செய்திகள் :

'பணி நேரத்தில் மதுபோதை; அலுவலகத்தில் படுத்துறங்கிய அவலம்!' - துறையூர் அதிர்ச்சி

post image

திருச்சி மாவட்டம், துறையூர் வட்டத்திற்கு உட்பட்ட பாலகிருஷ்ணம்பட்டி கிழக்கு வருவாய் கிராமத்தின் கிராம நிர்வாக அலுவலராக (VAO) சின்னத்தம்பி பணியாற்றி வருகிறார். இவர், பணிநேரத்தில் மது போதையில் இருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பி. மேட்டூரைச் சேர்ந்த மேரி என்பவர் முதுமை காரணமாக கடந்த சனிக்கிழமை உயிரிழந்துள்ளார். அவரது பேரன் சதிஸ் ஒரு குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்ததால், இறுதிச் சடங்கில் பங்கேற்க பிணையில் வெளியே வர தேவையான ஆவணத்தில் கிராம நிர்வாக அலுவலரான சின்னத்தம்பியிடம் கையெழுத்து பெற குடும்பத்தினர் சென்றுள்ளனர்.

trichy

அப்போது, கிராம நிர்வாக அலுவலர் சின்னத்தம்பி மது போதையில் இருந்ததால் கையெழுத்து வழங்க முடியாத நிலையில் சின்னத்தம்பி இருந்துள்ளார் இதன் காரணமாக பேரன் சதிஸ் இறுதிச் சடங்கில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டதாகவும் தகவல் வெளியானது.. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் சின்னத்தம்பி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுச்சேரி: 625 வகை போலி மருந்துகள்… நாடு முழுவதும் சப்ளை! - அடுத்தடுத்து சிக்கும் உயரதிகாரிகள் ?

இந்தியாவின் முக்கிய மருந்து நிறுவனங்களில் ஒன்றான சன் ஃபார்மா (Sun Pharmaceutical Industries Limited),தங்களின் உயிர்காக்கும் மருந்துகள் புதுச்சேரியில் போலியாக உற்பத்தி செய்யப்படுவதாக கடந்த 2024-ம் ஆண்ட... மேலும் பார்க்க

தருமபுரி: 3 குழந்தைகளுடன் கிணற்றில் மிதந்த தாயின் சடலம்; சந்தேகம் கிளப்பும் கயிறு - போலீஸ் விசாரணை!

தருமபுரி அருகே 3 குழந்தைகள், தாய் என 4 பேரின் சடலங்கள் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட சம்பவம், அதிரச்சியை ஏற்படுத்தியுள்ளது.தற்கொலைதருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், தடங்கம் ஊராட்சி, தோக்கம்பட்டி கிர... மேலும் பார்க்க

10 வகுப்பு படித்துவிட்டு மருத்துவம் பார்த்த போலி மருத்துவர் கைது; நத்தத்தில் தொடரும் மோசடி

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பகுதிகளில் போலி மருத்துவர்கள் நடமாட்டம் அதிகம் உள்ளதாக மாவட்ட நிர்வாகத்திற்குப் புகார்கள் வந்தன. இதைத்தொடர்ந்து நத்தம் பகுதியில் திண்டுக்கல் மாவட்ட இணை இயக்குநர் நலப்பணிகள... மேலும் பார்க்க

கவின் ஆணவக்கொலை: சுர்ஜித்தின் தந்தை சரவணன் கூலிப்படையை ஏவி மற்றொரு கொலைக்குத் திட்டம்; பின்னணி என்ன?

மாற்றுத்திறனாளி உரிமை செயல்பாட்டாளரும் மாற்றுத்திறனாளி வழக்கறிஞருமான முருகானந்தம் என்பவர் கடந்த 2025-ம் ஆண்டு ஜூலை மாதம் பட்டப்பகலில் கூலிப்படையால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். தேன் மொழி மெட்ரிகுலேஷ... மேலும் பார்க்க

ரூ.15,000-க்கு வங்கிகளின் போலி செயலி விற்பனை - பள்ளி படிப்பை கூட முடிக்காதவர் சிக்கியதெப்படி?

நாடு முழுவதும் இணையதள மோசடிகள் அதிக அளவில் நடந்து வருகிறது. இந்த மோசடியில் அதிக அளவில் பெண்கள் மற்றும் முதியவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதுவும் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி இது போன்ற மோசடிகள் அதிக அ... மேலும் பார்க்க

மதுரை: "2 லட்சத்திற்கு மாதம் 20 ஆயிரம் வட்டி" - தற்கொலையில் முடிந்த கந்துவட்டி கொடுமை

மதுரை மாநகர் செல்லூர் கீழத்தோப்பு பகுதியைச் சேர்ந்த ராஜாராம், மாட்டுத்தாவணி காய்கறி சந்தையில் சுமை தூக்கும் தொழிலாளியாகப் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பிரேமா. இவர்களுக்கு இரண்டு பெண் பிள்ளைகளும் ஒ... மேலும் பார்க்க