செய்திகள் :

பாகிஸ்தானுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்துள்ளது! - விக்ரம் மிஸ்ரி

post image

பாகிஸ்தானுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்துள்ளதாக மத்திய வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் ராணுவத்தினர் நேற்றிரவு ட்ரோன் தாக்குதல் நடத்தியது குறித்து மத்திய வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி, விங் கமாண்டர் வியோமிகா சிங், கர்னல் சோஃபியா குரேஷி ஆகியோருடன் இணைந்து விளக்கமளித்தார்.

பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் நீடித்து வருகிறது.

இதனைத் தொடர்ந்து இரு நாட்டு ராணுவத்தினரும் எல்லையோர மாநிலங்களில் மே 8, 9ஆம் தேதி நள்ளிரவில் ட்ரோன் தாக்குதல் நடத்தினர். பாகிஸ்தானின் தொடர் ட்ரோன் தாக்குதலை, இந்திய வான் பாதுகாப்புப் பிரிவு துல்லிய தாக்குதல் நடத்தி அனைத்தை ட்ரோன்களையும் அழித்தொழித்தது. இதில், பாகிஸ்தான் ட்ரோன்கள் ஜம்மு-காஷ்மீரில் தாக்கியதில் ஒரு குடும்பத்தினர் பாதிக்கப்பட்டனர்.

இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் தாக்குதல் தொடர்பாக வெளியுறவுத் துறைச் செயலர் விக்ரம் மிஸ்ரி, இந்திய ராணுவ கர்னல் சோஃபியா குரேஷி, விமானப் படை விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் புதுதில்லியில் இன்று காலை 10.50 மணியளவில் செய்தியாளர்களிடம் விவரித்தனர்.

இந்த செய்தியாளர் சந்திப்பில் விக்ரம் மிஸ்ரி பேசுகையில், “சூரத்கர், ஆதம்பூரில் தாக்குதல் நடத்தப்பட்டு ஏவுகணை அமைப்பு எஸ்-400 சேதமடைந்தது என்பது முற்றிலும் பொய்யான தகவல். ஜம்மு-காஷ்மீரில் அரசு அதிகாரி பாகிஸ்தானின் தாக்குதலில் காயமடைந்து உயிரிழந்திருக்கிறார்.

மக்கள் வாழும் வசிப்பிடங்கள், குடியிருப்புகளை குறிவைத்து பாகிஸ்தான் தொடர்ந்து தாக்குதல் நடத்திவருகிறது. பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து இந்தியாவை சீண்டி வருகிறது. பாகிஸ்தானின் தூண்டுதலுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்துள்ளது. மேலும், இந்திய ஏவுகணை ஆப்கானிஸ்தானைத் தாக்கியதாகவும் பொதுடா” எனத் தெரிவித்தார்.

உ.பி.: கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சிறுவனின் சடலம் வயலில் இருந்து மீட்பு

ஹத்ராஸில் கைகள், கால்கள் கட்டப்பட்ட நிலையில் 7 வயது சிறுவனின் சடலம் வயலில் இருந்து மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹிமாச்சலப் பிரதேசத்தின் ஹத்ராஸில் தினை வயல் ஒன்றில் இருந்து 7 வயது சி... மேலும் பார்க்க

தில்லியில் 60 உள்நாட்டு விமான சேவைகள் ரத்து!

தில்லி விமான நிலையத்தில் 60 உள்நாட்டு விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளதையடுத்து, ஸ்ரீநகர் மற்றும் சண்டிகர் உ... மேலும் பார்க்க

குடியரசுத் தலைவர் முர்முவின் சபரிமலை பயணம் ரத்து

இந்தியா-பாகிஸ்தான் போர்ப் பதற்றத்தால் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் சபரிமலை பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மே 19ஆம் தேதி சாமி தரிசனம் ச... மேலும் பார்க்க

இந்தியா - பாகிஸ்தான் போர் மூளும்! ஓராண்டுக்கு முன்பே கணித்திருந்தாரா ஜோதிடர்?

இந்தியா - பாகிஸ்தான் இடையே கடுமையான போர் ஏற்படும் என்று கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலேயே பிரபல ஜோதிடர் ஒருவர் கணித்திருப்பதாக வெளியாகும் சமூகவலைதளப் பதிவுகள் திடீரென கவனம் பெற்றிருக்கின்றன. ஜம்மு-காஷ்மீ... மேலும் பார்க்க

வதந்திகளை நம்ப வேண்டாம்.. மக்களை எச்சரிக்கும் முதல்வர் மான்!

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே அதிகரித்துவரும் பதட்டங்களுக்கு மத்தியில் மக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களுடன் பே... மேலும் பார்க்க

இந்தியா - பாகிஸ்தான் மோதல்: பிரதமர் மோடி அடுத்தடுத்து ஆலோசனை

இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் கடுமையான மோதல் நடந்து வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி முப்படைத் தளபதிகள், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோருடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். நேற்று பிரத... மேலும் பார்க்க