செய்திகள் :

"பரஸ்பர மரியாதையை வெளிப்படுத்தும் அழகான செயல்" - நோபல் பரிசை வழங்கிய மச்சாடோ; நெகிழ்ந்த ட்ரம்ப்

post image

வெனிசுலாவின் எதிர்க்கட்சி தலைவரான மரியா கொரினா மச்சாடோ தனக்கு வழங்கிய அமைதிக்கான நோபல் பரிசு பதக்கத்தை அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு வழங்கியதாகத் தெரிவித்திருக்கிறார்.

அடம் பிடித்த ட்ரம்ப்

தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு தர வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அடம் பிடித்துக்கொண்டே இருந்தார்.

மரியா கொரினா மச்சாடோ - ட்ரம்ப்
மரியா கொரினா மச்சாடோ - ட்ரம்ப்

பகிர்ந்துகொள்கிறேன்!

இதனிடையே வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ அமெரிக்காவின் அதிரடி ராணுவ நடவடிக்கையால் சிறைபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்நாட்டின் முக்கிய எதிர்க்கட்சித் தலைவியும் நோபல் பரிசு வென்றவருமான மரியா கொரினா மச்சாடோ, `எனக்கு கிடைத்த நோபல் பரிசை ட்ரம்ப்புடன் பகிர்ந்துகொள்கிறேன்' என்று தெரிவித்திருந்தார்.

நோபல் கமிட்டி எதிர்ப்பு

ஆனால் “ஒருமுறை அறிவிக்கப்பட்ட பரிசை மற்றொருவருக்கு மாற்றவோ, பகிரவோ அல்லது ஒருவரிடம் இருந்து பறிக்கவோ சட்டப்படி இடமில்லை" என்று மச்சாடோவின் கருத்துக்கு நோபல் கமிட்டி எதிர்ப்பு தெரிவித்திருந்தது.

மரியா கொரினா மச்சாடோ - ட்ரம்ப்
மரியா கொரினா மச்சாடோ - ட்ரம்ப்

நோபல் பரிசை வழங்கிய மச்சாடோ

இந்நிலையில் வெனிசுலாவின் எதிர்க்கட்சி தலைவரான மச்சாடோ வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ட்ரம்பை சந்தித்து தனக்கு வழங்கப்பட்ட நோபல் பரிசு பதக்கத்தை அவருக்கு வழங்கியிருக்கிறார்.

ட்ரம்ப் நெகிழ்ச்சி பதிவு

இதுதொடர்பாக தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டிருக்கும் ட்ரம்ப், " வெனிசுலாவைச் சேர்ந்த மரியா கொரினா மச்சாடோவை சந்தித்தது எனக்கு மிகப்பெரிய பெருமை. அவர் ஒரு சிறந்த பெண். பல துன்பங்களைக் கடந்து வந்திருக்கிறார்.

நான் செய்த பணிகளுக்காக தன்னுடைய அமைதிக்கான நோபல் பரிசை மரியா எனக்கு வழங்கினார். இது பரஸ்பர மரியாதையை வெளிப்படுத்தும் ஓர் அழகான செயல். நன்றி, மரியா!" என்று பதிவிட்டிருக்கிறார்.

மரியா கொரினா மச்சாடோ
மரியா கொரினா மச்சாடோ

ட்ரம்பிற்கு கொடுத்துவிட்டேன்!

செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய மச்சாடோ, " தனது நோபல் பரிசை ட்ரம்பிற்கு கொடுத்துவிட்டேன். இது அவருடைய தனித்துவமான அர்ப்பணிப்புக்கான அங்கீகாரமாகும். அதிபர் ட்ரம்பை நம்பலாம்" என்று தெரிவித்திருக்கிறார்.

Vibe With MKS: "எனக்கு பிடித்த கார்.!"- நினைவுகளைப் பகிர்ந்துக்கொண்ட மு.க.ஸ்டாலின்

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இளம் தலைமுறையினருடன் கலந்துரையாடும் ' Vibe With MKS' என்ற நிகழ்ச்சியின் வீடியோ வெளியாகி இருக்கிறது. இதில் மு.க.ஸ்டாலின் கார் தொடர்பாகப் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி இர... மேலும் பார்க்க

Trump: 75 நாடுகளுக்கான விசா சேவையை நிறுத்திய அமெரிக்கா; ட்ரம்பின் இந்த அதிரடி நடவடிக்கை ஏன்?

அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றதில் இருந்தே பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்தவகையில் தற்போது வரும் ஜனவரி 21-ம் தேதி முதல், 75 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு, குடியேற்ற விசா வழங்கும் நட... மேலும் பார்க்க

சபரிமலை தங்கம் கொள்ளை வழக்கு: அரசியல் கட்சியினர், அதிகாரிகள், தந்திரி என 12 பேர் கைது! அடுத்து என்ன?

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில் கருவறை மேற்கூரை, துவார பாலகர்கள் உள்ளிட்ட சிற்பங்களில் தங்கத் தகடு பதிக்க தொழிலதிபர் விஜய் மல்லையா 1998-ம் ஆண்டு சுமார் 30 கிலோ தங்கம் நன்கொடையாக வழங்கியிருந்தார். இதற்கிடை... மேலும் பார்க்க

Iran: இன்னொரு இலங்கையாகிறதா இரான்? - பொருளாதார நெருக்கடியும் அரசியல் ஆட்டமும்! | In-depth

முன்னாள் ஆசிரியர் , பிபிசி உலக சேவை, லண்டன்மணிவண்ணன் திருமலை(பொறுப்பு துறப்பு: இந்த கட்டுரையில் இடம்பெற்றிருக்கும் கருத்துக்கள் அனைத்தும் கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடனின் கருத்துக்கள் அ... மேலும் பார்க்க

I-PAC: ``மம்தா தலையீடா? அமலாக்கத்துறை அவசரமா?" - உச்ச நீதிமன்றத்தில் காரசார விவாதம்!

அரசியல் ஆலோசனை & தேர்தல் யுக்திகளை வகுக்கும் ‘ஐ-பேக்’ I-PAC நிறுவனத்தின் இயக்குநர் பிரதிக் ஜெயின். இவர் திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் தகவல் தொழில்நுட்ப அணியின் தலைவராகவும் இருக்கிறார். இந்த நிறுவன... மேலும் பார்க்க

தாக்கரே சகோதரர்களா... பாஜக, ஷிண்டே கூட்டணியா?- மும்பை மாநகராட்சி தேர்தலில் மக்கள் உற்சாக வாக்களிப்பு

மும்பை மாநகராட்சிக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. இன்று காலை 7.30 மணிக்கு தொடங்கி விருவிருப்பாக நடந்து வருகிறது. தேர்தல் வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே வாக்காளர்கள் வாக்குச்சாவடிகளில் நீண்ட வரிசைய... மேலும் பார்க்க