செய்திகள் :

பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையே பேர் பதற்றம்: காபூல், கந்தகாரில் பாகிஸ்தான் குண்டுமழை

post image

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே எல்லையில் தொடர்ந்து பதட்டம் நிலவி வருகிறது. பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு ஆப்கானிஸ்தான் ஆதரவு கொடுப்பதாக பாகிஸ்தான் கூறி வருகிறது. அதோடு பாகிஸ்தான் எல்லையில் உள்ள ஆப்கானிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீது பாகிஸ்தான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதல்களுக்குப் பதிலடியாக வியாழன் ஆப்கான் இராணுவம் எல்லையைத் தாண்டி பாகிஸ்தானுக்குள் தாக்குதல் நடத்தியது. இத்தாக்குதலை தொடர்ந்து அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று காலையில் பாகிஸ்தான் ஆப்கானில் உள்ள காபூல் மற்றும் கந்தகார் மீது குண்டுகளை வீசித்தாக்கி இருப்பது மோதலை மேலும் அதிகரித்துள்ளது.

அதோடு ஆப்கானுக்கு எதிராக பாகிஸ்தான் வெளிப்படையான போரை அறிவித்துள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், ''எங்களது பொறுமை எல்லையை தாண்டிவிட்டது. இப்போது ஆப்கானுக்கும் எங்களுக்கும் வெளிப்படையான போர்''என்று குறிப்பிட்டுள்ளார்.

பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான்
பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான்

தாங்கள் நடத்திய தாக்குதலில் ஆப்கான் ராணுவ வீரர்கள் 133 பேர் இறந்திருப்பதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது. அதேசமயம் தங்களது தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 55 பேர் உயிரிழந்து இருப்பதாக ஆப்கான் தெரிவித்துள்ளது. கசாப் லில் ஹக் என்ற பெயரில் பாகிஸ்தான் இத்தாக்குதலை தொடங்கி இருக்கிறது.

காபூலில் குறைந்தது மூன்று இடங்களில் குண்டுவெடிப்புச் சத்தங்கள் கேட்டன, ஆனால் தாக்குதல் நடந்த இடம் அல்லது உயிரிழப்புகள் குறித்து உடனடி தகவல் இல்லை. தலிபான் அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் கூறுகையில், ``பாகிஸ்தான் தெற்கே காந்தஹார் மற்றும் தென்கிழக்கு மாகாணமான பாக்டியாவில் வான்வழித் தாக்குதல்களை நடத்தியது''என்று குறிப்பிட்டுள்ளது.

ஒரு ஆப்கானிய அதிகாரி இது குறித்து கூறுகையில், ``பாகிஸ்தானில் இருந்து திரும்பிய மக்களுக்கான டோர்காம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள முகாமில் பொதுமக்கள் காயமடைந்தனர். பாகிஸ்தான் ஷெல்கள் முகாம்களை தாக்கியுள்ளது, துரதிர்ஷ்டவசமாக எங்கள் அகதிகள் ஏழு பேர் காயமடைந்துள்ளனர், மேலும் ஒரு பெண்ணின் நிலை கவலைக்கிடமாக உள்ளது" என்று தெரிவித்தார். இதையடுத்து எல்லையில் உள்ள முகாம்களில் இருந்து பொதுமக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

ஆப்கானில் ராணுவ முகாம்களை குறிவைத்து தாக்கியதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. இதில் இரண்டு ராணுவ முகாம்கள் அழிக்கப்பட்டதாகவும் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. அதேசமயம் தாங்கள் பாகிஸ்தானின் 19 முகாம்களை அழித்து சில ராணுவ வீரர்களை உயிரோடு பிடித்து இருப்பதாக ஆப்கான் தெரிவித்துள்ளது.

'அறிவாலயத்துல கால் வச்ச உடனே பொள பொளன்னு கண்ணீர்..!' - தவிக்கும் ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள்!

அறிவாலயம் பக்கமாக வண்டியை திருப்பி `தர்மயுத்தத்தை' முடிவுக்கு கொண்டு வந்திருக்கிறார் ஓ.பி.எஸ். 'இனிமே என்னோட உழைப்பு மொத்தமும் உதயசூரியனுக்குதான்!' என ஓ.பி.எஸ் கூறினாலும் அவருடன் வந்த ஆதரவாளர்கள் கொஞ்... மேலும் பார்க்க

ஸ்டாலின் காய் நகர்த்தல்: திமுக-வில் ஓ.பன்னீர்செல்வம்... தென் மாவட்ட கணக்கு கைகொடுக்குமா?

அ.தி.மு.க-வின் முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க-வின் முன்னாள் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம், இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தன்னை முறைப்படி தி.மு.க-வில... மேலும் பார்க்க

"தீய சக்தி திமுக-வை தாய் கழகம் என்று நினைத்து கொண்டு.!"- ஓ.பி.எஸ் குறித்து சசிகலா

அதிமுகவில் மூன்று முறை முதலமைச்சராகவும், 5 முறை எம்.எல்.ஏ வாகவும் இருந்த ஓ.பன்னீர்செல்வம் இன்று (பிப். 27) திமுகவில் அதிகாரப்பூர்வமாக இணைந்திருக்கிறார். ஓபிஎஸ் திமுகவில் இணைந்தது குறித்து சசிகலா தனது ... மேலும் பார்க்க

ஜெயலலிதாவின் தலைமைத் தோற்றம்; கருணாநிதியின் சாமர்த்தியம் - அரசியலை மாற்றியமைத்த தொலைக்காட்சிகள் | 07

தமிழக அரசியலை மாற்றியமைத்த தொலைக்காட்சிகள்! நினைவுச் சுவடுகள் 07இந்திய அரசியலில், ஊடகமும் அரசியலும் மிக நெருக்கமாக இணைந்துள்ள மாநிலங்களில் ஒன்று தமிழ்நாடு. சமூக ஊடகங்கள் வருவதற்கு முன்னரே, அரசியல் தலை... மேலும் பார்க்க

`ஓ.பன்னீர்செல்வம் செய்தது துரோகத்தின் உச்சக்கட்டம்!' - திமுகவில் இணைந்தவரை விளாசும் அதிமுக

அ.தி.மு.க-வில் நீண்டகாலம் முக்கிய பொறுப்புகளை வகித்த ஓ.பி.எஸ்., 2017-ல் ஜெயலலிதா மறைவுக்குப் பின் முதலமைச்சராகப் பதவியேற்றார். அதற்குப்பின் நிலவிய அதிகாரப் போட்டியில் எடப்பாடி பழனிசாமியுடன் ஏற்பட்ட மோ... மேலும் பார்க்க

`இனி எனது உழைப்பு முழுவதும் உதயசூரியன் சின்னத்துக்கே.!' - திமுக-வில் இணைந்த ஓ.பன்னீர்செல்வம்

தமிழக அரசியலில் நிலவி வந்த பல மாத கால யூகங்களுக்கு இன்று முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க-வின் முன்னாள் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம், இன்று சென்னை அண்ணா அறிவ... மேலும் பார்க்க