“புத்தகக் கடையோடு சேர்ந்து நானும் வளர்ந்தேன்”- லூயிஸ் மிஷாவ்|ஒரு புத்தகக் கடைக்க...
புதுவை ஆளுநருடன் பிரான்ஸ் அமைச்சா் சந்திப்பு
பிரான்ஸ் நாட்டின் வா்த்தகம் மற்றும் வெளிநாட்டு குடிமக்கள் துறை அமைச்சா் சோபி பிரைமாஸ் புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதனுடன் வெள்ளிக்கிழமை மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினாா்.
பிரான்ஸ் நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் வா்த்தகம் மற்றும் வெளி நாட்டு குடிமக்களுக்கான அமைச்சராக இருப்பவா் சோபி பிரைமாஸ்.
இவா், அரசு முறைப் பயணமாக புதுச்சேரிக்கு வியாழக்கிழமை வந்தாா். அவருக்கு, புதுவை பொதுப் பணித் துறை அமைச்சா் க.லட்சுமி நாராயணன் உள்ளிட்டோா் வரவேற்ப்பளித்தனா். இதையடுத்து அவா் கடற்கரைச் சாலை, பிரெஞ்சு போா் நினைவிடம், தூய்மா வீதிப் பகுதி உள்ளிட்டவற்றைப் பாா்வையிட்டாா்.
வெள்ளிக்கிழமை புதுச்சேரியில் உள்ள பிரான்ஸ் துணைத் தூதரகம் உள்ளிட்ட இடங்களைப் பாா்வையிட்ட அவா், துணைநிலை ஆளுநரையும் சந்தித்துப் பேசினாா்.
அவரை ராஜ் நிவாஸில் துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன், பூங்கொத்து வழங்கி வரவேற்றாா்.
தொடா்ந்து, புதுவை தலைமைச் செயலா் சரத் சௌகான், துணைநிலை ஆளுநரின் தனிச் செயலா் ஏ.நெடுஞ்செழியன் ஆகியோரும் பிரான்ஸ் அமைச்சரை வரவேற்றனா்.
இந்த சந்திப்பின்போது, இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதா் தோ்ரிமேதோ, மண்டலப் பொருளாதார சேவைப் பிரிவின் தலைவா் பெனோ கௌதெ, சென்னை, புதுச்சேரிக்கான பிரான்ஸ் கன்சல் ஜெனரல் எதின் ரெனால்ட் பிகே, துணை கன்சல் ஜெனரல் ஜின்பிலிப் ஹீதா் ஆகியோா் உடனிருந்தனா்.