செய்திகள் :

பராசக்தி: ”அவதூறு பரப்புறாங்க; ரசிகர்களின் ரவுடித்தனம்.!” - சுதா கொங்கரா ஆதங்கம்

post image

'பராசக்தி' படத்திற்கு எதிராக சமூக வலைதளங்களில் அவதூறுகள் பரப்பப்படுவதாக இயக்குநர் சுதா கொங்கரா தெரிவித்திருக்கிறார்.

பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9 ஆம் தேதி விஜய்யின் கடைசி திரைப்படமான 'ஜனநாயகன்' வெளியாக இருந்தது.

பராசக்தி
பராசக்தி

அதேசமயத்தில், இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திக்கேயன், அதர்வா, ரவி மோகன், ஸ்ரீ லீலா நடித்த 'பராசக்தி' திரைப்படமும் ஜனவரி 10 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி 'பராசக்தி' படம் திரையரங்கில் வெளியாகிவிட்டது. ஆனால் 'ஜனநாயகன்' படம் தணிக்கை சான்றிதழ் சர்ச்சையால் வெளியாகவில்லை.

இந்நிலையில் தான் 'தி ஹாலிவுட் ரிப்போர்டர் இந்தியா’ பதிப்பக்கத்திற்கு பேட்டி அளித்த சுதா கொங்கரா, " ஒரு படத்திற்கு எதிராக தெரியாத ஐடிகளுக்குப் பின்னால் ஒளிந்துகொண்டு மோசமான வகையில் அவதூறு பரப்புகிறார்கள்.

ஜனநாயகன்
ஜனநாயகன்

அது எங்கிருந்து வருகிறது என்பது உங்களுக்குத் தெரியும். இந்த வகையான தாக்குதல்கள் அரசியல் சார்ந்தவை அல்ல. இது, படம் வெளியிடப்படாத (பொங்கலுக்கு) நடிகரின் ரசிகர்களிடமிருந்து வருகிறது. இந்த ரவுடித்தனம் மற்றும் குண்டர் கலாச்சாரத்திற்கு எதிராக நாம் போராட வேண்டியிருக்கிறது” என்று பேசியிருக்கிறார்.

மோடியுடன் பொங்கல் விழா : `ஜனநாயகன் எப்போது வெளியானாலும் கொண்டாட்டம்தான்' - சிவகார்த்த்திகேயன்

டெல்லியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இல்லத்தில் இன்று (ஜன.14) பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டிருக்கிறது. இந்த விழாவில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்று உரையாற்றியிருக்கிறார். 'ஒர... மேலும் பார்க்க

Parasakthi: "அம்மா இருந்திருந்தா ரொம்ப சந்தோஷப்பட்டிருப்பாங்க!" - கலங்கும் 'பராசக்தி' அய்யாகண்ணு

சிவகார்த்திகேயனின் 25வது படமான 'பராசக்தி' கடந்த வாரம் திரைக்கு வந்தது. மொழிப் போர் பற்றிய இத்திரைப்படத்தில் நடித்த அத்தனை நடிகர்களும் நடிப்பில் கச்சிதமான பக்கங்களைக் காட்டியிருந்தார்கள். முதன்மை கதாபா... மேலும் பார்க்க

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வீட்டில் பொங்கல் விழா - பிரதமருடன் 'பராசக்தி' படக்குழு பங்கேற்பு!

டெல்லியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இல்லத்தில் இன்று (ஜன.14) தமிழர் திருநாளான பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்றிருக்கிறார்.பிரதம... மேலும் பார்க்க

வா வாத்தியார்: ``என் பல்லை சிவக்குமார் சிறிதாக்கினார்; கார்த்தி பெரிதாக்கியிருக்கிறார்" - சத்யராஜ்

நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகி உள்ள 'வா வாத்தியார்' திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரித்துள்ளார். இந்த திரைப்படத்தை கடந்த ஆண்டு டிசம்பர் 12 ஆம் தேதி திரையரங்குகளில் ... மேலும் பார்க்க

வா வாத்தியார்: ``என் முதல் படத்துக்கே தடங்கல்... இது எனக்குப் புதிதல்ல" - நடிகர் கார்த்தி

நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகி உள்ள 'வா வாத்தியார்' திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரித்துள்ளார். இந்த திரைப்படத்தை கடந்த ஆண்டு டிசம்பர் 12 ஆம் தேதி திரையரங்குகளில் ... மேலும் பார்க்க