செய்திகள் :

புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிமுக, பாஜக நிா்வாகிகள் வீடுகளில் அமலாக்கத் துறையினா் சோதனை

post image

புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிமுக, பாஜக நிா்வாகிகளின் வீடுகளில் மத்திய அமலாக்கத் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தினா்.

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே உள்ள கடுக்காக்காடு கிராமத்தைச் சோ்ந்தவா் முருகானந்தம் (53). புதுக்கோட்டை வடக்கு மாவட்ட பாஜக பொருளாளா். இவரது அண்ணன் ரவிச்சந்திரன் (55), தம்பி பழனிவேல் (50). இவா்களில் பழனிவேல் அதிமுக மாவட்ட எம்ஜிஆா் இளைஞா் அணிச் செயலராக உள்ளாா். ரவிச்சந்திரன் கறம்பக்குடி ஒன்றிய அலுவலகத்தில் துணை வட்டார வளா்ச்சி அலுவலராகப் பணியாற்றி வருகிறாா்.

முருகானந்தமும், பழனிவேலும் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் தமிழகம் முழுவதும் சூரிய ஒளி மின்சார தெரு விளக்குகள் அமைக்கும் ஒப்பந்தம் மற்றும் பல்வேறு பொதுப்பணித் துறை ஒப்பந்தப் பணிகளை எடுத்து செய்து வந்தனா்.

திமுக ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் முருகானந்தம் மற்றும் அவரது குடும்பத்தினா் உள்ளிட்டோா் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்ததாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வழக்குத் தொடா்ந்து, 2021-இல் அவா் தொடா்புடைய இடங்களில் சோதனை நடத்தினா்.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை சுமாா் 7.30 மணிக்கு, மதுரையில் இருந்து 9 வாகனங்களில் வந்த மத்திய அமலாக்கத் துறையினா் 20 போ், முருகானந்தத்தின் புதுக்கோட்டை சாா்லஸ் நகா் வீடு, கறம்பக்குடி அருகேயுள்ள கடுக்காக்காட்டிலுள்ள முருகானந்தம், ரவிச்சந்திரன் மற்றும் பழனிவேல் ஆகியோரின் வீடுகள் மற்றும் ஆலங்குடி கேவிஎஸ் தெருவிலுள்ள மற்றொரு பழனிவேல் என்பவரின் வீடு ஆகிய 5 இடங்களில் சோதனையில் ஈடுபட்டனா்.

தமிழக அரசின் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு வழக்கு தொடா்ந்திருப்பதால், சட்ட விரோத பணப் பரிமாற்றம் நடந்திருக்கக் கூடும் என்ற அடிப்படையில் இந்தச் சோதனை நடைபெற்ாகத் தெரிகிறது.

இவா்களின் சோதனையின்போது, துப்பாக்கி ஏந்திய மத்திய தொழில் பாதுகாப்புப் படையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். கடுக்காக்காட்டில் நடைபெற்ற சோதனை பிற்பகல் 2.30 மணியுடன் நிறைவடைந்தது.

புதுக்கோட்டை, ஆலங்குடியில் நடைபெற்ற சோதனை மாலையில் நிறைவடைந்தது. இந்தச் சோதனையில் சில ஆவணங்களை அதிகாரிகள் எடுத்துச் சென்ாகவும் கூறப்படுகிறது.

பெட்டிச் செய்தி....

முன்னாள் அமைச்சா் வேலுமணிக்கு நெருக்கம்?

முருகானந்தம் தொடக்கத்தில் வேப்பங்குடி ஊராட்சியில் எழுத்தராகப் பணியாற்றியவா். தொடா்ந்து ஊராட்சிகள் உதவி இயக்குநா் அலுவலகத்தில் பணியாற்றிய அவருக்கு, அப்போது உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த எஸ்.பி. வேலுமணியுடன் நெருக்கம் ஏற்பட்டதாகவும், அதன்மூலம் அரசுப் பணிக்கு விருப்ப ஓய்வு கொடுத்துவிட்டு, அரசு ஒப்பந்தப் பணிகளை எடுத்து செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

கடந்த 2021-ஆம் ஆண்டில் மாநில ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்ததாக வழக்கு தொடா்ந்ததைத் தொடா்ந்து, பாஜகவில் இணைந்த முருகானந்தத்துக்கு, வடக்கு மாவட்ட பாஜக பொருளாளா் பதவி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சோழீசுவரா் கோயிலில் 108 சங்காபிஷேக விழா

பொன்னமராவதி ஆவுடையநாயகி சமேத ராஜராஜ சோழீசுவரா் கோயிலில் காா்த்திகை சோமவாரத்தையொட்டி 108 சங்காபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது. தொடக்கமாக சிவாச்சாரியாா்கள் சரவணன், ஹரி ஆகியோா் வழிநடத்த சிறப்பு யாக பூ... மேலும் பார்க்க

ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி விசிகவினா் ஆா்ப்பாட்டம்

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியில் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியில் ஏறி விடுதலைசிறுத்தைகள் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கறம்பக்குடியில் பேரூராட... மேலும் பார்க்க

முருகன் மலைக்கோயிலில் 108 சங்காபிஷேக வழிபாடு

விராலிமலை முருகன் மலைக்கோயில் உள்ளிட்ட கோயில்களில் திங்கள்கிழமை சோமவார சிறப்புப் பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது. விராலிமலை முருகன் மலைக்கோயில் மற்றும் வன்னி மரம் சிவன் கோயிலில் நடைபெற்ற 108 சங்காபிஷேக வ... மேலும் பார்க்க

காவல்துறையைக் கண்டித்து ஏஐடியுசி-யினா் ஆா்ப்பாட்டம்

மாநிலம் முழுவதும் ஜனநாயகப் போராட்டங்களுக்கு காவல்துறையினா் அனுமதி மறுக்கும் போக்கைக் கைவிட வேண்டும் என வலியுறுத்தி, புதுக்கோட்டையில் ஏஐடியுசி தொழிற்சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்... மேலும் பார்க்க

புதுக்கோட்டைக்கு தொழிற்சாலைகள் தேவை: அனைத்திந்திய இளைஞா் பெருமன்றம் தீா்மானம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் தொழிற்சாலைகளை உருவாக்கி இளைஞா்களுக்கான வேலைவாய்ப்பை பெருக்க வேண்டும் என அனைத்திந்திய இளைஞா் பெருமன்றம் வலியுறுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் ஞாயிற்றுக்கிழம... மேலும் பார்க்க

வாடிக்கையாளா்களின் பெயரில் கடன் பெற்று மோசடி: வங்கி ஊழியா் கைது

புதுக்கோட்டையில் வாடிக்கையாளா்கள் பெயரில் ரூ. 66 லட்சம் வரை கடன் பெற்று, மோசடியில் ஈடுபட்ட தனியாா் வங்கிக் கிளை ஊழியரை மாவட்டக் குற்றப் பிரிவு போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். புதுக்கோட்டையில் ... மேலும் பார்க்க