செய்திகள் :

பள்ளியில் பிரியாணி சண்டை; 4 மணிநேரம் வெயிலில் நிற்க வைத்த ஆசிரியர்? - மாடியிலிருந்து குதித்த மாணவி

post image

ஹரியானா மாநிலம் பரிதாபாத்தில் உள்ள வித்யா நிகேதன் பள்ளியில் 11வது வகுப்பு படிக்கும் ஜான்வி(16) என்ற மாணவி பள்ளியின் மூன்றாவது மாடியில் இருந்து கீழே குதித்துவிட்டார். இதையடுத்து அம்மாணவி அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனலிக்காமல் இறந்து போனார். இது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்ற்னர். பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் இது தொடர்பான தகவல்களை சேகரித்து வருகின்றனர்.

இது குறித்து தற்கொலை செய்து கொண்ட மாணவியின் தந்தை பிரமோத் கூறுகையில், ''பள்ளி வகுப்பறையில் பிரியாணி சாப்பிடுவது தொடர்பாக மாணவிகளிடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இந்த சண்டையில் எனது மகளுக்கு தொடர்பு இல்லை என்று சக மாணவிகள் என்னிடம் தெரிவித்தனர்.

ஆனாலும் வகுப்பு ஆசிரியர் எனது மகளை நான்கு மணி நேரம் வகுப்புக்கு வெளியில் வெயிலில் நிற்கும்படி செய்து தண்டனை கொடுத்துள்ளார். அந்த தண்டனையால் எனது மகள் அவமானத்தில் பள்ளி கட்டிடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்''என்று தெரிவித்தார்.

ஆனால் இந்த குற்றச்சாட்டை பள்ளி நிர்வாகம் மறுத்துள்ளது. பள்ளி முதல்வர் ஆர்.கே. சர்மா இது குறித்து அளித்த பேட்டியில்,'' அந்த மாணவிக்குத் தண்டனை எதுவும் அளிக்கப்படவில்லை. கழிவறைக்குச் செல்ல வேண்டும் என்று கூறி அந்த மாணவி வகுப்பறையிலிருந்து வெளியேறினார். ஆனால், அவர் பள்ளியின் மூன்றாவது தளத்திற்குச் சென்று அங்கிருந்து கீழே குதித்தார்''என்று தெரிவித்துள்ளார்.

உண்மையில் என்ன நடந்தது என்று சக மாணவிகளிடம் போலீஸார் வாக்குமூலம் வாங்கி வருகின்றனர்.

தற்கொலை தடுப்பு மையம்

கேரளம்: ஒரு வயது குழந்தையின் கழுத்தை அறுத்து கொன்ற தாய்; திருமண நாளில் இளம்பெண் செய்த கொடூரம்

கேரள மாநிலம் ​திருவனந்தபுரம் மாவட்டம் விளவூர்க்கல் பொற்றா பகுதியைச் சேர்ந்தவர் அபிஜித். மருத்துவப் பிரதிநிதியாகப் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கிறிஸ்டி (29). இவர்களுக்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பு... மேலும் பார்க்க

காட்பாடி: தேவாலய கட்டுமானப் பணி விபத்தில் 3 பேர் பலி; ஒப்பந்ததாரர் மீது வழக்குப் பதிவு!

வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த ஆந்திர மாநில எல்லையில் மந்தி கிருஷ்ணாபுரம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில், புதிதாக சி.எஸ்.ஐ தேவாலயம் கட்டும் பணிகள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில், நேற்று மாலை கான்க... மேலும் பார்க்க

ஈரோடு: 3.50 ஏக்கர் நிலத்தை ரிஜிஸ்டர் செய்ய ரூ.7 லட்சம் லஞ்சம்; சப்-ரிஜிஸ்டர், பத்திர எழுத்தர் கைது

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி ராயர் பாளையத்தைச் சேர்ந்தவர் விவசாயி கார்த்திக். இவருக்குச் சொந்தமான மூன்றரை ஏக்கர் நிலத்தைப் பதிவு செய்வதற்காக கவுந்தப்பாடி சப்-ரிஜிஸ்டர் சங்கரை அணுகியுள்ளார். 3.50 ஏக்கர்... மேலும் பார்க்க

சென்னை: 'ஆபாச செய்கை, போட்டோ மார்பிங்' - GST பெண் ஆபீஸருக்கு செக்ஸ் டார்ச்சர்; சக அதிகாரி கைது

சென்னை முகப்பேரில் ஜி.எஸ்.டி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் அதிகாரியாக ஆந்திராவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் பணியாற்றி வருகிறார். இவருடன் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த சவுரவ் என்பவரும் அத... மேலும் பார்க்க

பிரதீப் ராஜ் கொலை: 'கந்துவட்டி பிரச்னை; விநாயகர் சிலை' - சென்னை துணை நடிகர் கொலையின் பின்னணி என்ன?

சென்னை திருவொற்றியூர் மேற்கு மாடவீதியைச் சேர்ந்தவர் ராணி. இவரின் மகன் பிரதீப்ராஜ் (34). இவர் துணை நடிகராகவும் சென்னை துறைமுகத்தில் ஒப்பந்த அடிப்படையிலும் வேலைப்பார்த்து வந்தார். இந்தநிலையில் சில தினங்... மேலும் பார்க்க

சென்னை: பள்ளி மாணவிக்கு `ஐ லவ் யூ' சொன்ன ஆசிரியர் - போக்சோவில் கைதான பின்னணி!

சென்னை, அரும்பாக்கம் பகுதியில் இயங்கி வரும் பிரபல தனியார் பள்ளியில், 11-ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி, இன்ஸ்டாகிராமைப் பயன்படுத்தி வந்தார். அவரின் இன்ஸ்டாவுக்கு தொடர்ந்து காதல் மெசேஜ்கள் வந்து கொண்ட... மேலும் பார்க்க