செய்திகள் :

'பஸ் எல்.இ.டியில் என்ன எழுதியிருக்கிறது?' - MTC பஸ் தகராறில் முதியவரை கொன்ற போதையில் இருந்த இளைஞன்

post image

'பஸ் எல்.இ.டியில் என்ன எழுதியிருக்கிறது' என்று கேட்டு தகராறு ஆகி, சென்னையில் ஒரு கொலை நடந்துள்ளது.

சென்னை தாம்பரம் பஸ் ஸ்டாண்டில் 25 வயதான இளைஞர் அமர்நாத் 70-G மாநகர பஸ்ஸில் ஏறியுள்ளார்.

அதே பஸ்ஸில் 74 வயதான சந்திரசேகரன் தாம்பரம் MEPZ பஸ் ஸ்டாப்பில் ஏறியிருக்கிறார்.

அமர்நாத் மற்றும் சந்திரசேகரன் அருகருகே அமர்ந்து பயணித்துள்ளனர்.

சில நிமிடங்களில் அமர்நாத் சந்திரசேகரனிடம் பஸ்ஸில் உள்ள எல்.இ.டியில் எந்த இடம் எழுதியிருக்கிறது என்று கேட்டுள்ளார்.

கொலை
கொலை

சந்திரசேகரனுக்கு படிக்க தெரியாததால், கண்டக்டரிடம் கேட்க சொல்லியுள்ளார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து கண்டக்டர் சந்திரசேகரனை வேறு சீட்டில் சென்று அமர கூறியிருக்கிறார்.

அதற்காக சந்திரசேகரன் எழுந்த போது, அவரை அமர்நாத் முகத்திலும், நெஞ்சிலும் தாக்கியுள்ளார். இதில் சந்திரசேகரன் மயங்கி விழுந்துள்ளார்.

உடனே பஸ் நிறுத்தப்பட்டு, சந்திரசேகரனை ஒரு பயணி மருத்துவமனைக்கு ஆட்டோவில் அழைத்து சென்றுள்ளார்.

அவரை சோதித்து பார்த்த மருத்துவர் ஏற்கெனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

அமர்நாத் தப்பிக்க முயல, சக பயணிகள் அவரை பிடித்து போலீஸில் ஒப்படைத்துள்ளனர்.

அமர்நாத் போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

இதுவரையில் வெளியாகி உள்ள தகவலின் படி, அமர்நாத் விழுப்புரத்தை சேர்ந்தவர். இவர் சென்னையில் கட்டட தொழிலாளராக பணிபுரிந்து வருகிறார்.

சந்திரசேகரன் படப்பையை சேர்ந்த எலெக்ட்ரீசியன் ஆவார்.

மகளிர் விடுதிக்குள் நுழைந்து மாணவியை வன்கொடுமை செய்த மளிகைக்கடைக்காரர் - ஒடிசாவில் அதிர்ச்சி

ஒடிசா மாநிலம் புபனேஷ்வரில் உள்ள கங்காபாடா என்ற இடத்தில் மளிகைக்கடை வைத்திருப்பவர் தீபக் பிரதான்(67). இவரது கடைக்கு அருகில் மகளிர் விடுதி ஒன்று இருக்கிறது. அடிக்கடி அவரது கடை வழியாக பெண்கள் மற்றும் மாண... மேலும் பார்க்க

மும்பையில் நள்ளிரவு டி.வி பார்ப்பதில் தகராறு: மனைவி, மகள், பேத்தியை கத்தியால் குத்திய முதியவர் கைது

மும்பை தானேயில் உள்ள ரபோடி கிராந்தி நகரில் வசிப்பவர் முகமது தாரிக் கான்(64). இவர் தனது மனைவி மற்றும் மகள், பேத்தியுடன் வசித்து வந்தார். சம்பத்தன்று முகமது தாரிக் கான் பேத்திக்கு பிறந்தநாள் ஆகும். இதனா... மேலும் பார்க்க

உத்தரப் பிரதேசம்: பிறந்தநாள் பார்ட்டியில் கேக்கை முகத்தில் தடவியதால் துப்பாக்கிச்சூடு; 3 பேர் பலி

உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்ஷாஹர் என்ற இடத்தில் அங்குள்ள ஜிம் ஒன்றில் பிறந்தநாள் பார்ட்டி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்தப் பார்ட்டிக்கு நண்பர்கள், உறவினர்கள் மற்றும் ஜிம்மிற்கு அடிக்க... மேலும் பார்க்க

தேனி: பட்டாசு ஆலையில் வெடி விபத்து; இரு இளைஞர்கள் உயிரிழப்பு; தொடரும் விபத்துகள்

தேனி மாவட்டம் கம்பம் அடுத்துள்ள காட்டுப்பள்ளி வாசல் தெருவில் திருப்பதி என்பவருக்குச் சொந்தமான லட்சுமி பட்டாசு தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் அய்யப்பன், நாகர்ஜுன், சூர்யா, தினேஷ் (எ) தீனா... மேலும் பார்க்க

திருவள்ளூர்: ஏசி வாங்கிக் கொடுக்காததால் மனைவி எடுத்த விபரீத முடிவு? கணவரிடம் விசாரணை; என்ன நடந்தது?

திருவள்ளூரை அடுத்த பூண்டி ஜெயராம் தெருவைச் சேர்ந்தவர் ஆகாஷ் (26). திருவள்ளூர் மாவட்டம், புல்லரம்பாக்கத்தைச் சேர்ந்தவர் மோனிகா (25). இவர்கள் இருவரும் பூண்டியில் உள்ள ஒரு பள்ளியில் படித்தனர். அப்போது இர... மேலும் பார்க்க

5 சிறுமிகளுக்குப் பாலியல் வன்கொடுமை; குற்றவாளிக்கு 5 மரண தண்டனை; சிவகங்கையை அதிர வைத்த போக்சோ வழக்கு

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகேயுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த விறகு வெட்டும் தொழிலாளர் சந்திரன் (49). இவருக்குத் திருமணமாகி ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். ஒரு சாதாரண குடும்பஸ்தனாக வலம் வந்த இ... மேலும் பார்க்க