செய்திகள் :

"பாஜக-வின் ஆசியோடு அதிமுக-விடம் திமுக பேசிக்கொண்டிருக்கிறது" - மாணிக்கம் தாகூர்

post image

தவெக ஆட்சியமைக்க திமுக - அதிமுக இணைகிறது... தவெகவில் இணைந்து திமுகவிற்கு காங்கிரஸ் துரோகம் போன்ற பேச்சுகள்... விமர்சனங்கள் எழுந்துகொண்டு இருக்கின்றன.

இந்த நேரத்தில் காங்கிரஸ் மீதான விமர்சனங்களுக்கு தனது எக்ஸ் பதிவில் பதிலளித்துள்ளார் காங்கிரஸ் எம்.பி.மாணிக்கம் தாகூர்.

"தேர்தல் முடிவு வந்த அன்றே ராகுல் காந்தி ஸ்டாலினுக்கும் மம்தா பானர்ஜிக்கும் போன் செய்தார். அடுத்த நாள் காலையிலேயே மம்தாவுக்குப் பகிரங்கமாக ஆதரவும் தெரிவித்தார். வங்காளத்தில் பாஜக 100 இடங்களைத் திருடிவிட்டது என்றும் சொன்னார்.

ஸ்டாலின், ராகுல் காந்தி
ஸ்டாலின், ராகுல் காந்தி

தமிழகத்தில் மக்களின் தீர்ப்பை மதிக்கவும், ஒரு நிலையான ஆட்சி அமையவும், முக்கியமாக என்.டி.ஏ கூட்டணியை வெளியே வைக்கவுமே காங்கிரஸ் கட்சி தவெக-வை ஆதரித்தது.

ஆனால் இப்போது 'கோடி' மீடியாக்களும் (Godi media), திமுக ஆதரவு ஊடகங்களும் காங்கிரஸைக் குற்றம் சொல்கின்றன. நிஜத்தில், பாஜகவின் ஆசியோடு திமுக இப்போது அதிமுக-விடம் பேசிக் கொண்டிருக்கிறது. இது நடைமுறையில் வேறு பெயரில் இருக்கும் என்.டி.ஏ கூட்டணிதான்.

இப்போது சொல்லுங்கள், காங்கிரஸ் கட்சி என்.டி.ஏ ஆட்சிக்கு வர உதவி செய்திருக்க வேண்டுமா?

தவெக ஆரம்பத்திலிருந்தே பாஜக-வுக்கு எதிராகத்தான் இருக்கிறது. காங்கிரஸ் அந்த நிலைப்பாட்டுடன் உறுதியாக நின்றது. இதற்கு மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமே இல்லை".

விஜய்க்கு நிபந்தனையற்ற ஆதரவு அளித்த சிபிஐ! - ஆதரவு கடிதத்தில் உள்ளது என்ன?

நடந்து முடிந்துள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கட்சி தோல்வியைத் தழுவிய நிலையில், த.வெ.க அதிக இடங்களை வென்ற தனிக்கட்சியாக உள்ளது. ஆனாலும் தனிப்பெரும்பான்மை ஆட்சி அமைப்பதற்கான எண்ணிக்கை த.வெ.கவி... மேலும் பார்க்க

TVK: "தவெக மட்டுமே பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும்" - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பேபி பதில்

தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைப்பதற்கு விடுதலைச் சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளின் ஆதரவை நாடி வருகின்றது. இந்த நேரத்தில், ANI-க்குக் கொடுத்த பேட்டியில் மார்க்சி... மேலும் பார்க்க

திமுக - அதிமுக: 'ஜானகி அம்மையாருக்கு கலைஞர் அளித்த பதில்'- விளக்கும் மூத்த பத்திரிகையாளர்

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி சில நாட்கள் கடந்துள்ள நிலையில் அரசியலில் அடுத்தடுத்த அதிரடிகள் அரங்கேறி கொண்டிருக்கின்றன. இந்தத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியா... மேலும் பார்க்க

'காத்திருப்பு; எமோஷன்; கூட்டல் கழித்தல் கணக்குகள்' - எப்படியிருக்கிறது பனையூர்?| Detailed Report

தமிழக அரசியல் களம் பரபரப்பான சூழலை எட்டியிருக்கிறது. பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சியைப் பிடிக்க திரைமறைவில் காய்களை நகர்த்தி பல தரப்பினரும் முயன்று கொண்டிருக்கின்றனர். இரண்டு முறை ஆளுநரை சந்தித்து ஆட... மேலும் பார்க்க

'மக்களவையில் வேற இடம் கொடுங்க, காங்கிரஸுடன் எங்களால்.!'- மக்களவை சபாநாயருக்கு கனிமொழி கோரிக்கை

நடந்து முடிந்துள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கட்சி தோல்வியைத் தழுவிய நிலையில், த.வெ.க அதிக இடங்களை வென்ற தனிக்கட்சியாக உள்ளது. ஆனாலும் தனிப்பெரும்பான்மை ஆட்சி அமைப்பதற்கான எண்ணிக்கை த.வெ.கவி... மேலும் பார்க்க

`உலக நாடுகளுக்கு 10% வரி சட்டத்திற்குப் புறம்பானது' - நீதிமன்ற தீர்ப்பு; மீண்டும் சறுக்கிய ட்ரம்ப்

கடந்த ஏப்ரல் மாதம், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உலக நாடுகளின் மீது பரஸ்பர வரியை அறிவித்தார். வரி அமலாகும் தேதியில் பல நீட்டிப்புகள் இருந்தாலும், ஆகஸ்ட் மாதம் பரஸ்பர வரி அமலுக்கு வந்தது. பரஸ்பர வரியை 'சட்ட... மேலும் பார்க்க