செய்திகள் :

"பிள்ளைகளுக்கும், மருமகளுக்கும் சமையல் கற்றுகொடுக்க வேண்டும்" - கேரள முதல்வர் பேச்சால் சர்ச்சை

post image

கேரள மாநில முதல்வர் வி.டி.சதீசன் செங்கன்னூரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் சில தினங்களுக்குமுன் பேசும்போது தாய்மார்களின் சமையல் கைபக்குவம் பற்றி குறிப்பிட்டிருந்தார்.

"தாய்மார்கள் தங்களின் சமையல் கலை மற்றும் சுவையை தங்களது மக்களுக்கும் (பிள்ளைகளுக்கும்), மருமகள்களுக்கும் கற்றுக்கொடுக்க வேண்டும்" என்று அவர் பேசியிருந்தார்.

​சமையல் என்பது பெண்கள் மட்டுமே செய்ய வேண்டிய வேலை இல்லை என்றும், முதல்வரின் இந்த பேச்சு பாலின சமத்துவத்திற்கு எதிரானது என்றும், இதில் பெண் எதிர்ப்புக் கருத்து இருப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்தன.

​இந்த விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் வகையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய வி.டி.சதீசன் கூறுகையில், "தாய்மார்கள் சமையல் குறிப்புகளை பிள்ளைகளுக்கும் மருமகள்களுக்கும் கற்றுக்கொடுக்க வேண்டும் என்று நான் கூறியதில் என்ன பெண் எதிர்ப்பு இருக்கிறது? 'பிள்ளைகள்' என்றால் பெண் பிள்ளைகளை மட்டும்தான் குறிக்குமா? விமர்சிப்பதற்காக மட்டுமே மைக்ரோஸ்கோப் வைத்து ஆராயக் கூடாது. இந்த அளவுக்கு தரம் தாழக்கூடாது.

வி.டி.சதீசன்

என் அம்மா இறந்து 27 ஆண்டுகள் ஆனபோதிலும், அவர் பரிமாறிய உணவின் சுவை இன்னும் என் நாவில் இருக்கிறது. அதனால்தான் நான் அவ்வாறு பேசினேன். என்னை விமர்சிக்க வேண்டும் என்றால் எவ்வளவோ விஷயங்கள் இருக்கின்றன. இல்லாத ஒன்றை ஊதிப்பெருக்கினால், அப்படி பேசுபவர்களின் நம்பகத்தன்மை போய்விடும்" என்றார்.

நிகழ்ச்சியில் பேசிய வி.டி.சதீசன்

மேலும் வக்ஃப் வாரிய பிரச்னை குறித்த கேள்விக்கு பதில் கூறிய வி.டி.சதீசன், "வக்ஃப் வாரிய நியமனப் பிரச்சனையை முந்தைய இடதுசாரி அரசுதான் மோசமாக கையாண்டது. 2024-ம் ஆண்டு ​டிசம்பர் 12-ம் தேதி முந்தைய வக்ஃப் வாரியத்தின் பதவிக்காலம் முடிவடைந்தது. அதைத் தொடர்ந்து பிப்ரவரி 4-ம் தேதி புதிய சட்டம் வருவதற்கு முன்பாகவே மாநில வக்ஃப் வாரியத்தை மறுசீரமைத்திருந்தால், பதவிக்காலம் முடியும் வரை தொடர்ந்திருக்கலாம். ஆனால், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வருவதைத் தவிர்ப்பதற்காக முந்தைய அரசு இந்த நியமனத்தைத் திட்டமிட்டு தாமதப்படுத்தியது" என்றார்.

மதுரை: `எந்த layout வந்தாலும் என்னிடம் அப்ரூவல் வாங்கிய பிறகே அனுமதி'- எம்எல்ஏ கார்த்திகேயன்

மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆலத்தூர் ஊராட்சியில் சுதந்திர தினத்தையொட்டி நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் த.வெ.க சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் கலந்துகொண்டு பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர்: 88 மணி நேர தாக்குதலின் ரகசியங்களை முதன்முறையாக உடைத்த அஜித் தோவல்!

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா நடத்திய 88 மணி நேர ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கை குறித்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (NSA) அஜித் தோவல் முதன்முறையாக விரிவாக பேசியிருக்கிறார். ... மேலும் பார்க்க

சுட்டுக் கொல்லப்பட்ட தமிழர்கள்: ``தமிழ்நாடு அரசு கண்டனம் தெரிவிக்க வேண்டும்" - சிபிஎம் சண்முகம்

கர்​நாடக மாநிலம், சாம்​ராஜநகர் மாவட்​டத்​தில் உள்ள ஹனூர் அரு​கில், காவிரி வனவிலங்கு சரணால​யத்​துக்கு உட்​பட்ட ஷாக்யா வனப்​பகுதி உள்​ளது. நேற்று அதி​காலை 5 மணி​யள​வில் தோமை​யார்​பாளை​யத்தை ஒட்​டி​யுள்ள... மேலும் பார்க்க

அமுதன் கொலை: ``பெற்றோரின் புகாரைப் பெற மறுத்த குற்றச்சாட்டில் உண்மையில்லை" - அமைச்சர் சம்பத் குமார்

கோயம்புத்தூர் மாவட்டம், கோயம்புத்தூர்-பொள்ளாச்சி சாலையில் உள்ள பிரபல கல்வி நிறுவனத்தில் மூன்றாம் ஆண்டு படித்து வந்த மாணவர் அமுதன் தனது நண்பருடன் நடந்துச் சென்றுகொண்டிருந்தபோது அவர்களை வழிமறித்து சக மா... மேலும் பார்க்க

அமுதன் கொலை: ``இதற்கு பிறகும் வாயைத் திறக்காமல் மயக்கத்தில் இருக்குறீர்களே CM sir?"- அப்பாவு காட்டம்

கோயம்புத்தூர் மாவட்டம், கோயம்புத்தூர்-பொள்ளாச்சி சாலையில் உள்ள பிரபல கல்வி நிறுவனத்தில் மூன்றாம் ஆண்டு படித்து வந்த மாணவர் அமுதன் தனது நண்பருடன் நடந்துச் சென்றுகொண்டிருந்தபோது அவர்களை வழிமறித்து சக மா... மேலும் பார்க்க