செய்திகள் :

'பரப்புரை குழுவில கூட நாட்டாமை பெயர் இல்லை' -பாஜகவுக்கு எதிராக கொந்தளிக்கும் சரத்குமார் ஆதரவாளர்கள்!

post image

இரண்டாண்டுகளுக்கு முன்பு தன்னுடைய சமத்துவ மக்கள் கட்சியை கலைத்துவிட்டு பாஜகவில் இணைந்த நடிகர் சரத்குமார், திடீரென தன்னுடைய ஆதரவாளர்களை தனியாக திரட்டி சந்தித்திருக்கிறார். கூட்டத்தில் பாஜகவில் சரத்குமாருக்கு எந்த பொறுப்பும் கொடுக்கப்படாததால் அவரது ஆதரவாளர்கள் கொந்தளித்து பேசினர்.

சரத்குமார்
சரத்குமார்

சரத்குமார் முன்னிலையில் பேசிய ஆதரவாளர்கள், 'நாட்டாமை கட்சியில் சேர்ந்த உடனேயே நம் எல்லாருக்குமே பதவி வாங்கி கொடுக்க வேண்டுமென நினைத்தார். பலமுறை பாஜகவில் அதற்காக போராடினார். கடுமையான போராட்டத்துக்கு பிறகுதான் மாநில அளவில் 19 பொறுப்புகளையும் மற்ற பொறுப்புகளில் 80 பேருக்கும் மட்டுமே வாங்கி கொடுக்க முடிந்தது.

தலைவர் நம் சார்பில் 257 பேருக்கு பதவி வழங்கக் கோரி பாஜகவுக்கு லிஸ்ட் கொடுத்தார். ஆனால், மூன்றில் ஒரு பங்கு மட்டுமே நமக்கு கிடைத்தது. பாஜகவில் 68 மாவட்டத் தலைவர்கள் இருக்கிறார்கள். அதில் ஒரு நான்கு இடங்கள் நம்முடைய கட்சியினருக்கு கிடைத்திருக்க வேண்டும். அதையும் பாஜக கொடுக்கவில்லை. பெரும் இன்னல்களுக்கு பிறகுதான் சொற்ப ஆட்களையாவது தலைவர் பாஜகவில் பதவிக்கு கொண்டு வந்தார்.

ஆதரவாளர்களுடன் சரத்குமார்
ஆதரவாளர்களுடன் சரத்குமார்

ஆனால், அப்படிப்பட்ட தலைவருக்கு பாஜக 2 ஆண்டுகளாக எந்த பதவியும் கொடுக்கவில்லை. எங்களுக்கு பதவி கிடைக்கிறதோ இல்லையோ, தலைவருக்கு தேசிய அளவில் பதவி வேண்டும். அவர் அதிகாரத்துக்கு வர வேண்டும். பாதுகாவலர்களோடு சைரன் வைத்த வண்டியில் அவர் செல்ல வேண்டும். மத்திய அரசின் திட்டங்களை தமிழகத்தில் கொண்டு சேர்த்தவர் நம்முடைய தலைவர்தான். அவரை எல்லா ஊர் நிகழ்ச்சிகளுக்கும் பேச அழைக்கிறார்கள். ஆனால், என்ன பதவியில் என்ன பொறுப்பில் இருக்கிறோம் என கூறிக்கொண்டு தலைவரால் கூட்டத்துக்கு செல்ல முடியும்? இன்று காலை பாஜகவில் பரப்புரை குழு என ஒன்றை அறிவித்திருக்கிறார்கள். அதில் கூட தலைவர் பெயர் இல்லை. தென் மாவட்டங்களில் தலைவர் இறங்கினால் கூட்டம் அள்ளும். ஆனால், அதற்கு கூட தலைவரை பயன்படுத்தாமல் முடக்கிவிட்டார்கள். நம்முடை கட்சியை நாம் கலைத்திருக்கக்கூடாது' என்றனர்.

பெரம்பூரிலிருந்து பிரசாரம் தொடக்கம்; தொண்டர்களுடன் போட்டோ ஷூட்! - விஜய்யின் Election பிளான் என்ன?

சட்டமன்றத் தேர்தலுக்கான வேலைகளை தவெக முகாம் முடுக்கிவிட தொடங்கியிருக்கிறது. ஏற்கனவே, முதற்கட்டமாக 100 வேட்பாளர்களை உறுதி செய்திருக்கும் விஜய், அடுத்தக்கட்டமாக வேக வேகமாக பிரசாரத்தை தொடங்க ஆயத்தமாகி வர... மேலும் பார்க்க

`சிபிஎம் கட்சிக்கு 5 அல்லது 6 சீட்டுகளா?'- ஸ்டாலின் சொன்னது என்ன? - பெ.சண்முகம் பேட்டி

திமுக கூட்டணியில் தங்களுக்கு 6 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தி வரும் சிபிஎம் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் பெ.சண்முகம் அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து ... மேலும் பார்க்க

`புதுச்சேரியிலும் திராவிட மாடல் ஆட்சி' திமுக காங்கிரஸ் கூட்டணி இழுபறி; பின்னணியில் ஸ்டாலின் பிளான்

``புதுச்சேரிக்கு திராவிட மாடல் ஆட்சி தேவை...”புதுச்சேரி 2021 சட்டமன்றத் தேர்தலில் மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் காங்கிரஸ் 15 தொகுதிகளிலும், தி.மு.க 13 தொகுதிகளிலும் வி.சி.க மற்றும் இந்திய க... மேலும் பார்க்க

'என்னுடைய பொறுமைக்கும் எல்லை உண்டு.!' - பாஜகவுக்கு கெடு விதித்த சரத்குமார்

இரண்டாண்டுகளுக்கு முன்பு தன்னுடைய சமத்துவ மக்கள் கட்சியை கலைத்துவிட்டு பாஜகவில் இணைந்த நடிகர் சரத்குமார், திடீரென தன்னுடைய ஆதரவாளர்களை தனியாக திரட்டி சந்தித்திருக்கிறார். கூட்டத்தில் பாஜகவில் சரத்குமா... மேலும் பார்க்க

"திமுக கூட்டணியிலிருந்து அதிகாரபூர்வமாக விலகுகிறோம்"- த.வா.க தலைவர் வேல்முருகன் அதிரடி

தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்த வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமை கட்சி அதிருப்தியில் இருந்தது. அந்த கட்சியின் 10 அம்ச கோரிக்கையை ஏற்காதது மற்றும் கூடுதல் சீட் ஒதுக்க திமுக மறுப்பது தான... மேலும் பார்க்க

ஈரானிய எண்ணெயை இந்தியா வாங்கப் போகிறதா? 'குறுக்கே' நிற்கும் இரண்டு காரணங்கள் என்ன?

கடலில் நிற்கும் கப்பல்களில் உள்ள தடை செய்யப்பட்ட ஈரானிய எண்ணெயை வாங்கிக் கொள்ளுங்கள் என்று நேற்று முன்தினம் (மார்ச் 20) அமெரிக்கா 'அனுமதி' அளித்துள்ளது.அந்தந்த நாடுகள் ஈரானிய எண்ணெய் வாங்க அமெரிக்காவி... மேலும் பார்க்க