`பிளாஸ்டிக்குக்கு நோ; பப்பாளி தண்டில் ஸ்ட்ரா'- இளநீர் வியாபாரியின் Eco Friendly ...
BB Tamil 9: "எல்லாரும் நான் உன்னை அனுப்பிட்டேன்னு சொல்றாங்க" - வினோத்திடம் அழும் அரோரா
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கிறது.
கடந்த வாரம் நடத்த பணப்பெட்டி 2.0 டாஸ்க்கில் கானா வினோத் பணப்பெட்டியை எடுத்து சென்றார்.
தவிர சாண்ட்ரா எவிக்ஷனில் வெளியேறியிருக்கிறார்.
டாப்-4 போட்டியாளர்களாக அரோரா, விக்ரம், சபரி, திவ்யா இருக்கின்றனர்.

வெளியேறிய போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்கு மீண்டும் சென்றிருக்கின்றனர்.
இந்நிலையில் இன்று சாண்ட்ரா மற்றும் வினோத் பிக் பாஸ் வீட்டிற்கு சென்றிருக்கின்றனர்.
" எல்லாரும் நான் உன்னை அனுப்பிட்டேன்னு சொல்றாங்க" என அரோரா வினோத்திடம் சொல்லி அழுகிறார்.

"நான் உன்னை எதுவும் நினைக்கல. நானே தான் பணத்தை எடுத்தேன். ஒருவேளை 18 லட்சம் போயிருச்சேன்னு தான் இப்போ அழுகுறியா?" என வினோத் அரோராவை கிண்டலடிக்கிறார்.




















