செய்திகள் :

பாலியல் சித்ரவதை: இரண்டரை வயது பெண் குழந்தை மரணத்தில் திடீர் திருப்பம் -சிக்கிய திமுக பிரமுகர்

post image

கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அருகேயுள்ள ஜேசுராஜபுரம் ஊராட்சிக்குஉட்பட்ட கவுண்டன் கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரின்சி (வயது 24). இவரும், ஓசூரில் கட்டட வேலைச் செய்துவந்த திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரைச் சேர்ந்த சூர்யா (28) என்ற இளைஞரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். திருமணத்துக்குப் பிறகு அவர்கள் கீழ்பென்னாத்தூரில் வசித்து வந்தனர். அவர்களுக்கு இரண்டரை வயதில் பெண் குழந்தை இருந்தது. இந்த நிலையில், கருத்து-வேறுபாடு காரணமாக பிரின்சி அவரைப் பிரிந்து குழந்தையுடன் தனது தாய் வீடான கவுண்டன் கொட்டாய்க்கு சென்றுவிட்டார்.

சூர்யாவும், அவ்வபோது சென்று தனது குழந்தையை பார்த்துவிட்டு வருவதையும் வழக்கமாகக் கொண்டிருந்தார். இந்த நிலையில், கடந்த டிசம்பர் 11-ம் தேதி குழந்தைக்கு வலிப்பு வந்ததாகக் கூறி பிரின்சி அஞ்செட்டியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு குழந்தையை தூக்கிச் சென்றார். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை இறந்துவிட்டதாகக் கூறினர். இதையறிந்த சூர்யா, தனது குழந்தையின் சாவில் சந்தேகம் இருப்பதாக அஞ்செட்டி காவல் நிலையத்தில் புகாரளித்தார். `சந்தேக மரணம்’ என போலீஸாரும் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனர்.

தி.மு.க பிரமுகர் பெரியநாயகம்

இந்த நிலையில், குழந்தை இறப்புக்கான பிரேத பரிசோதனை அறிக்கை வெளிவந்தது. அதில், குழந்தையின் உடலில் உள்காயங்கள் இருப்பதாக தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, போலீஸார் தீவிர விசாரணையில் இறங்கியபோது அதிர்ச்சிகர தகவல்கள் வெளிவந்தன. அதாவது, கணவரை பிரிந்து வாழ்ந்துவந்த பிரின்சிக்கும், ஜேசுராஜபுரத்தைச் சேர்ந்த பெரியநாயகம் (40) என்பவருக்கும் திருமணத்தை மீறி தகாத தொடர்பு ஏற்பட்டிருக்கிறது.

பெரியநாயகம், தி.மு.க-வில் இளைஞரணி கிளைச் செயலாளர் பொறுப்பில் இருக்கிறார். பிரின்சி இல்லாத நேரத்தில் பெரியநாயகம் குழந்தைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்திருக்கிறார். இதில், உடல்நலம் பாதிக்கப்பட்டு குழந்தை இறந்தது தெரியவந்தது. இதையடுத்து, தி.மு.க பிரமுகர் பெரியநாயகத்தை கைது செய்த போலீஸார், அவர் மீது `போக்சோ’ பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்தனர். மேலும், அவரை கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தருமபுரி கிளைச் சிறையிலும் அடைத்திருக்கின்றனர்.

'பங்குகள் வாங்கும்போதும், விற்கும்போதும்' - SEBI பெயரில் புது மோசடி; அலர்ட் ஆகுங்க மக்களே!

'பணம் கேட்டால் கொடுக்காதீர்கள்' என்று தங்களது பெயரில் நடக்கும் மோசடி குறித்து அலர்ட் செய்துள்ளது செபி. நேற்று செபி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிட்டுள்ளதாவது..."செபியின் லெட்டர்பேடைப் ப... மேலும் பார்க்க

2 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை, கொலை; சிக்கிய திமுக நிர்வாகி - நயினார் நாகேந்திரனின் கண்டனம்

கிருஷ்ணகிரியில் 2 வயது பெண் குழந்தையை திமுகவின் இளைஞரணி கிளைச் செயலாளர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதில் அந்தக் குழந்தை உயிரிழந்துள்ளது. இந்தச் சம்பவம் தமிழ்நாட்டில் பெரிய அதிர்ச்சியைக் கிளப்பியு... மேலும் பார்க்க

ஓடும் பேருந்தில் பாலியல் தொல்லை - துணிச்சலுடன் போராடி போலீஸிடம் இளைஞரைப் பிடித்து கொடுத்த மாணவி

சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் வசித்து வரும் 19 வயது இளம்பெண் ஒருவர், கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வருகிறார். இவர் தினமும் கல்லூரிக்கு பேருந்தில் செல்வது வழக்கம். 26-ம் தேதி மதியம் கல்லூரி முடிந... மேலும் பார்க்க

கொலை வழக்கு: திமுக முன்னாள் எம்எல்ஏ உட்பட 7 பேருக்கு ஆயுள் சிறை - திருவண்ணாமலை நீதிமன்றம் தீர்ப்பு

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்துள்ள செங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் முனுசாமி. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பெருமாள், இருசப்பன் என்பவர்களுக்கும் இடையே நிலத்தகராறு ஏற்பட்டது. இதுதொடர்பாக பலமு... மேலும் பார்க்க

கும்பகோணம்: ”சார் நீங்க பேட் டச் செய்றீங்க"- கொதித்த மாணவிகள்; அரசுப் பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது

கும்பகோணம் அருகே அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது.இப்பள்ளியில் கருப்பூரைச் சேர்ந்த ராஜமனோகர் (55) என்பவர் 10-ம் வகுப்பு ஆசிரியராகப் பணியாற்றினார். இவர் மாணவிகளுக்குப் பாலியல் ... மேலும் பார்க்க

சென்னை: `நம்ம வீடியோக்களை காட்டிவிடுவேன்' - தொழிலதிபர் மனைவியை ஏமாற்றி 850 கிராம் நகை, பணம் பறிப்பு

சென்னை, புரசைவாக்கம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வடமாநிலத்தைச் சேர்ந்த 35 வயது பெண், தன்னுடைய கணவர், இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவரின் கணவர் தொழிலதிபராக உள்ளார். அதே அடுக்கு... மேலும் பார்க்க