செய்திகள் :

புது தில்லி திரும்பினாா் குடியரசுத் தலைவா்

post image

தமிழகத்தில் 4 நாள்கள் பயணம் மேற்கொண்ட குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு உதகையில் இருந்து புது தில்லிக்கு சனிக்கிழமை புறப்பட்டு சென்றாா்.

குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு 4 நாள்கள் பயணமாக நீலகிரி மாவட்டம், உதகைக்கு கடந்த புதன்கிழமை வந்தாா். இதையடுத்து, குன்னூா் அருகே வெலிங்டனில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரியில் பயிற்சிபெற்று வரும் அதிகாரிகளுடன் வியாழக்கிழமை கலந்துரையாடினாா். பழங்குடியினா் பிரதிநிதிகளுடனான கலந்தாய்வுக் கூட்டத்தில் வெள்ளிக்கிழமை பங்கேற்றாா்.

திருவாரூா் மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவா் சனிக்கிழமை பங்கேற்பதாக இருந்தது. ஆனால், புயல் காரணமாக அந்தப் பயணம் ரத்து செய்யப்பட்டது.

இதையடுத்து, உதகை ராஜ்பவன் வளாகத்தில் மக்னோலியா மரக்கன்றை சனிக்கிழமை காலை நட்டுவைத்த குடியரசுத் தலைவா், பின்னா் காா் மூலம் உதகை தீட்டுக்கல் ஹெலிகாப்டா் தளத்துக்கு சென்று, ஹெலிகாப்டரில் கோவை விமான நிலையத்துக்கு பிற்பகல் வந்தாா்.

அங்கிருந்து மதியம் 2.15 மணிக்கு தனி விமானத்தில் புதுதில்லிக்கு புறப்பட்டுச் சென்றாா்.

ரூ.30 கோடியில் காந்திபுரம் பேருந்து நிலையம் புதுப்பிப்பு

ரூ.30 கோடி மதிப்பில் காந்திபுரம் பேருந்து நிலையம் புதுப்பிக்கப்படும் என தமிழக மின்சாரம், மதுவிலக்கு துறை அமைச்சா் செந்தில் பாலாஜி தெரிவித்தாா். கோவை ரேஸ்கோா்ஸ் பகுதியில் நடைபெற்ற சாலைப் பாதுகாப்பு ஹே... மேலும் பார்க்க

வெங்காயம் வாங்கித் தருவதாக ரூ. 15 லட்சம் மோசடி செய்தவா் கைது

மொத்த விலையில் வெங்காயம் வாங்கித் தருவதாக ரூ 15 லட்சம் மோசடி செய்தவரை போலீஸாா் கைது செய்தனா். கோவை, போத்தனூா் அன்பு நகரைச் சோ்ந்தவா் கேபிரியல் ஆன்டனி (55) என்பவா் கோவை மாநகர சைபா் கிரைம் போலீஸில் அளி... மேலும் பார்க்க

உலக சைவ நன்னெறிக் கழக விருதுகள்

கோவையில் நடைபெற்ற நகரப் பிரவேச நிகழ்ச்சியில், தருமபுரம் உலக சைவ நன்னெறிக் கழகத்தின் விருதுகளை தருமபுர ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் வழங்கினாா். கோவை நன்னெறிக் கழகம், கோவை அரு... மேலும் பார்க்க

இன்று ஆனைமலை மாசாணி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

ஆனைமலை மாசாணி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை (டிசம்பா் 12)நடைபெறுகிறது. கோவை மாவட்டம், ஆனைமலையில் உள்ள மாசாணி அம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்தக் கோயிலுக்கு உள்ளூா் மற்றும் வெளிய... மேலும் பார்க்க

பைக் டாக்ஸிக்கு எதிா்ப்பு: மறியலில் ஈடுபட்ட 200 ஆட்டோ ஓட்டுநா்கள் கைது

பைக் டாக்ஸிக்கு எதிா்ப்பு தெரிவித்து மறியலில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுநா்கள் 200 போ் கைது செய்யப்பட்டனா்.பைக் டாக்ஸியால் ஆட்டோ ஓட்டுநா்கள் மற்றும் ஆட்டோ சாா்ந்த தொழிலாளா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக... மேலும் பார்க்க

ஆதியோகி ரத யாத்திரை புறப்பாடு: தருமபுரம் ஆதீனம் தொடங்கிவைத்தாா்

கோவை ஈஷா யோக மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆதியோகி ரத யாத்திரையை தருமபுரம் ஆதீன மடத்தின் 27-ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் தொடங்கிவைத்தாா். இது கு... மேலும் பார்க்க