செய்திகள் :

பெயர் மாற்றம்: ஸ்டாலின் அறிவித்தார்; விஜய் நிறைவேற்றுவாரா? காத்திருப்பில் வேலூர் காவலர் பயிற்சிபள்ளி

post image

புதிதாக தேர்தெடுக்கப்படும் காவலர்களுக்கு சட்ட அறிவு பயிற்சிகள் முதல் அவர்களுக்கு தேவையான அடிப்படை பயிற்சிகள் வரை வழங்கும் பணியினை காவலர் பயிற்சி பள்ளிகள் மேற்கொண்டு வருகின்றன. தமிழகத்தில் உள்ள காவலர் பயிற்சி பள்ளிகளில் பழைமையான பயிற்சி பள்ளி, வேலூரில் அமைந்துள்ளது. வேலூர் கோட்டை வளாகத்தின் உள்ளே அமைந்திருக்கும் இந்த பயிற்சி பள்ளி சுமார் 130 ஆண்டுகள் பழைமை வாய்ந்ததாகும். 1896 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் காவலர்களை தேர்ந்தெடுத்து பயிற்சி அளிக்கும் பள்ளியாக இது செயல்பட தொடங்கியது. பின்னாளில் தமிழ்நாடு போலீஸ் அகாடமியின் கீழ் நிரந்தர காவலர் பயிற்சி பள்ளியாகச் செயல்பட தொடங்கியது. 130 ஆண்டுகளில் 24 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்களுக்குப் பயிற்சி அளித்த பள்ளி என்ற பெருமையும் இந்தக் காவலர் பயிற்சி பள்ளிக்கு உண்டு. 

வீரமங்கை வேலுநாச்சியார் பெயர் சூட்டப்படும்!

இப்படி வரலாற்று சிறப்பு வாய்ந்த இந்தக் காவலர் பயிற்சி பள்ளிக்கு வீரமங்கை வேலுநாச்சியார் பெயர் சூட்டப்படும் என 19.09.2025 அன்று அப்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

அந்த அறிவிப்பில், “இந்தியாவின் விடுதலைக்காகப் போராடிய முதல் பெண் போராளி - ஆங்கிலேயர்களை வெற்றி கொண்ட வீரமங்கை வேலுநாச்சியாரின் திருவுருவச் சிலையை கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் திறந்து வைத்தேன். இந்த மகிழ்ச்சிமிகு நாளில், வேலூரில் உள்ள காவல் பயிற்சி பள்ளிக்கு வீரமங்கை வேலுநாச்சியாரின் பெயர் சூட்டப்படும் எனப் பெருமிதத்துடன் அறிவிக்கிறேன்.” எனக் குறிப்பிட்டு இருந்தார். இந்த அறிவிப்பு பொது மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக முதன் முதலில் ஆங்கிலேயருக்கு எதிராக சிப்பாய் புரட்சி நடந்த பகுதி வேலூர் கோட்டை என்பதால், வேலூர் மக்களிடமும் இந்த அறிவிப்பு வரவேற்பைப் பெற்றது. 

இன்னும் பெயர் பலகைகூட வைக்கவில்லை

கடந்த ஆட்சியில் முதல்வர் அறிவித்து 8 மாதங்கள் ஆகியும் தற்போது வரை வேலூர் காவலர் பயிற்சி பள்ளிக்கு வீரமங்கை வேலுநாச்சியார் பெயர் சூட்டிய பெயர் பலகை வைக்காமல் இருக்கின்றனர். தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு த.வெ.க ஆட்சி அமைந்துள்ளது. த.வெ.க-வின் கொள்கை தலைவர்களில் ஒருவராக வீரமங்கை வேலுநாச்சியார் உள்ளார். இந்நிலையில் முதல்வர் விஜய் தலைமையிலான த.வெ.க அரசு, தங்களுடைய கொள்கை தலைவரான வேலு நாச்சியாருக்கு பெருமை சேர்க்கும் வகையில் அவரின் பெயர் பொறிக்க நடவடிக்கை எடுக்குமா என்ற கேள்வி எழுகிறது. 

அதிகாரிகள் பதில் 

இது குறித்து வேலூர் காவலர் பயிற்சி பள்ளியின் டி.எஸ்.பி நிலவழகனிடம் கேட்டபோது, “இதற்கான அரசாணை அண்மையில்தான் எங்களுக்கு கிடைத்தது. வேலு நாச்சியார் பெயர் சூட்டிய பலகை வடிவமைக்கப்பட்டு வருகிறது. வடிவமைத்த பெயர் பலகையை உயர் அதிகாரிகளின் ஒப்புதலுக்கு அனுப்பி உள்ளோம். அனுமதி பெற்ற உடன், இந்த வார இறுதிக்குள் வீரமங்கை வேலுநாச்சியார் பெயர் சூட்டிய பெயர் பலகை பொருத்தப்படும்.” என்றார். 

அதிமுக-வில் மிதுனுக்கு முக்கிய பொறுப்பு? நிர்வாகிகள் வலியுறுத்தல்; கவனம் பெற்ற கே.பி முனுசாமி பேச்சு

தேர்தல் தோல்விக்கு பின்னர், கட்சியின் நிர்வாகிகளை மாவட்ட வாரியாக சந்திக்க அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டு இன்று காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகளை சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவல... மேலும் பார்க்க

'ஆபரேஷன் இரட்டை இலை' - மதுராந்தகத்தில் ர.ர-க்களின் பிரமாண்ட இணைப்பு விழா; தவெக போடும் ஸ்கெட்ச்!

அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் சிலர் இன்று பனையூரில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் முன்னிலையில் தவெகவில் இணைந்திருந்தனர். கடந்த வாரம்தான் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, எம்.சி.சம்... மேலும் பார்க்க

ஈரான்: "24 மணிநேரத்தில் போர் நிறுத்த ஒப்பந்தம் இறுதி செய்யப்படும்" - பாகிஸ்தான் பிரதமர் அறிவிப்பு

ஈரான் போர் முடிவுக்கு வருகிறது. போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதில் இருந்து நீண்ட நாள்களுக்குப் பிறகு, இரண்டு நாள்களுக்கு முன், ஈரானும், அமெரிக்காவும் மாறி மாறி தாக்கிக் கொண்டன. தாக்குதலுக்குப் பிறகு, அ... மேலும் பார்க்க

'விஜயதாரணி, பச்சைமால், பாலகங்கா...' - தவெகவில் இணைந்த மாற்றுக் கட்சி நிர்வாகிகளின் இன்றைய லிஸ்ட்!

தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தமிழக வெற்றிக் கழகத்தில் மாற்றுக் கட்சியினர் பலர் தொடர்ந்து இணைந்து வருகின்றனர். இதை முதன் முதலில் தொடங்கி வைத்தவர்கள் அதிமுக அதிருப்தி எம்.எல்.ஏக்களான இசக்கி சுப்பையா, ... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி நகர்மன்றக் கூட்டம்: முன்னாள் முதல்வர்களின் படங்களை வைக்க போட்டிப் போட்ட திமுக - அதிமுக!

கிருஷ்ணகிரி நகராட்சிக் கூட்ட அரங்கத்தில் முன்னாள் முதல்வர்களின் படங்களை வைப்பது தொடர்பாக திமுக-அதிமுக உறுப்பினர்களிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் நகர்மன்றத்தில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. அதேநேரம், இந்த... மேலும் பார்க்க

"வழிமுறை தெரியாது..": நழுவும் தலைமை மருத்துவர் : மரங்களை வெட்டிய தேவகோட்டை அரசு மருத்துவமனை

" பிள்ளைகளைப்போல வளர்த்தோம்..!"சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை பி.எஸ்.எஸ். சாத்தப்ப செட்டியார் அரசு மருத்துவமனை வளாகத்தில் பல ஆண்டுகளாக நிழல் தந்து வந்த மரங்கள் திடீரென வெட்டிச் சாய்க்கப்பட்ட சம்பவம், தே... மேலும் பார்க்க