காங்கிரஸ்: கூட்டணி, தொகுதிப் பங்கீடு குறித்த ஆலோசனை; டெல்லிக்குச் செல்லும் செல்வ...
"பரஸ்பர மரியாதையை வெளிப்படுத்தும் அழகான செயல்" - நோபல் பரிசை வழங்கிய மச்சாடோ; நெகிழ்ந்த ட்ரம்ப்
வெனிசுலாவின் எதிர்க்கட்சி தலைவரான மரியா கொரினா மச்சாடோ தனக்கு வழங்கிய அமைதிக்கான நோபல் பரிசு பதக்கத்தை அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு வழங்கியதாகத் தெரிவித்திருக்கிறார்.
அடம் பிடித்த ட்ரம்ப்
தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு தர வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அடம் பிடித்துக்கொண்டே இருந்தார்.

பகிர்ந்துகொள்கிறேன்!
இதனிடையே வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ அமெரிக்காவின் அதிரடி ராணுவ நடவடிக்கையால் சிறைபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்நாட்டின் முக்கிய எதிர்க்கட்சித் தலைவியும் நோபல் பரிசு வென்றவருமான மரியா கொரினா மச்சாடோ, `எனக்கு கிடைத்த நோபல் பரிசை ட்ரம்ப்புடன் பகிர்ந்துகொள்கிறேன்' என்று தெரிவித்திருந்தார்.
நோபல் கமிட்டி எதிர்ப்பு
ஆனால் “ஒருமுறை அறிவிக்கப்பட்ட பரிசை மற்றொருவருக்கு மாற்றவோ, பகிரவோ அல்லது ஒருவரிடம் இருந்து பறிக்கவோ சட்டப்படி இடமில்லை" என்று மச்சாடோவின் கருத்துக்கு நோபல் கமிட்டி எதிர்ப்பு தெரிவித்திருந்தது.

நோபல் பரிசை வழங்கிய மச்சாடோ
இந்நிலையில் வெனிசுலாவின் எதிர்க்கட்சி தலைவரான மச்சாடோ வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ட்ரம்பை சந்தித்து தனக்கு வழங்கப்பட்ட நோபல் பரிசு பதக்கத்தை அவருக்கு வழங்கியிருக்கிறார்.
ட்ரம்ப் நெகிழ்ச்சி பதிவு
இதுதொடர்பாக தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டிருக்கும் ட்ரம்ப், " வெனிசுலாவைச் சேர்ந்த மரியா கொரினா மச்சாடோவை சந்தித்தது எனக்கு மிகப்பெரிய பெருமை. அவர் ஒரு சிறந்த பெண். பல துன்பங்களைக் கடந்து வந்திருக்கிறார்.
நான் செய்த பணிகளுக்காக தன்னுடைய அமைதிக்கான நோபல் பரிசை மரியா எனக்கு வழங்கினார். இது பரஸ்பர மரியாதையை வெளிப்படுத்தும் ஓர் அழகான செயல். நன்றி, மரியா!" என்று பதிவிட்டிருக்கிறார்.

ட்ரம்பிற்கு கொடுத்துவிட்டேன்!
செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய மச்சாடோ, " தனது நோபல் பரிசை ட்ரம்பிற்கு கொடுத்துவிட்டேன். இது அவருடைய தனித்துவமான அர்ப்பணிப்புக்கான அங்கீகாரமாகும். அதிபர் ட்ரம்பை நம்பலாம்" என்று தெரிவித்திருக்கிறார்.













