தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம்: சாதனை வெற்றிபெற்ற லைகா தமிழ்குமரன் - பதவியேற...
"பாலிவுட்டில் நான் ஒதுக்கப்படுவதுபோல் உணர்ந்தேன்; அதனால் தான்..!"- பிரியங்கா சோப்ரா
ஹாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வரும் பிரியங்கா சோப்ரா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்தியாவில், ‘வாரணாசி’ படத்தில் நடித்து வருகிறார்.
எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கும் இந்தப் படத்தில் மகேஷ்பாபு ஹீரோவாக நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
இந்நிலையில் ஹாலிவுட்டுக்குச் சென்றது ஏன் என்பது பற்றி பிரியங்கா சோப்ரா பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.

``பாலிவுட்டை விட்டு வெளியேற நான் நினைத்ததில்லை. அங்கு பணிபுரிந்தபோது பல காரணங்களுக்காக நான் ஒதுக்கப்படுவதுபோல் உணர்ந்தேன். அதனால் என் எல்லையை விரிவுபடுத்த நினைத்தேன்.
ஒரு நடிகையாக எனக்கு உற்சாகமாக இருக்கும் வாய்ப்புகளைத் தேடும் ஆசை எனக்கு வந்தது. அமெரிக்காவுக்குச் சென்று நடிக்கத் தொடங்கினேன்.
கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்குப் பிறகு, அற்புதமான படைப்புகளைத் தேர்வு செய்து நடிப்பதற்கான உந்துதலைக் காண்கிறேன். எனக்கு இந்திய படங்கள் மிகவும் பிடிக்கும்.
‘வாரணாசி’மூலம் மீண்டும் திரும்பி வந்ததில் மகிழ்கிறேன். ஹாலிவுட், பாலிவுட் என்று பிரித்துப் பார்க்க விரும்பவில்லை. நான் இரண்டு உலகங்களை கடந்து செல்வதுபோல் உணர்கிறேன்.

இரண்டு துறைகளிலும் பணியாற்றுவதை ரசிக்கிறேன். கலாசாரங்களைப் போலவே, இரண்டும் வெவ்வேறு வழிகளில் வேறுபட்டவைதான். ஆனால் இப்போது என்னால் அங்கும் இங்கும் பணியாற்ற முடியும். இது தனித்துவமான, அற்புதமான விஷயம்" என்று பிரியங்கா சோப்ரா பேசியிருக்கிறார்.



















