`பிளாஸ்டிக்குக்கு நோ; பப்பாளி தண்டில் ஸ்ட்ரா'- இளநீர் வியாபாரியின் Eco Friendly ...
மோடியுடன் பொங்கல் விழா : `ஜனநாயகன் எப்போது வெளியானாலும் கொண்டாட்டம்தான்' - சிவகார்த்த்திகேயன்
டெல்லியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இல்லத்தில் இன்று (ஜன.14) பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டிருக்கிறது.
இந்த விழாவில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்று உரையாற்றியிருக்கிறார்.
'ஒரே பாரதம், உன்னத பாரதம்' என்ற நோக்கத்துடன் நடைபெறும் இந்த விழாவில், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட தமிழக தலைவர்களும், பல்வேறு மாநிலங்களின் முக்கிய பிரதிநிதிகளும், சினிமா பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டிருக்கின்றனர்.

குறிப்பாக ஜி.வி பிரகாஷ், சிவகார்த்திகேயன், ரவி மோகன் உள்ளிட்ட 'பராசக்தி' படக்குழுவினர் இந்த விழாவில் கலந்துகொண்டிருக்கின்றனர்.
நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய சிவகார்த்திகேயன், "அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள். எல்லோருக்கும் இந்தப் பொங்கல் பண்டிகை மகிழ்ச்சிசையைத் தர வேண்டும். 'பராசக்தி' படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. நம்முடைய கலாச்சாரத்தை டெல்லியில் கொண்டாடுவது ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது.
பிரதமர் மோடியை முதல் முறை இன்று நேரில் சந்தித்தேன். அது மறக்க முடியாத தருணமாக இருந்தது. அவரை சந்தித்தது மகிழ்ச்சியாக இருந்தது. 'ஜனநாயகன்' எப்போது வெளியானாலும் கொண்டாட்டம் தான்" என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.
#Thiruvasagam was performed today in #Pongal2026 celebration at Delhi in front of our honourable prime minister @narendramodi sir … @DrLMurugan . Will launch it soon officially ❤️ pic.twitter.com/ldFiIPqeBA
— G.V.Prakash Kumar (@gvprakash) January 14, 2026
இந்த பொங்கல் நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் திருவாசகம் பாடலை அவரின் இசையில் பாடினார். .
இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், " மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மாண்புமிகு மத்திய அமைச்சர் எல். முருகன் முன்னிலையில் பொங்கல் விழாவில் திருவாசகத்தை அரங்கேற்றம் செய்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. மேலும், இது விரைவில் வெளியாகும்" என்று பதிவிட்டிருக்கிறார்.

















