நினைவுச் சுவடுகள் : மைக்கில் முழங்கிய தலைவர்களும் மைதானங்களில் காத்திருந்த மக்கள...
Vibe With MKS: "எனக்கு பிடித்த கார்.!"- நினைவுகளைப் பகிர்ந்துக்கொண்ட மு.க.ஸ்டாலின்
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இளம் தலைமுறையினருடன் கலந்துரையாடும் ' Vibe With MKS' என்ற நிகழ்ச்சியின் வீடியோ வெளியாகி இருக்கிறது.
இதில் மு.க.ஸ்டாலின் கார் தொடர்பாகப் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி இருக்கிறது.
சமீபத்தில் மு.க.ஸ்டாலின் வின்டேஜ் காரில் உலா வந்த வீடியோ வைரலானதைச் சுட்டிக்காட்டி மதன் கார்க்கி கேள்வி எழுப்பி இருந்தார்.
அப்போது நினைவுகளைப் பகிர்ந்துக் கொண்ட மு.க.ஸ்டாலின், “தலைவர் கலைஞர் ஒருமுறை சினிமாவுக்கு பாடல்கள் எழுதுவதற்காக பெங்களூருக்கு சென்றார். அவருடன் நானும் சென்றிருந்தேன். வுட்லேண்ட்ஸ் ஹோட்டலுக்கு சென்றிருந்தோம்.

அப்போது கலைஞர் எழுதிக் கொண்டிருந்தார். அப்போது டிரைவர் என்னை அழைத்துப் போய் எதிரே இருக்கும் கப்பன் பார்க்கில் 'ஃபியட் செலக்ட்' காரில் எனக்கு கார் ஓட்டக் கற்றுக் கொடுத்தார்.
நான் முதலமைச்சர் ஆன பிறகு கார் ஓட்டுவதை விட்டுவிட்டேன். தொல்காப்பிய பூங்காவுக்கு தினமும் நடைபயிற்சிக்குப் போவேன். அப்படி நடைபயிற்சி போகும்போது வண்டியை (கார்) எடுத்து வந்தார்கள். வண்டி நல்லா இருந்தது. சரி ஓட்டிப் பார்க்கலாம் என்று வீடு வரை ஓட்டிக்கொண்டு போனேன். பழைய கார் மேல் எனக்கு ரொம்ப ஆர்வம் உண்டு.
கோயம்புத்தூரில் பழைய கார்களை நன்றாக பராமரித்துக்கொண்டிருப்பார்கள். கோயம்புத்தூர் போய் கார் வாக்கிகொண்டு இங்கே வந்து ஒரு ஆறு மாதம், 7 மாதம் ஓட்டுவேன். அதற்கு பிறகு விற்றுவிட்டு, மறுபடியும் பழைய கார் வாங்கப் போவேன்.
இளைஞரணியில் நான் பொறுப்பேற்ற பிறகு, தமிழ்நாடு முழுவதும் ஐந்து, ஆறு பேர் குழுவுடன் சுற்றுப் பயணம் போனேன். அப்படி போகும்போது டிரைவரை அடுத்த வண்டியில் வரசொல்லிவிட்டு, நான்தான் வண்டி ஓட்டிக்கொண்டு போவேன்.

அதிலும் இரவில் வண்டி ஓட்டுவதில் எனக்கு ரொம்ப பிரியம், என்னை நம்பி எல்லாரும் உட்கார்ந்துகொண்டிருப்பார்கள். டிரைவரை கார் எடுத்து திருப்பிவிடுவது, துடைத்து வைப்பது இதற்குதான் பயன்படுத்திக்கொண்டிருந்தோம். ஒரு நாள் டிரைவர் வேடிக்கையாக சொன்னார், சார் நான் கார் ஓட்டுவதையே மறந்துவிட்டேன், அதனால் நான் எங்காவது வேலைக்கு போகிறேன் என்று சொன்னார். அந்த மாதிரி எல்லாம் நடந்திருக்கிறது” என்று நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்.















