செய்திகள் :

பள்ளிவாசல் திறப்பு விழாவிற்கு கோவிலிலிருந்து சீர்வரிசை; நெகிழ வைத்த மதுரை தேனூர் கிராமம் மக்கள்

post image

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள தேனூர் கிராமத்தில் அனைத்துச் சமூக மக்களும் ஒற்றுமையோடு மத நல்லிணக்கத்தோடு வாழ்ந்து வருகின்றனர். குறிப்பாக தேனூர் கிராமத்தில் நடைபெற்ற பள்ளி வாசல் திறப்பு விழாவில் கிராமப் பொதுமக்கள் சீர் வழங்கும் விழா நடைபெற்றது

சுந்தரவல்லி அம்மன் கோவிலில் இருந்து கிராமத்தினர் ஊர்வலமாக பட்டாசுகள் வெடித்து சீர்வரிசை எடுத்துக் கொண்டு பள்ளிவாசலுக்கு வந்து தங்களது அன்பைப் பரிமாறிக் கொண்டனர்.

அனைத்துச் சமுதாய மக்களும் ஒற்றுமையோடு வாழ வேண்டும் என்று நோக்கத்தோடு பள்ளிவாசல் திறப்பு விழாவில் கலந்து கொண்டதாக கிராமப் பெரியவர்கள் கூறினார்கள்.  இதேபோல் கடந்த மாதம் இந்தக் கிராமத்தில் நடைபெற்ற சுந்தரவல்லி அம்மன் கோவில் புரட்டாசி பொங்கல் திருவிழாவில் பால்குட அக்னி சட்டி நிகழ்ச்சியில் இஸ்லாமியப் பொதுமக்கள் சர்பத் மோர் வழங்கி மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கிய நிலையில் தற்போது நடைபெற்ற பள்ளிவாசல் திறப்பு விழாவில் இந்துக்கள் சீர்வரிசை கொண்டு வந்து மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்தியுள்ளது.

மதுரை பள்ளி வாசல் திறப்பு விழா
மதுரை பள்ளி வாசல் திறப்பு விழா

வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்தியாவின் தேச ஒருமைப்பாட்டையும் ஒற்றுமையையும் நினைவுபடுத்துவதாக இந்த நிகழ்ச்சி அமைந்தது சீர் கொண்டு வந்ததும் இந்து சமூகத்தைச் சேர்ந்த கிராமப் பெரியவர்களுக்கு இஸ்லாமிய நிர்வாகிகள் சால்வை அணிவித்தும் இஸ்லாமியக் குழந்தைகள் அன்பளிப்புகள் வழங்கியும் இளைஞர்கள் வாசல் வரை வந்து வரவேற்று பள்ளிவாசலுக்குள் அழைத்துச் சென்றதும் அங்கு இருந்தவர்கள் மனதில் நெகழ்ச்சியை ஏற்படுத்தியது.

சுமார் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக இந்தக் கிராமத்தில் மத நல்லிணக்கத்திற்கு அடையாளமாக இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்று வருவதாக கிராம பெரியவர்கள் கூறினார்கள்.

குலசை தசரா திருவிழா: விண்ணைப் பிளந்த பக்தர்களின் காளி கோஷம்; விமரிசையாக நடந்த மகிஷாசூரசம்ஹாரம்

இந்தியாவில் மைசூருக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம், ”குலசை” என்றழைக்கப்படும் குலசேகரன்பட்டினம், அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர் சமேத முத்தாரம்மன் திருக்கோயிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மா... மேலும் பார்க்க

மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் நவராத்திரி திருவிழா 9ம்நாள்: அன்னை மீனாட்சி சிவபூசை திருக்கோலம்

நவராத்திரி_திருவிழா 9ம்நாள் நவராத்திரி_திருவிழா 9ம்நாள் நவராத்திரி_திருவிழா 9ம்நாள் நவராத்திரி_திருவிழா 9ம்நாள் நவராத்திரி_திருவிழா 9ம்நாள் நவராத்திரி_திருவிழா 9ம்நாள் நவராத்திரி_திருவிழா 9ம்நாள் நவரா... மேலும் பார்க்க

தேவி கன்னியாகுமரி அம்மன் கோயில்: நவராத்திரியில் அவசியம் தரிசனம் செய்ய வேண்டிய அம்மன் தலம்!

சக்தி பீடங்களில் ஒன்றான கன்னியாகுமரி, திருநெல்வேலியிலிருந்து 82 கி.மீ. தூரத்திலும், நாகர்கோவிலிலிருந்து 19 கி.மீ. தூரத்திலும் அமைந்துள்ளது. முன்னொரு காலத்தில் பகன், முகன் என்ற அசுரர் இருவர் தேவர்களுக்... மேலும் பார்க்க

வேலூர் ஸ்ரீஜலகண்டேஸ்வரர் திருக்கோயிலில் சுயம்வர கலாபார்வதி ஹோமம்... நீங்களும் சங்கல்பிக்கலாம்!

வேலூர் என்றதும் சட்டென்று நினைவுக்கு வருவது, சுட்டெரிக்கும் வெயிலும், சுபிட்சத்தை அருளும் ஸ்ரீஜலகண்டேஸ்வரர் திருக்கோயிலும்தான். வேலூரின் மையப் பகுதியில் உள்ள அந்த பிரமாண்டமான கோட்டையைக் காண சுற்றுலாப்... மேலும் பார்க்க

இங்கே சுந்தரர் பதிகம்பாடி ஈசனை வேண்டினால் வேண்டும் செல்வம் கிடைக்கும் - நாகை காரணேஸ்வரர் மகிமைகள்!

நாகப்பட்டினம், தமிழகக் கடற்கரை நகரங்களில் புகழ்பெற்றது. வரலாற்றுச் சிறப்பு மிக்கது. வெளிநாட்டவரோடு சோழ மன்னர்கள் கடல் வணிகம் செய்த துறைமுகப் பட்டினம். நாகர் இன மக்கள் நிரம்ப வாழ்ந்ததால், இப்பெயர் பெற்... மேலும் பார்க்க

நெல்லை: புகழ்பெற்ற பாளையங்கோட்டை தசரா திருவிழா தொடக்கம்; அணிவகுத்த அம்மன் சப்பரங்கள் | Photo Album

நெல்லை: புகழ் பெற்ற பாளையங்கோட்டை தசரா திருவிழா தொடக்கம்! அணிவகுத்து காட்சியளித்த அம்மன் சப்பரங்கள்.!குலசை தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்; விண்ணை முட்டிய 'ஓம் காளி ஜெய் காளி' முழக்கம் மேலும் பார்க்க