Lokesh Kanagaraj: அல்லு அர்ஜூனை இயக்கும் லோகேஷ் கனகராஜ் - வெளியான அதிகாரப்பூர்வ ...
`புதிய சிந்தனைகளை வரவேற்போம்' ஜிவாமே ஷோரூமில் பொங்கல் கொண்டாட்டம் - நடிகை மேகா ஆகாஷ் பங்கேற்பு
பொங்கல் பண்டிகையின் மகிழ்ச்சியோடு நவீன பேஷனையும் இணைத்து, இந்தியாவின் நம்பர் 1 உள்ளாடை நிறுவனமான ஜிவாமே, சென்னை பீனிக்ஸ் மார்கெட்சிட்டி மாலில் உள்ள தனது ஷோரூமில் உற்சாகமான கொண்டாட்டத்தை நடத்தியது. இந்த விழாவை நடிகை மேகா ஆகாஷ் தொடங்கி வைத்தார்.
அவர் விழாவிற்கு சிறப்பு சேர்த்தது மட்டுமின்றி, வரும் 30-ந்தேதி தொடங்கவிருக்கும் ஜிவாமேவின் ‘கிராண்ட் லாஞ்சரி பெஸ்டிவல்’ குறித்தும் வாடிக்கையாளர்கள் இடையே பேசினார். வண்ணமயமான பொங்கல் விழாவுக்கு மத்தியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், ஜிவாமேவின் பல்வேறு வகையான உள்ளாடைகள், ஷேப்வேர், ஸ்லீப்வேர், லவுஞ்ச்வேர் மற்றும் விளையாட்டு உடைகள் காட்சிப்படுத்தப்பட்டன. இது வாடிக்கையாளர்கள் மற்றும் சமூக வலைதள பிரபலங்களை வெகுவாகக் கவர்ந்தது.

நிகழ்ச்சியில் நடிகை மேகா ஆகாஷ் பேசுகையில், “என்னைப் பொறுத்தவரை, தன்னம்பிக்கை என்பது நமக்கான வசதியில் இருந்தே தொடங்குகிறது. அதில் நமது உள்ளாடைகள் மிகப் பெரிய பங்கு வகிக்கின்றன. பெண்களின் எதார்த்தமான வாழ்க்கைக்கும், அன்றாடத் தேவைகளுக்கும் ஏற்றவாறு ஜிவாமே ஆடைகளை வடிவமைக்கும் விதம் எனக்கு மிகவும் பிடிக்கும். வரவிருக்கும் ‘கிராண்ட் லாஞ்சரி பெஸ்டிவல்’ மூலம், பெண்களுக்குப் பொருத்தமான, அழகான மற்றும் ஒவ்வொரு நாளும் தன்னம்பிக்கை அளிக்கும் உள்ளாடைகளை வழங்குவதை ஜிவாமே இன்னும் எளிதாக்குகிறது" என்று பேசினார்.
ஜிவாமே மார்க்கெட்டிங் தலைவர் தமன் பாலி பேசுகையில், "இந்தியப் பெண்கள், அவர்களின் தினசரி வாழ்க்கை முறை மற்றும் அவர்களின் முக்கியமான தருணங்களுக்கு ஏற்ப எங்களின் உள்ளாடைகள் தயாரிக்கப்பட்டு உள்ளது. சென்னை போன்ற நகரங்களில் பொங்கல் பண்டிகை என்பது எல்லோரும் ஒன்றுகூடும் நிகழ்வாகும். இந்தத் தருணத்தில் பெண்களுடன் இணைந்து கொண்டாடுவது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இது போன்ற நேரடி அனுபவங்கள் மிகுந்த உற்சாகத்தை அளிப்பதோடு வரவிருக்கும் ‘கிராண்ட் லாஞ்சரி பெஸ்டிவல்’ மூலம், பெண்களுக்குத் தேவையான புதிய உள்ளாடைகளை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறோம் என்பதையும் இந்த நிகழ்ச்சியின் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.

இந்த நிகழ்ச்சி ஜிவாமேவின் தயாரிப்புகள் பற்றிய கொள்கையை அனைவரின் கண்முன்னே கொண்டுவந்தது. இந்தியப் பெண்களின் அன்றாடத் தேவைகளுக்கு உதவும் வகையில், சிறந்த சிந்தனையுடன் கூடிய வடிவமைப்பும் புதுமையும் எவ்வாறு இணைகின்றன என்பதை இது எடுத்துக்காட்டியது. தயாரிப்பு நிபுணர்களின் நேரடி விளக்கங்கள் மற்றும் வழிகாட்டுதல்கள், பெண்களுக்குத் தன்னம்பிக்கை அளிப்பதிலும், அவர்கள் எந்தவிதத் தயக்கமும் இன்றி ஷாப்பிங் செய்யும் சூழலை ஏற்படுத்தியது.
இந்தப் பொங்கல் கொண்டாட்டத்தில் வாடிக்கையாளர்கள், சமூக வலைதள பிரபலங்கள் மற்றும் ஊடகத் துறையினர் கலந்து கொண்டனர். கலாச்சாரத்தோடு கூடிய சுவாரஸ்யமான நிகழ்ச்சிகளை வழங்க வேண்டும் என்ற ஜிவாமேயின் எண்ணத்தை பிரதிபலிக்கும் விதமாக இந்த நிகழ்ச்சி இருந்தது. அதே நேரத்தில், முக்கிய நகரங்களில் தங்கள் பிராண்டை பெரும்பாலான மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்ற இந்நிறுவனத்தின் உறுதிப்பாட்டையும் இது வெளிப்படுத்தியது.
விரைவில் ‘கிராண்ட் லாஞ்சரி பெஸ்டிவல்’ துவங்கவுள்ள நிலையில், உள்ளாடைகள் குறித்த பழைய கண்ணோட்டங்களை மாற்றுவதை ஜிவாமே தொடர்கிறது. பெண்களுக்கான வசதி, தன்னம்பிக்கை மற்றும் அவர்களுக்கானத் தேர்வுகள் ஆகியவற்றிற்கு இது முன்னுரிமை அளிக்கிறது. சிறந்த வடிவமைப்புகள் மற்றும் பிரபலமானவர்களின் ஆதரவு மூலம், பெண்கள் உள்ளாடைகளைத் தயக்கமின்றி நம்பிக்கையுடன் வாங்குவதற்கான சூழலை உருவாக்குவதே தங்கள் லட்சியம் என்பதை ஜிவாமே இந்த நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
About Zivame: Founded in 2011, Zivame has built a category-first model that seamlessly blends deep consumer insights with innovation, technology, and trend-driven design—all while keeping women’s comfort at its core. Come 2025, with a portfolio of over 30,000 styles across lingerie, sleepwear, shapewear, and activewear and more—in 100+ sizes—and a strong retail footprint of 170+ exclusive brand outlets across India, the brand is not just a retailer, but a trusted destination for women across age groups and geographies.
Since its inception, Zivame has consistently been at the forefront of innovation—from launching India’s first online FitCode to running breakthrough campaigns like Museum of Boobs. By combining tech-enabled solutions with deep consumer insight, Zivame has redefined intimatewear retail in India and built one of the most influential fashion-retail ecosystems in the country.


















