செய்திகள் :

'பெரம்பூரில் 52 வயது; திருச்சி கிழக்கில் 51 வயது!' - வேட்புமனுவில் குழப்பிய விஜய்?

post image

தவெக தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். இரண்டு தொகுதிகளிலும் தாக்கல் செய்திருக்கும் வேட்புமனுக்களில் வெவ்வேறு வயதை விஜய் குறிப்பிட்டிருப்பது இப்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பெரம்பூர் வேட்புமனு
பெரம்பூர் வேட்புமனு

தவெக தலைவர் விஜய் கடந்த மார்ச் 30 ஆம் தேதி பெரம்பூரில் வேட்புமனுவை தாக்கல் செய்திருந்தார். அந்த வேட்புமனுவில் தனக்கு 52 வயது என்றும் தன் மீது எந்த வழக்குகளும் இல்லை என்று விஜய் குறிப்பிட்டிருந்தார். ஆனால், விஜய் நேற்று திருச்சி கிழக்கில் தாக்கல் செய்த வேட்புமனுவில் அவருக்கு வயது 51 என்றும் தன் மீது மதுரை மாநாடு மற்றும் பெரம்பூர் பிரசாரத்தின் போது பதிவு செய்ப்பட்ட இரண்டு வழக்குகளும் உள்ளதாக குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த இரண்டு வேட்புமனுக்களும் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மூன்றே நாளில் எப்படி ஒரு வயது குறையும் என கேள்வியும் எழுப்பி வருகின்றனர்.

திருச்சி கிழக்கு வேட்புமனு
திருச்சி கிழக்கு வேட்புமனு

இதுபற்றி விஜய் தரப்பில் விசாரிக்கையில் வேட்புமனுவை தாக்கல் செய்ய 6 ஆம் தேதி வரை நேரம் இருப்பதால் அதற்குள் தாக்கல் செய்திருக்கும் வேட்புனுவில் திருத்தங்களை செய்து ஒப்படைப்போம் அல்லது புதிய வேட்புமனுவை தாக்கல் செய்வோம் என்கின்றனர்.

கரூர்: "சட்டை அவரோடது தான்; ஆனால், மாப்பிள்ளை அவரில்லை.!" - திமுக வேட்பாளரை கிண்டல் செய்த அண்ணாமலை

கரூர், வெங்கமேடு பகுதியில் அதிமுக வேட்பாளர், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை ஆதரித்து பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பிரச்சாரம் செய்தார்.இதில் அதிமுக, பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள... மேலும் பார்க்க

பிரசாரத்துக்கு விடுமுறை எடுக்கும் விஜய் - கவலையில் தவெக வேட்பாளர்கள்?

சட்டமன்றத் தேர்தலுக்கான பிரசாரம் ஓய இன்னும் சரியாக 10 நாட்களே இருக்கிறது. எல்லா கட்சித் தலைவர்களும் அதிகமான தொகுதிகளை கவர் செய்ய சுற்றி சுழன்று ஓடிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், தவெக தலைவர் விஜய் மட்டு... மேலும் பார்க்க

தமிழக உள்துறை செயலாளர் மாற்றம்: தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு!

வருகிற தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலையொட்டி, தமிழ்நாட்டில் தலைமை செயலாளர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளை மாற்றி வருகிறது இந்திய தேர்தல் ஆணையம்.அதன் ஒரு பகுதியாக, இப்போது தமிழ்நாடு உள்துறை செயலாளர் மாற்றப்பட்டுள... மேலும் பார்க்க

"பா.ஜ.க-வுக்கு பன்முகம் கிடையாது, கோர முகம் தான் இருக்கிறது"- செல்வபெருந்தகை கடும் தாக்கு!

கன்னியாகுமரி மாவட்டத்தில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் கிள்ளியூர் வேட்பாளர் ராஜேஷ்குமார், குளச்சல் வேட்பாளர் தாரகை கத்பர்ட், விளவங்கோடு வேட்பாளர் டி.டி.பிரவீன் ஆகியோரை ஆதரித்து தமிழக காங்கிரஸ் தலைவ... மேலும் பார்க்க

முழுமையாக திறக்கப்படாத ஹார்முஸ் ஜலசந்தி - ஈரான் 'இதை' மறந்ததே காரணம்!

மூன்று நாள்களாக ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்பட்டுள்ளது.இருந்தும் ஈரான் அனுமதித்த கப்பல்கள் மட்டும் ஹார்முஸைக் கடந்து வருகிறது‌.ஆனால், அந்தக் கப்பல்களையும் வழக்கமான பாதையில் அல்லாமல், ஹார்முஸிலேயே வேறு பா... மேலும் பார்க்க

TVK Vijay: "அனைவரும் களத்தில் இறங்கி பணியாற்றுங்கள்.!"- தவெக தலைவர் விஜய் வேண்டுகோள்

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் தனித்து போட்டியிட இருக்கிறார். இந்நிலையில் தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்க... மேலும் பார்க்க