செய்திகள் :

பெரம்பலூர்: கல்குவாரியில் வாலிபர் கல்லால் அடித்துக் கொலை; குற்றவாளிகளைத் தேடும் போலீஸ்!

post image

பெரம்பலூர் மாவட்டம், நெடுவாசல் நடுத்தெருவைச் சேர்ந்தவர் தமிழரசன் மகன், வெற்றிவேல் (வயது: 27). துபாயில் வேலை பார்த்து வந்த இவர், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சொந்த ஊருக்கு வந்துள்ளார். நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தி வந்துள்ளார். இந்த நிலையில், வயலுக்குச் செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்ற வெற்றிவேல், மாலை வரை வீடு திரும்பவில்லை. இந்தச் சூழலில், நெடுவாசல் கிராமத்தில் செயல்படாமல் உள்ள கல்குவாரியின் கீற்று கொட்டகையில் வெற்றிவேல் கல்லால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்ததாக பெரம்பலூர் மாவட்டம், கவுல்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சரவணன் என்பவர் வெற்றிவேலின் தாயார் தனலெட்சுமிக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

வெற்றிவேல்

அதன் பேரில் வெற்றிவேலின் குடும்பத்தினர், உறவினர்கள் சம்பவம் நடந்த இடத்தில் திரண்டனர். அதோடு, தகவல் தெரிவித்த சரவணனுக்கு, வெற்றிவேல் எப்படி இறந்தார் என்பது தெரியாமல் இருக்காது எனக்கூறி சரவணனை சரமாரியாகத் தாக்கினர். மேலும், மருவத்தூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். இது குறித்து, போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். கொலை செய்யப்பட்ட இளைஞரின் உடலை உடற்கூறாய்வு மேற்கொள்வதற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கல்குவாரியில் இளைஞர் ஒருவர் கொலைசெய்யப்பட்டுள்ள சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

புதுச்சேரி: `குற்றத்துக்கு முன்பே சட்ட ஆலோசனை பெறும் ரௌடிகள்'... தலைவிரித்தாடும் `கொலை' கலாசாரம்!

குற்றவாளிகளுக்குத் துணை நிற்கும் சட்டப் பிரிவுகள்புதுச்சேரி மாநிலத்தை ஒட்டியிருக்கும் விழுப்புரம், கடலூர் மாவட்டங்களின் பரப்பளவு தலா சுமார் 3,700 சதுர கிலோமீட்டர்கள். அதேசமயம் காரைக்கால், மாஹே, ஏனாம் ... மேலும் பார்க்க

கவின்: `ஒரு பெண்ணை விரும்பினாங்கிறதுக்காக எங்க பிள்ளைய இப்படிக் கொல்லணுமா?' - பெற்றோர் போராட்டம்!

தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்தவர் கவின் செல்வகணேஷ். இவர், நெல்லையைச் சேர்ந்த மாற்றுச் சமூகத்தைச் சார்ந்த பெண்ணை காதலித்ததால் கடந்த 2025-ம் ஆண்டு ஜூலை 27-ம் தேதி வெட்டிக் கொலை செய்யப்... மேலும் பார்க்க

புதுச்சேரி: `என் அம்மா போல இருக்கீங்க!’ -`லிஃப்ட்’ தந்து பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்

புதுச்சேரியைச் சேர்ந்த 50 வயது பெண் ஒருவர் கீரை விற்கும் வியாபாரம் செய்து வருகிறார். கீரைகளை மொத்தமாக வாங்கி கூடையில் சுமந்து, தினமும் நடந்து சென்று கீரைகளை விற்று பிழைப்பு நடத்துபவர் அவர். அதன்படி நே... மேலும் பார்க்க

பாபநாசம்: மணல் கடத்தலைத் தடுக்கச் சென்ற எஸ்.எஸ்.ஐ; டிராக்டர் மோதியதில் காயம்!

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே உள்ள மெலட்டூர், கோடுகிழி பகுதியில் விதியை மீறி இரவு நேரத்தில் டிராக்டரில் மணல் கடத்தப்படுவதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது. மெலட்டூர் காவல் நிலையத்தில் சிறப்பு... மேலும் பார்க்க

குடியாத்தம்: யானை தந்தங்களைக் கடத்திய 3 பேர் கைது - வனத்துறையினர் தீவிர விசாரணை!

ஆந்திர மாநிலத்தில் இருந்து வேலூர் மாவட்டம், குடியாத்தம் வழியாக சட்டத்துக்குப் புறம்பாக யானை தந்தங்கள் கடத்தி வரப்படுவதாக குடியாத்தம் வனச்சரக அலுவலகத்துக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, வனத்துற... மேலும் பார்க்க

வயதை மறைத்து ஆன்லைனில் நட்பு: உண்மை தெரிந்ததும் பிளாக் செய்த சிறுமி... தேடி அமெரிக்கா சென்றவர் கைது!

மும்பையைச் சேர்ந்த பிரீத் பங்கஜ் ஜெயின்(31) என்பவருக்கு மைனர் பெண் ஒருவருடன் சமூக வலைத்தளம் மூலம் தொடர்பு ஏற்பட்டது. சமீபத்தில் அப்பெண்ணுக்கு பிரீத் பங்கஜ் ஜெயின் வயது குறித்த உண்மை தெரிய வந்தது. உடனே... மேலும் பார்க்க