செய்திகள் :

பாஜக பூத் கமிட்டி: "தமிழக பாஜக செயல்வீரர்களை எண்ணி பெருமைப்படுகிறேன்" - மோடி பாராட்டு; காரணம் என்ன?

post image

தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே இருக்கும் நிலையில், அரசியல் கட்சித் தலைவர்களின் பிரசாரம் தீவிரமாகியிருக்கிறது.

தமிழ்நாட்டில் வெற்றியை உறுதி செய்ய வேண்டும் என தேசிய ஜனநாயகக் கூட்டணி தீவிரமாகச் செயல்படுகிறது. அதன் அடிப்படையில் நாளை காலை 11 மணிக்கு காணொளி மூலம் தமிழக பாஜக பூத் கமிட்டி உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறவிருக்கிறது. இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டு உரையாற்றுகிறார்.

இது தொடர்பாக பிரதமர் மோடி தன் எக்ஸ் பக்கத்தில், ``தி.மு.க-வின் மோசமான நிர்வாகத்தை அம்பலப்படுத்தி, மாநில வளர்ச்சிக்கான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தொலைநோக்குப் பார்வையை விரிவாக எடுத்துரைத்த நமது தமிழக பாஜக செயல்வீரர்களை எண்ணி நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

13 அன்று மாலை நடைபெறும் ‘எனது வாக்குச்சாவடி, வலிமையான வாக்குச்சாவடி கலந்துரையாடல்’ நிகழ்ச்சியின் போது, கடினமாக உழைக்கும் நமது செயல்வீரர்களுடன் நான் உரையாடவிருக்கிறேன்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

அதைத் தொடர்ந்து ஏப்ரல் 15-ம் தேதி கன்னியாகுமரி வருகை தரும் பிரதமர் மோடி, பா.ஜ.க வேட்பாளருக்காகப் பிரசாரம் மேற்கொள்ளவிருக்கிறார்.

நொய்டா போராட்டம்: `பாக்கிஸ்தான் சதி' - அரசு குற்றச்சாட்டு; 2027 தேர்தலை நோக்கித் திரும்பும் அரசியல்

உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் குறைந்த ஊதியம் மற்றும் மோசமான பணிச்சூழலைக் கண்டித்து 40,000-க்கும் மேற்பட்ட தொழிற்சாலை தொழிலாளர்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக வெடித்தது. இந்த விவகாரம் அம்மாநிலத்தி... மேலும் பார்க்க

``பிரதமர் மோடிக்கு இது இறுதி எச்சரிக்கை" - முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் வீடியோ

நாளை மறுநாள் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நடைபெறவிருக்கிறது. இந்தக் கூட்டத்தொடரில் மகளிருக்கான இட ஒதுக்கீடு மசோதா குறித்து விவாதிக்கப்படும் எனக் கூறப்பட்டது. மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட ... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றத்தில் தீபம்; மாநில விழாவாக தைப்பூசம் - வெளியானது பாஜகவின் தேர்தல் வாக்குறுதி

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இன்று (ஏப்ரல் 14) பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. மத்திய அமைச்சரும், முன்னாள் தேசிய தலைவருமான ஜேபி நட்டா 'புதிய யுகம் படைக்கும் தாமரை... மேலும் பார்க்க

`8,000 ரூபாய் கூப்பனில் என்ன வாங்கப் போகிறீர்கள்?’ - வீட்டுக்குள் சென்று நலம் விசாரித்த ஸ்டாலின்

தி.மு.க தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ராணிப்பேட்டையில் நேற்று இரவு தேர்தல் பரப்புரையை முடித்துவிட்டு, அடுத்தகட்ட பரப்புரைக்காக வேலூருக்கு வந்திருக்கிறார். இன்று மாலை 5 மணியளவில், சென்னை-பெங்க... மேலும் பார்க்க

Election 2026: பதவிக்காக பகையாகிறதா அப்பா - மகன் உறவு; தகிக்கும் தமிழக அரசியல் களம்

'தாயும் பிள்ளையும்தான் என்றாலும் வாயும் வயிறும் வேறு' என்பார்கள். தமிழக அரசியல் களத்தில் இந்தப் பழமொழியை இப்போது கொஞ்சம் மாற்றி 'தகப்பனும் பிள்ளையும்' எனச் சொல்லலாம். வடக்கே மறைந்த முலாயம் சிங் யாதவ் ... மேலும் பார்க்க

'ஆணவக் கொலைகளைத் தடுக்க சிறப்பு சட்டம்', 'மகளிருக்கு 50% இட ஒதுக்கீடு' - விசிக தேர்தல் அறிக்கை

தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறவிருப்பதால், அரசியல் கட்சிகள் தீவிரப் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதாக முதலில் தெரிவித்திருந்த திருமா, பிறகு விலகினார... மேலும் பார்க்க