செய்திகள் :

பி.டி.ஆர், சுந்தர்.சி இருவரையும் முந்திய தவெக வேட்பாளர்; ஸ்டார் தொகுதியில் விசில் பறந்தது எப்படி?

post image

மதுரை மத்திய தொகுதியில் அதிமுக கூட்டணி கட்சியான புதிய நீதிக்கட்சி சார்பில் இயக்குநர் சுந்தர்.சி, திமுக சார்பில் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், தவெக முஸ்தபா, நாதக-வில் அப்துல் ஹக்கீம் ஆகியோர் போட்டியிட்டனர். அதிமுக வேட்பாளராக சுந்தர்.சி அறிவிக்கப்பட்டவுடனேயே, கட்சி நிர்வாகிகளைச் சந்தித்து, தீவிர பிரசாரங்களில் ஈடுபட்டார். ஆனாலும் வெளியூர்க்காரர், நடிகர் என்பதால் எளிதாக அணுக முடியாதோ என்கிற பிரச்னையால் தொகுதி மக்கள் அவருக்கு ஆதரவு தெரிவிப்பதில் தயக்கம் காட்டி வந்தனர். `நான் வெற்றி பெற்றால் மதுரையில்தான் இருப்பேன்' என வீதி வீதியாகப் பிரசாரம் செய்தார் சுந்தர்.சி. இதனால் தொகுதி மக்களிடையே சுந்தர்.சி மீது நம்பிக்கை ஏற்பட்டது

இதுவரை தன்னை எதிர்த்து நிற்கும் வேட்பாளர்கள் குறித்து வாய் திறக்காத பி.டி.ஆர், இந்த முறை சுந்தர்.சியையும் அவருடைய மனைவி குஷ்பவையும் விமர்சிக்கத் தொடங்கினார். இதற்கு பதிலடி கொடுத்து சுந்தர்.சியும் பேச பிரசாரங்கள் சூடுபிடிக்கத் தொடங்கியது.

விஜய்
விஜய்

பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் கட்சி நிர்வாகிகளை மதிப்பதில்லை, பிரசாரங்கள் குறித்து தங்களுக்குச் சொல்வதில்லை என புகார் எழுந்ததோடு, நிர்வாகிகளுக்குள் அடிதடி சம்பவங்களும் நடந்தது. தொகுதியில் சிறுபான்மையினர் வாக்குகள் கணிசமான அளவில் இருப்பதால் தவெக சார்பில் முஸ்தபா போட்டியிட்டார். இவர் செல்லும் இடங்களில் இளைஞர் பட்டாளங்களோடு சென்றது தொகுதியில் பேசு பொருளானது. மேலும் தொகுதி முழுவதும் அடிப்படை வசதிகள் செய்து தரவில்லையென மக்களும் அதிருப்தியில் இருந்தனர். ஆனாலும் இந்தப் பிரச்னைகளெல்லாம் தேர்தலில் எதிரொலிக்காது எனச் சொல்லபட்ட நிலையில், தற்போது வாக்கு எண்ணிக்கையில தவெக முன்னிலை பெற்றிருப்பது அதிமுக, திமுக-வினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாள் அவகாசமா, 24 மணிநேர அவகாசமா? - அன்று எடியூரப்பாவுக்கு நடந்தது என்ன?

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளின்படி, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. சிக்கலில் தவெக..!ஆனால் 118 இடங்கள் இருந்தால் மட்டுமே... மேலும் பார்க்க

‘எந்த கொள்கையை விற்று இன்றைக்கு கோடீஸ்வரனாக இருக்கிறீர்கள்? ’ – டி.ஆர்.பாலுவுக்கு காங்கிரஸ் பதிலடி

தி.மு.க. கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகிய நிலையில், இரண்டு கட்சியினர் இடையே வார்த்தை மோதல் வெடித்துள்ளது. இதனிடையே காங்கிரஸை காட்டமாக விமர்சித்து தி.மு.க. பொருளாளர் டி.ஆர். பாலு ஒரு அறிக்கை வெளியி... மேலும் பார்க்க

'கடந்த காலங்களை போலவே, பாஜக ஆளுநர்களை வைத்து இடையூறு!' - செல்வப்பெருந்தகை

தவெக ஆட்சி அமைப்பதில் இழுப்பறி நீடித்து வரும் நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். "கடந்த காலங்களை போலவே, தமிழ்நாட்டில் மக்க... மேலும் பார்க்க

``ஆளுநர் நல்லவர்தான். ஆனால் பாஜக அரசியல் செய்கிறது!" - மாணிக்கம் தாக்கூர்

தமிழக சட்டமன்ற தேர்தலில் 108 தொகுதிகளில் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் வெற்றி பெற்றிருக்கிறது.118 இடங்கள் இருந்தால் மட்டுமே பெரும்பான்மையுடன் தவெக ஆட்சி அமைக்க முடியும். இந்நிலையில் தான் திமுக கூட்டணியி... மேலும் பார்க்க

`விஜய் முதல்வராவதை தடுத்தால்..!' - ஜல்லிக்கட்டு போராட்டத்தை நினைவூட்டும் காங்கிரஸ் நிர்வாகி

காங்கிரஸ் கட்சியின் தஞ்சாவூர் தெற்கு மாவட்டத் தலைவர் மகேந்திரன். இவர் ராகுல் காந்திக்கு நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பட்டுக்கோட்டை தொகுதி மகேந்திரனுக்கு ... மேலும் பார்க்க

`தி.மு.க-வுக்கு பாயத் தயாராகும் சிறுத்தைகள் டு சாரி கேட்ட செந்தில் பாலாஜி!' | கழுகார் அப்டேட்ஸ்

புலம்பும் கு.ப.கிருஷ்ணன்!"தப்புக்கணக்கு போட்டுட்டோம்"த.வெ.க-வில், முகம் தெரியாத பலரும் வெற்றிபெற்ற நிலையில், லால்குடி தொகுதி வேட்பாளர் கு.ப.கிருஷ்ணனோ தோல்வியைத் தழுவியிருக்கிறார். அ.தி.மு.க முன்னாள் அ... மேலும் பார்க்க