செய்திகள் :

புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலத்திற்கு வாய்ப்பு; தமிழ்நாட்டில் எப்போது வரை மழை? - வானிலை மையம் தகவல்

post image

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியதும் அடுத்தடுத்து உருவான மூன்று புயல்களும் ஆந்திரா நோக்கி நகர்ந்ததால், எதிர்பார்த்த அளவு மழை பெய்யாமல் ஏமாற்றம் ஏற்பட்டது.

இதனால் கடந்த சில நாட்களாகவே வறண்ட வானிலை நிலவி வந்ததது. இந்த நிலையில், தற்போது ஒரு சில இடங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதற்கிடையில் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் வரும் 29-ம் தேதி வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி உருவாகும் என்றும், அது குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறி டிசம்பர் 2-ம் தேதி வாக்கில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழை
மழை

மேலும், சுமார் 1.5 கிலோ மீட்டர் உயரம் வரை குமரிக்கடல் பகுதியிலிருந்து தமிழகம் மற்றும் கேரளம் வழியாக தெற்கு உள் கர்நாடகா வரை ஒரு காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுகிறது. இதன் காரணமாக இன்று திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் தேனி, தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர்,

தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய பலத்த காற்று வீசி மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மழை
மழை

நாளை (சனிக்கிழமை) தேனி மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்; ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யலாம்.

நவம்பர் 28-ஆம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

வானிலை ஆய்வு மையம்
வானிலை ஆய்வு மையம்

நவம்பர் 29-ம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், இதர தென் தமிழகம் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களை ஒட்டிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

மற்ற மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்காலில் பொதுவாக வறண்ட வானிலை நிலவும்.

நவம்பர் 30-ஆம் தேதி வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்; ஏனைய தமிழகத்தில் பொதுவாக வறண்ட வானிலை நிலவும்.

டிசம்பர் 1-ஆம் தேதி கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், கடலோரத்தை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்; மற்ற பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை காணப்படும்.

டிசம்பர் 2-ஆம் தேதி தென் தமிழகம், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், ஏனைய தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

சென்னையில் மழை.
மழை.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை 31 முதல் 32 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 முதல் 25 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் இருந்து எவ்வளவு தூரத்தில் இருக்கிறது அக்வான் புயல்? IMD அப்டேட்!

தற்போது அக்வான் புயல் எங்கு மையம் கொண்டுள்ளது என்ற அப்டேட்டைத் தற்போது வழங்கியுள்ளது இந்திய வானிலை மையம்."தெற்கு வங்கக்கடலின் மத்தியப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ... மேலும் பார்க்க

Winter: பச்சை புல்வெளிகளில் வெள்ளை முத்துக்கள்! ஊட்டியில் தொடங்கியது உறைபனி சீசன் | Photo Album

ஊட்டியில் உறைபனிஊட்டியில் உறைபனிஊட்டியில் உறைபனிஊட்டியில் உறைபனிஊட்டியில் உறைபனிஊட்டியில் உறைபனிஊட்டியில் உறைபனிஊட்டியில் உறைபனிஊட்டியில் உறைபனிஊட்டியில் உறைபனிஊட்டியில் உறைபனிஊட்டியில் உறைபனிஊட்டியில... மேலும் பார்க்க

அக்வான் புயல்: 'சென்னைக்கு கிழக்கே மையம்' - நாளை தீவிர புயலாக மாறுகிறது; எப்போது கரையைக் கடக்கிறது?

வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள அக்வான் புயல் குறித்த இந்திய வானிலை மையத்தின் லேட்டஸ்ட் அப்டேட்..."தெற்கு வங்கக்கடலின் மத்தியப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள 'அக்... மேலும் பார்க்க

'அக்வான்' புயலாக வலுப்பெறும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி: எங்கெல்லாம் மழை? - வானிலை மையம் தகவல்!

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தீவிரமடைந்து ‘அக்வான்’ புயலாக வலுப்பெற உள்ளதால், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித... மேலும் பார்க்க

வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்; நாளை புயலுக்கு வாய்ப்பு; தமிழ்நாட்டிற்குப் பாதிப்பா?

இந்திய வானிலை மையம் தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் குறித்த தற்போதைய அப்டேட்டைக் கொடுத்துள்ளது.இந்திய வானிலை மையம் தனது எக்ஸ் பக்கத்தி... மேலும் பார்க்க

வங்கக்கடலில் உருவாகும் 'அக்வான்' புயல்; தமிழகத்தில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியானது, படிப்படியாக வலுவடைந்து புயலாக வரும் 16ஆம் மாலை மாறும் என வானிலை மையம் தெரிவித்திருக்கிறது. இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம்... மேலும் பார்க்க