வைத்த மும்பை பெண் | அதிர்ச்சி

மும்பையில் சிறுவர்களைக்கூட போதைப்பொருள் விற்பனை செய்ய பயன்படுத்தும் சம்பவங்கள் அதிகரிக்க தொடங்கிவிட்டது. மும்பை தேவ்னார் பகுதியில் இரவு நேரத்தில் போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். கோவண்டி பக... மேலும் பார்க்க

`எங்களை யாரும் பாலியல் கொடுமை செய்யவில்லை; எல்லாம் கட்டுக்கதை'- பஞ்சாப் பல்கலை., மாணவிகள் விளக்கம்

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பக்வரா என்ற இடத்தில் இருக்கும் லவ்லி புரொபஷனல் பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் இரு மாணவிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகவும், அதில் ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்டதாகவும... மேலும் பார்க்க

எம்.டி.எம்.ஏ வழக்கில் நிபந்தனை ஜாமீனில் வந்த ஆசிரியை; காவல் நிலைய வளாகத்தில் கத்தியால் குத்திய நபர்!

கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டம், வடகரையில் எம்.டி.எம்.ஏ விற்பனை செய்த வழக்கில் பேராம்பிறா பி.ஆர்.சி சிறப்பு பள்ளி ஆசிரியை கீர்த்தனா, செறுவளூர் பள்ளி ஆசிரியை காவ்யா, கீர்த்தனாவுடன் சிறப்புப் பள்ளியில... மேலும் பார்க்க

’சினிமாவை மிஞ்சிய சேஸிங்’-கார் மேற்கூரையில் 40கி.மீ தொங்கியபடி சென்று கடத்தல் கும்பலை பிடித்த போலீஸ்

கோவை மாவட்டம், கோவில்பாளையம் காவல் நிலைய தலைமை காவலர் வேல்முருகன் மற்றும் உதவி ஆய்வாளர் விக்னேஷ் உள்ளிட்ட காவல் துறையினர், இன்று காலை வழக்கமான வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கர்நாடக மாநிலத... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி: "15 நாளா மகளைக் காணோம்; சீக்கிரம் கண்டுபுடிச்சு கொடுங்கய்யா" - கதறும் பெற்றோர்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே வசிக்கும் ராஜூ - நிர்மலா தம்பதியின் 15 வயது மகள் 10 ஆம் வகுப்பு முடித்துவிட்டு அப்பகுதியிலுள்ள அரசு ஐ.டி.ஐ-யில் முதலாமாண்டு படித்து வந்தார். மாணவி மாயம் கடந்த 10 ஆம் ... மேலும் பார்க்க